ஓமவல்லி.. அடுத்து அகத்திக்கீரை, அப்பறம் அருகம்புல், கூடவே கருந்துளசி.. தொண்டை வலியை போக்கும் இலைகள்
சென்னை: சளி, இருமல், தலைபாரம், சைனஸ் போன்ற தொந்தரவுகளுக்கு தீர்வை தரும், எளிமையான மருத்துவ மூலிகைகள் என்னென்ன தெரியுமா?
முதலில் தூதுவளை இலைகளை எடுத்து கொண்டால், உடலில் சுவாச கோளாறுகள் இல்லாவிட்டாலும்கூட, வெறுமனே தண்ணீரில் தூதுவளை இலைகளை போட்டு காய்ச்சி குடித்துவந்தால், சளி, காய்ச்சல் எப்போதுமே நம்மை நெருங்காது.

தூதுவளை: தூதுவளை சாற்றில், மிளகுத்தூள் கலந்து குடிக்கும்போது, சளி தொல்லையிலிருந்து விடுபடுவதுடன், பசி உணர்வு தூண்டிவிடப்படும். உடலின் நச்சுக்களும் வெளியேறும்.
தூதுவளை இலைகளையும் சுவாச கோளாறுகளுக்கு பயன்படுத்தலாம்.. இந்த இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கும்போது, இருமல் கட்டுக்குள் வரும்.. அல்லது தூதுவளை இலையை கழுவி, வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.. அல்லது ஆவி பிடித்தாலும், தலைபாரம், நீர் கோர்த்தல், தலைவலி, மூக்கடைப்பு நீங்கும்..
கருந்துளசி: ஆயுர்வேத மருத்துவத்தில் தவிர்க்க முடியாதது துளசி இலைகள்... ஜலதோஷம், இருமலுக்கு எதிராக உடலின் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க செய்கிறது.. இருமலை போக்குவதுடன், தொற்றுகளின் வீரியத்தை துளசி இலைகள் குறைக்கின்றன.. சுவாச பாதைகளையும் துளசி சுத்தமாக்குகிறது.. வெறும் வயிற்றில் நான்கைந்து துளசி இலைகளை மென்று சாப்பிடும்போது, சளி, இருமல் தொற்றுகளிலிருந்து விடுபடலாம். அல்லது துளிசியில் டீ தயாரித்து குடிக்கலாம்.
ஆனால், துளசி இலைகளை வெறுமனே மென்று சாப்பிடக்கூடாது. ஏனென்றால், இந்த இலைகளில் அதிக அளவு பாதரசம், இரும்புச்சத்து நிறைந்திருக்கின்றன.. இதனால் பற்களும் சிதைந்துவிடும்.. எனவே, லேசாக மென்று விழுங்க வேண்டும்..
அதேபோல அகத்திக்கீரையிலிருந்து சாறு எடுத்து, பயன்படுத்தலாம்.. அகத்திக்கரை மற்றும், அகத்திப்பூ இரண்டிலுமே சாறு எடுத்து, அதில், தேன் கலந்து குடிக்கும்போது, தொடர் தும்மல் கட்டுக்குள் வரும்.
அருகம்புல்: அருகம்புல்லை இடித்து சாறு எடுத்து, வெறும் வயிற்றில் குடித்தாலும், சளி, இருமல் சைனஸ் நீங்கும். சீந்தில் இலைகளையும் ஜலதோஷத்துக்கு பயன்படுத்தலாம்.. பனியால் ஏற்படும் அலர்ஜி, சளி, இருமலை கட்டுப்படுத்துகிறது இந்த சீந்தில் இலைகள்.. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்கிறது.. ஏராளமான பயன்தரும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இந்த இலையில் உள்ளதால், தொடர் இருமலை போக்கி, தொண்டை வலியையும குறைக்கிறது இந்த சீந்தில் இலைகள்.
ஆடாதொடை இலையை தூள் செய்து, தேன் கலந்து சாப்பிட்டாலும் சளித்தொல்லை நீங்கும்.. அதேபோல அவரை இலைகளிலிருந்து சாறு எடுத்து, நெற்றியில் பற்று போட்டால், தலைவலி, தலைபாரம், சைனஸ் தொல்லைகள் தீரும்.
ஓமவல்லி: ஓமவல்லி இலைகளை கற்பூரவல்லி என்றும் சொல்வார்கள்.. வைட்டமின் C , A போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.. நுரையீரலின் நண்பன் என்றே இதற்கு பெயர்.. சளி, இருமல், கபம், வறட்டு இருமல், தொண்டை கரகரப்பு, மூக்கடைப்பு போன்ற அனைத்துவகையான சுவாச கோளாறுகளை இந்த ஓமவல்லி இலைகள் தீர்க்கின்றன.
இந்த இலையின் சாறு எடுத்து, சர்க்கரை கலந்து நெற்றியில் பற்றுப்போட்டால், ஜலதோஷம், தலைவலி நீங்கும். தலையில் நீர் கோர்த்துவிட்டால், ஓமவல்லி இலையை அரைத்து, தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும் இதில், ஏலக்காய், கிராம்பு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து 3 நாள் தினமும் 2 வேளை குடித்தால் தலை பாரம், தலையில் நீர்கோர்த்தல், சளி, இருமல் பிரச்சனை தீரும்.. இந்த இலையில் ஆவி பிடித்தால் சுவாசத்தில் நிவாரணம் கிடைக்கும்.
கெட்டி சளி: குழந்தைகளுக்கும், இந்த ஓமவல்லி இலை சாறு தரலாம். ஒரே ஒரு சிற்றிலையை நெருப்பில் வாட்டி, கையால் கசக்கி சாறு எடுத்து வடிகட்டி சங்கில் ஊற்றி சர்க்கரை அல்லது தேன் கலந்து தந்தால், குழந்தைகளின் கெட்டிப்பட்ட சளி கரைந்துவிடும்.. அஜீரணம், சளி, இருமலும் தீரும்.
வெற்றிலை: இந்த லிஸ்ட்டில் வெற்றிலையையும் சேர்த்து கொள்ளலாம்.. மார்புச்சளி, நுரையீரல் அடைப்பு, ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், வெற்றிலையில், கடுகு எண்ணெயை சிறிது தடவி சூடாக்கி மார்பின்மீது வைத்தால், தீர்வு கிடைக்கும்..
அல்லது 2 கப் நீரில் சில வெற்றிலையையும், ஏலக்காய், கிராம்பு லவங்கப்பட்டையையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.. இது பாதியாக சுண்டியதும் ஆறவைத்து தினமும் 2 அல்லது 3 முறை குடித்து வந்தால், அத்தனை சுவாச பிரச்சனைகளும் நிவாரணம் கிடைக்கும்.. அதேபோல, ஒரு வெற்றிலையில், 6 துளசி இலைகளை வைத்து கசக்கி, அதில் சாறு எடுத்து குழந்தைகளுக்கு கொடுத்தால், நெஞ்சு சளி, இருமல் குணமாகும்.. அல்லது கடுகு எண்ணெயில் வெற்றிலையை சூடாக்கி, ஒரு துணியில் வைத்து மார்பில் கட்டினால், கெட்டிச்சளி கரைய துவங்கும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications