"அந்த" நோய்களை ஆணுறைகள் நிச்சயம் தடுக்காது.. இளசுகளே கவனம்.. இந்த 4 மேட்டர் ரொம்ப முக்கியம்
டெல்லி: நமது நாட்டில் இப்போது பாலியல் ரீதியாக நோய்கள் பரவுவது கணிசமாக அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க ஆணுறைகளைப் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். இருப்பினும், ஆணுறைகள் பாலியல் ரீதியான நோய்களை முழுமையாகத் தடுக்காது என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பாலியல் ரீதியாகப் பரவும் நோய்களைத் தடுக்கவே இங்கு ஆணுறைகளைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். இதன் மூலம் எய்ட்ஸ் போன்ற பாலியல் ரீதியான நோய்களைத் தடுக்க முடியும் என்பதே பொதுவான கருத்து.

ஆணுறைகள்: இந்த ஆணுறைகள் இரு தரப்பிற்கும் இடையே ஒரு தடையாகச் செயல்படுவதால் தொற்று நோய் பரவாது என்றே பொதுவாக சொல்லப்படுகிறது. ஆணுறைகள் என்பது பாலியல் ரீதியான நோய்களின் ஆபத்தைக் குறைக்கும் என்ற போதிலும் அது முழுமையாக 100% தொற்று நோய்ப் பாதிப்பைத் தடுக்கும் எனச் சொல்லிவிட முடியாது என்கிறார் டாக்டர் சாதனா சிங்கால் விஷ்னோய்.
டாக்டர் சாதனா இதற்கு 3 முக்கிய காரணங்களையும் பட்டியலிடுகிறார். முதலில் ஆணுறைகள் என்பது முழுமையான பாதுகாப்பைத் தராது. ஆணுறைகள் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறைக்கும் நிலையில், மற்ற பகுதிகள் அப்படியே இருக்கிறது. இதனால் ஹெர்பெஸ், மனித பாப்பிலோமா வைரஸ் உள்ளிட்ட பாலியல் சார்ந்த நோய்கள் பரவும் ஆபத்து இருக்கிறதாம்.
பிரச்சினை: அதேபோல ஆணுறை கிழிந்து போவதும் ஒரு ஆபத்து தான். உடலுறவின் போது ஆணுறைகள் சில நேரங்களில் கிழிந்துவிட வாய்ப்பு இருக்கிறது. இது ஆணுறையை பயனற்றதாக மாற்றிவிடும். இதற்கான வாய்ப்புகள் குறைவு என்ற போதிலும் ஆணுறைகளை முறையாகப் பயன்படுத்தவில்லை என்றால் இதுபோன்ற பிரச்சினைகள் வரும் என்கிறார்கள்.
அடுத்து பூஞ்சை தொற்று ஏற்படலாம். ஆணுறைகள் பூஞ்சை தொற்று பரவுவதைக் குறைத்தாலும் கூட முழு பாதுகாப்பைத் தருவதில்லை. ஈஸ்ட் தொற்று போன்ற பூஞ்சை தொற்றுகள் இது ஆணுறை பயன்படுத்தினாலும் மூடப்படாமல் இருக்கும் பகுதிகள் மூலம் பரவும் என்கிறார் மருத்துவர் சாதனா. இதுபோல ஆணுறைகளைப் பயன்படுத்தினாலும் பாலியல் சார்ந்த நோய்கள் பரவ வாய்ப்பு இருக்கும் நிலையில், இதைத் தடுப்பதற்கான வழிமுறைகளையும் அவர் முன்வைக்கிறார்.
4 காரணங்கள்: முதலில் அவ்வப்போது பாலியல் ரீதியான சோதனைகளை எடுத்துக் கொள்ள வேண்டுமாம். பாலியல் ரீதியாக ஆக்டிவாக இருக்கும் நபர்கள், குறிப்பாக பலதரப்பட்ட உறவில் இருப்போர் அடிக்கடி பாலியல் சோதனைகளைச் செய்ய வேண்டும். எஸ்டிஐ எனப்படும் இந்த பாலியல் ரீதியான நோய்களை எவ்வளவு சீக்கிரம் கண்டறிகிறோமோ.. அந்தளவுக்கு எளிதாகச் சிகிச்சை அளிக்க முடியும். பல வகையான எஸ்டிஐ-களுக்கு அறிகுறிகள் எதுவும் தென்படாது. எனவே, டெஸ்டிங் கட்டாயம்.
எந்த வகையான தொற்று நோய் என்றாலும் அதைக் குறைக்கத் தனிப்பட்ட சுகாதாரம் முக்கியம். உடலுறவுக்கு முன்னும் பின்னும் பிறப்புறுப்பைக் கழுவ வேண்டும். துண்டுகள் அல்லது உள்ளாடைகள் போன்ற தனிப்பட்ட பொருட்களை நிச்சயம் பகிரக் கூடாது.
தடுப்பூசி முக்கியம்: அதேபோல பாலியல் கூட்டாளிகளைக் குறைப்பதும் நல்லது. குறைவான நபர்களுடன் உடலுறவு கொள்வது என்பது பாலியல் ரீதியான நோய் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கிறது. கடைசியாகத் தடுப்பூசியைப் போடுங்கள். சில குறிப்பிட்ட வகை எஸ்டிஐ நோய்களுக்குத் தடுப்பூசிகள் உள்ளன. எனவே, அதைத் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்.












Click it and Unblock the Notifications