Chennai Crow Death: சென்னையில் காகங்கள் கொத்துக் கொத்தாக இறந்தது ஏன்? டாக்டர் விளக்கம்
சென்னை: சென்னையில் காகங்கள் கொத்துக் கொத்தாக இறந்து விழுந்தது எதனால்? பறவைகளுக்கு உள்ள H5N1 என்ற வைரஸ் தொற்று மனிதர்களுக்கு பரவுமா என்பது குறித்து சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா கூறியிருப்பதாவது: அண்மையில் சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காகங்கள் இறந்து விழுந்த செய்தியை அனைவரும் அறிவீர்கள்.

இது எதனால் நடந்தது என பார்த்த போது H5N1 வைரஸ் தொற்றினால் அது இறந்தது தெரியவந்தது. H5N1 என்றால் என்ன? எப்படி மனிதர்களிடையே பருவகாலங்களில் ஆண்டுதோறும் காய்ச்சல் வருகிறதோ அது போல்தான் பறவைகளுக்கும் கால்நடைகளுக்கும் தொற்றை ஏற்படுத்தும் வைரஸ்தான் எச்5என்1.
இந்த வைரஸால் மனிதர்களுக்கு பிரச்சனையா என கேட்டால் இப்போதைக்கு பெரிய பிரச்சனை இல்லை. மனிதரிடம் இருந்து இந்த வைரஸ் இன்னொரு மனிதருக்கு பரவவில்லை. எனவே இந்த வைரஸ் குறித்து யாரும் பீதியடைய வேண்டாம்.
இது பறவைகளிடையே மிகவும் வேகமாக பரவக் கூடிய வைரஸாக இருந்து வருகிறது. இதனால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பறவைகள் எங்காவது கொத்து கொத்தாக இறப்பதை பார்த்தால் உடனே கால்நடைத் துறையிடம் சொல்ல வேண்டும்.
இறந்த பறவையை கிளவுஸ் இல்லாமல் தொடக் கூடாது. இறக்க போகும் பறவைகளுக்கு எந்த பாதுகாப்பு அம்சங்களும் இல்லாமல் முதலுதவி சிகிச்சை அளிக்கக் கூடாது. இப்படி செய்தால் அந்த தொற்று நமக்கும் பரவ வாய்ப்பிருக்கிறது.
முட்டை, கோழி இறைச்சிகளில் இருந்து இந்த வைரஸ் நமக்கு பரவாது. ஆனாலும் முட்டை, மாமிசத்தை நன்றாக வேக வைத்து சாப்பிட வேண்டும். பச்சை முட்டையை குடிப்பது, முட்டையை அரைக்குறையாக சமைத்து சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
யாருக்காவது இந்த தொற்றுடைய பறவைகளை தொட்ட பிறகு காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி, உடல் சோர்வு, மூச்சுத்திணறல் ஆகிய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் போய் சிகிச்சை எடுக்க வேண்டும்.
இந்த எச்5என்1 வைரஸுக்கு மருந்துகள் இருக்கின்றன. இந்த மருந்துகள் அனைத்து அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளிலும் இருக்கின்றன. எனவே பறவைக் காய்ச்சலால் மனிதர்கள் பாதிக்கப்பட்டால் அதற்கு சிகிச்சை இல்லை என நினைத்து பயப்படாதீர்கள். எனவே விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும். இது குறித்து பீதியடைய வேண்டாம். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications