கோழிக்கறி கடைக்கு போன ஆபீசர்ஸ்.. திருதிருன்னு முழித்த சிக்கன் கடைக்காரர்.. கேவலம்.. நம்ம கோவையிலதான்
கோவை: கோழிக்கறி கடைக்குள் அதிகாரிகள் நுழைந்தனர்.. பிறகுதான் அந்த விஷயத்தை கையும் களவுமாக கண்டுபிடித்தனர்.
கேரளாவில் கடந்த வருடம் ஷவர்மா சாப்பிட்ட, 16 வயது சிறுமி உயிரிழந்தார்.. இப்போது 14 வயது நாமக்கல் சிறுமி இறந்துள்ளார்.. இதற்கெல்லாம் காரணம், இறைச்சி முறையாக பதப்படுத்தப்படுவதில்லை, வேகவைக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.. அதேசமயம், ஓட்டல்களில் அதிகாரிகள் அடிக்கடி பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.

அதாவது, உயிரிழப்புகள் நடந்தால் மட்டுமே, ஓட்டல்களிலும், இறைச்சி மார்க்கெட்டுகளிலும் சோதனைகள் நடத்தப்படுகிறதே தவிர, மற்ற நேரங்களில் இப்படியான சோதனைகள் குறைவாகவே மேற்கொள்ளப்படுகின்றன என்று பொதுமக்கள் அதிருப்தியுடன் கூறுகிறார்கள். அப்படியே அதிகாரிகள், உணவகங்களில் சோதனை நடத்தினாலும்கூட, மாதிரி செய்வதற்காக அந்த உணவுகளை கொண்டுசென்றாலும்கூட, போதிய அளவில், பகுப்பாய்வு கூடங்கள் இருப்பதில்லையாம்..
ஒரு மாதிரியை சேகரிக்க அனுப்பினால், 10 முதல் 15 நாட்கள் வரை ஆகிறது., அதனால்தான், உணவின் தரத்தை உறுதி செய்வதில், அதிகாரிகளுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்..
அசைவ உணவகம்: இப்படிப்பட்ட சூழலில்தான் நேற்றைய தினம், தமிழக அரசு ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது.. அதன்படி, "தமிழகம் முழுவதுமள்ள இறைச்சி கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் சோதனை செய்து, அவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அதிகாரிகளும், உடனடியாக களப்பணியில் இறங்கி உள்ளனர்.
அதிரடி ஆய்வுகள்: அந்தவகையில் கோவையில் சோதனை நடந்து வருகிறது.. ஏற்கனவே, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி ஆய்வின்போது, ஏராளமான கெட்டுப்போன சிக்கன் மற்றும் மட்டன்களை பறிமுதல் செய்திருந்தனர்.. இந்த ஆய்வுகள் அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இன்றுகூட கோவையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.. மொத்தம் 64 கடைகளில் ஆய்வுகள் அதிரடியாக நடந்தன. ஒவ்வொரு இறைச்சி கடைகளுக்குள்ளும், ஓட்டல்களுக்கும் அதிகாரிகள் திடீர் திடீரென உள்ளே நுழைந்து ஆய்வு செய்தனர்.. இறுதியில், கிட்டத்தட்ட சுமார் 40 கிலோ அளவிலான கோழிக்கறியை பறிமுதல் செய்துள்ளனர்..
வார்னிங் : அதேபோல, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த 5 கோழிக்கறி கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வுகள் அடுத்து வரும் சில நாட்களுக்கு தொடரும் என்றும், கெட்டுப்போன இறைச்சி வகைகளை விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு கடைகளின் உரிமைத்தையும் ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வார்னிங் தந்திருக்கிறார்கள்.

கெட்டுப்போன இறைச்சி: அதேபோல, கெட்டுப்போன இறைச்சிகள் மட்டுமல்லாமல், உணவுகளில் கலக்கப்படும் கெமிக்கல், சமைக்க பயன்படுத்தப்படும் சுத்தமில்லாத தண்ணீரும், உடல்நல பாதிப்புக்கு காரணமாகின்றன.. அதனால், நாம் சென்று சாப்பிடும் ஓட்டல், சுத்தமாக இருக்கிறதா? குடிக்கும் தண்ணீரில், சாப்பிடும் இடங்களில் பாக்டீரியா இல்லாத சுத்தமான இடங்களாக இருக்கிறதா? என்பதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, 5 மணி நேரம் வெளியே கம்பியில் இறைச்சியை சுற்றி வைத்திருந்தாலே, பாக்டீரியாக்கள் அதில் தொற்றிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறதாம்.. இதையெல்லாம் கருத்தில்கொண்டுதான், அனைத்து இறைச்சி கடைகள், அசைவ ஓட்டல்களில் இறைச்சியை முறையாக பதப்படுத்துகின்றனரா? என்பதை ஆராய மாவட்ட அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கிறதாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications