10 நாளாக மலம் கழிக்காத பெண்.. வயிற்றை கிழித்து 3 அடி நீள 20 கிலோ"மலைப்பாம்பை" எடுத்த மருத்துவர்கள்
பெய்ஜிங்: 10 நாட்களாக மலம் கழிக்காமல் இருந்த பெண்ணின் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து 3 அடி நீளத்திற்கு மலைப்பாம்பு போல் சுற்றியிருந்த கழிவுகளை மருத்துவர்கள் நீக்கினர்.
தினமும் 3 வேளை சாப்பிடுவது போல் அடிக்கடி தண்ணீர் குடிப்பது போல் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதும் முக்கியமானதாகும். சிறுநீரை அடக்குவது, மலத்தை கழிக்காமல் அடக்குவது மிகப்பெரிய பிரச்சினைகளில் கொண்டு விடும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

மேலும் சிறுநீரகத்திற்கும் பெருங்குடலுக்கும் மலக்குடலுக்கும் சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள். அதிலும் காபி, டீ, சிகரெட், சுடுநீர் என எதையும் குடிக்காமல் காலையில் எழுந்தவுடன் இயற்கை உபாதை கழிப்பதுதான் நல்லது.
அதே வேளையில் தினமும் முக்கி முக்கி மலத்தை கழிப்பதும் தவறு என்கிறார்கள். இதனால் பைல்ஸ் உள்ளிட்ட நோய்கள் வர வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள். எது எப்படியாக இருந்தாலும் அதிகாலையில் வராவிட்டாலும் தினமும் மலம் கழித்துவிட வேண்டும். குழந்தைகளுக்கு வெகு சீக்கிரமே பள்ளிகள் திறக்கப்படுவதால் அவர்களையும் காலையில் சீக்கிரமே எழ வைத்து மலம் கழிக்க வைத்து அனுப்ப மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
எங்காவது ஊர்களுக்கு பயணம் செய்தால் மட்டுமே உடல் வெப்பத்தால் ஒரு நாளைக்கு மலம் வராது. ஆனால் அடுத்த நாள் நாம் உணவு உண்டவுடன் மலக்குடல் நிரம்பி அவசரமாக மலத்தை வெளியேற்ற உணர்வு ஏற்படும். ஆனால் சீனாவில் 53 வயது பெண் ஒருவர் 5 நாட்களாக மலம் கழிக்கவில்லையாம். இதனால் அவருடைய வயிறு வீங்கியுள்ளது.
இந்த மலச்சிக்கல் அந்த பெண்ணுக்கு புதிதல்ல. ஏற்கெனவே 4 முதல் 5 ஆண்டுகளுக்கு மிக தீவிரமாக மலச்சிக்கல் இருந்தது. இதனால் அவரால் சரியாக மூச்சுவிட இயலாத நிலை இருந்தது. அவரது வயிற்றில் ஏதோ கருவி இருப்பது போன்ற ஷேப்பில் இருந்ததால் அச்சமடைந்த உறவினர்கள் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்து 20 கிலோ கழிவுகள் அகற்றப்பட்டன. அவை பார்ப்பதற்கு மலை பாம்பு போல் இருந்தது. மேலும் 3 அடி நீளத்திற்கு இருந்தது. இதற்கு என்ன காரணம் என மருத்துவர்கள் கூறுகையில் அந்த பெண்ணுக்கு மலச்சிக்கல் என்பது மரபு நோயாக இருந்துள்ளது. அவருக்கு ஹிர்ச்ஸ்பரங்க்ஸ் நோய் (Hirschsprung's disease) இருக்கிறது. அவரது பிறக்கும் போதே அவரது பெருங்குடலில் நரம்புகள் இல்லாமல் பிறந்ததே ஆகும்.
இதனால் பெருங்குடலால் மலத்தை வெளியேற்ற முடியாமல் வயிற்றிலேயே தேங்கிவிட்டது. தற்போது அறுவை சிகிச்சைக்கு பிறகு நோயாளி நலமாக இருக்கிறார் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications