Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சின்னம்மை..டைபாய்டு..சூடு பிடிச்சு வேதனையா? கோடையில் கவனம்..என்ன சாப்பிடலாம்? டாக்டர் டிப்ஸ்

நாம் பருகும் நீரும், உண்ணும் உணவும் சுத்தமானதாக இருக்க வேண்டும். கோடை கால நோய்களில் இருந்து தப்பிக்க என்ன சாப்பிடலாம் என்ன சாப்பிடக்கூடாது என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடைக்காலத்தில் டைபாய்டு, மஞ்சள் காமாலை, அமீபியாசிஸ், அம்மை போன்ற நோய்கள் பரவும். இவ்வகையான தொற்று நோய்கள் பெரும்பாலும் அசுத்தமான நீரை பருகுவதாலும், சுத்தமில்லாத உணவுகளை உண்பதாலும் தான் பரவுகிறது. ஆகையால் நாம் பருகும் நீரும், உண்ணும் உணவும் சுத்தமானதாக இருக்க வேண்டும். கோடை கால நோய்களில் இருந்து தப்பிக்க என்ன சாப்பிடலாம் என்ன சாப்பிடக்கூடாது என்று கூறியுள்ளார் பாளையங்கோட்டை அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி அறுவை மருத்துவத் துறை Dr.யோ.ரா.மானேக்சா.எம்.டி.

இயற்கையிலேயே கோடைக்காலத்தில் நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி, மற்றும் உடல் வன்மை குறைந்து காணப்படும். ஆகையால் தான் மாசி முதல் ஆடி வரையுள்ள காலத்தை ஆதாந காலம் என்று சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படுகிறது.

3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். குடிக்கும் நீரை கொதிக்க வைத்து வடிகட்டி ஆறவைத்து பருக வேண்டும்.
நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சோம்புத் தண்ணீர், சீரகத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

கோடைக்காலத்தில் சூடுபிடித்தல்

கோடைக்காலத்தில் சூடுபிடித்தல்

கோடையில் அதிகரிக்கும் வியர்வை மற்றும் மூச்சு வாங்கி விடுதல் போன்றவைகளால் நம் உடலில் நீரின் அளவு குறைந்து சிறுநீரின் அளவும் குறைகின்றது. ஆரோக்கியமாக வாழ தினமும் 3 - 4 லிட்டர் நீர் குடிக்க வேண்டும். இளநீர், நுங்கு, எலுமிச்சை, நான்னாரி சர்பத், முலாம் பழம், தர்பூசணி பழம், வெள்ளரி போன்ற நீர்ச்சத்துள்ள பழங்களை சாப்பிட வேண்டும்.

நல்லெண்ணெய்

நல்லெண்ணெய்

தொப்புளைச் சுற்றி நல்லெண்ணெய் தடவலாம். எலுமிச்சைச்சாறு, பனங்கருப்பட்டி, கொடம்புளி, சுக்குப்பொடி, ஏலப்பொடி, தண்ணீர் சேர்த்து தயாரிக்கப்படும் "பானகரம்" உடலுக்கு குளர்ச்சியைத் தரும். இது நீர்க்கடுப்புக்கு அருமருந்தாகும். எலுமிச்சை, கொடம்புளி, புளி, அன்னாசி, மாதுளை போன்ற பல வகையான பானகங்களை கோடைக் காலத்தில் குடிக்கலாம்.

சிறுநீரகக் கற்கள்

சிறுநீரகக் கற்கள்

போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருத்தல், வெயிலில் அலைதல், அசைவ உணவுகளை அதிகமாக விரும்பி சாப்பிடுதல் இவைகளால் உணவில் உள்ள அதிகப்படியான கால்சியம், ஆக்சலேட், பாஸ்பரஸ் போன்றவை சிறுநீரகம் மற்றும் சிறுநீரகப்பாதையில் தேங்கி கற்களாக உருவாகின்றது. மேலும் சிறுநீரகத் தொற்றினாலும் கற்கள் உருவாகும். இதைத் தவிர்க்க, தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்கலாம். சிறுநீரை அடக்காமல் கழித்து விடவேண்டும்.
வெட்டிவேர், நன்னாரி வேர் கலந்த தண்ணீர் குடிக்கலாம்.

என்ன சாப்பிடலாம்

என்ன சாப்பிடலாம்

சுரைக்காய், வாழைத்தண்டு, சௌ சௌ, முள்ளங்கி, பீர்க்கங்காய், எலுமி்ச்சம்பழம், இளநீர், பீன்ஸ் இவைகளை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறுகன்பீளை செடி, நெருஞ்சில் விதை இவைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வர வேண்டும். வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

சின்னம்மை

சின்னம்மை

கோடைக்காலத்தில் பிரத்யேகமாக காணப்படும் தொற்றுகளில் முதன்மையானது சின்னம்மை. இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நேரடித் தொடர்பு, காற்று மூலமாக எளிதில் தொற்றும் நோய். முதற்குறியாக சுரம், உடல்வலி, கொப்புளங்களை ஏற்படுத்தும். கொப்புளங்களை நகங்களால் கீறவோ, கிள்ளவோ கூடாது. ஒரு வாரத்தில் தானாகவே மறைந்து விடும்.

சின்னம்மை சரியாக மருந்துகள்

சின்னம்மை சரியாக மருந்துகள்

வேப்பிலை, வேப்பிலை தளிரில் படுக்க வைக்க வேண்டும். வேப்பிலை, மஞ்சள் அரைத்த நீரால் உடலைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். சீரகம், கொத்தமல்லி கொதிக்க வைத்த நீரை அடிக்கடி குடித்து வரவும்.
நுங்கு, இளநீர், பதனீர், தர்பூசணி, கிர்ணி, முலாம்பழம், மோர், சின்ன வெங்காயம், கமலா ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற உணவுகளை அடிக்கடி எடுக்க வேண்டும்.

வெயில்கால தசைப்பிடிப்பு வலிகள்

வெயில்கால தசைப்பிடிப்பு வலிகள்

கோடைக்காலத்தில் ஏற்படும் அதிவியர்வை, நீரிழப்பு, தொற்று நோய்களான வாந்தி, வயிற்றுப்போக்கு முதலியவற்றால் உடலில் உள்ள பொட்டாசியம் அளவு குறைவுபடும். பொட்டாசியம் உடலில் உள்ள நரம்புகள் மற்றும் தசைகளின் இயக்கத்திற்கு அவசியமான ஒன்று. பொட்டாசியம் அளவு உடலில் குறைவுபடுவதை Hypokalemia என்பர். இதனால் உடல் களைப்படைந்து தசைகள் இழுத்துக் கொள்ளும். சில நேரங்களில் கால் மூட்டுகள் வலுவிழந்து நடக்க முடியாத நிலை கூட ஏற்படும். இதைத் தவிர்க்க பொட்டாசியம் நிறைந்த உணவுகளான இளநீர், தர்பூசணி, வெள்ளரி, கொய்யா, திராட்சை, வாழைப்பழம், நுங்கு, பதநீர் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கோடை வெயிலும் கதிர் வீச்சின் தாக்கமும்

கோடை வெயிலும் கதிர் வீச்சின் தாக்கமும்

சூரியக் கதிர்களில் இருந்து வரும் இருவிதப் புறஊதா கதிர்கள் UVA & UVB நம்மிடையே தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
UVA கதிர்கள் தோலின் ஆழம் வரை ஊடுருவி செல்லக் கூடியது. இதனால் ஒவ்வாமை, தோல் சுருக்கங்கள் மற்றும் இளவயதிலேயே வயதான தோற்றம் போன்றவைகளை ஏற்படுத்தும். UVB கதிர்கள் தோலின் மேற்பகுதியை ஊடுருவி செல்லக் கூடியது. இவை தோலின் நிறமிச் செல்களை (Melanocytes) பாதித்து மெலனின் உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் உடல் கருநிறம் அடைகின்றது. இதைத் தவிர்க்க முகத்தில் வெண்ணெய், உதடுகளில் வெண்ணெய் பூசி கொள்ளலாம். உடலில் தேங்காய் எண்ணெய் தேய்த்து கொள்ளலாம். புற ஊதா கதிர்கள் உடலை தாக்காதவாறு துணிகளால் உடலை மூடிக் கொள்ளலாம். இந்த டிப்ஸ்களை பின்பற்றினால் கோடை கால நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என்றும் டாக்டர்.யோ.ரா.மானேக்சா தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+