கறிவேப்பிலை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் 5 நன்மைகள்.. வெறும் வயிற்றில் குடித்தால் அதிசயம் பாருங்க
சென்னை: கறிவேப்பிலையானது மனித குலத்துக்கு கிடைத்த அற்புத மூலிகையாகும்.. இதனை எந்த வடிவத்திலும், எந்த முறையிலும் சாப்பிடலாம்.. எப்படி சாப்பிட்டாலும், அதிலுள்ள சத்துக்கள் குறைய போவதில்லை.. எனினும், இந்த கறிவேப்பிலையை தண்ணீரில் ஊறவைத்து, அந்த நீருடன் சேர்த்து சாப்பிடுவதால் பல மடங்கு பயன்கள் கிடைக்கிறதாம்.. ஊறவைத்த கறிவேப்பிலை தரும் மருத்துவ நன்மைகளை சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
முருங்கைக்கீரைக்கு அடுத்தபடியாக உணவில் தவிர்க்க முடியாதது கறிவேப்பிலையாகும்.. இந்த இலைகளில் ஆன்டிஆக்ஸிடென்ட், வைட்டமின் A, B, C, E, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, மெக்னீசியம், தாமிரம் என்று நமக்கு அத்தனை சத்துக்களையும் கறிவேப்பிலை தருகிறது.. மேலும், கிளைக்கோசைடுகள், ஃப்ளேவோனாய்டுகள் உள்ளதால் அதிக பலனை தருகிறது.

கறிவேப்பிலையை சுத்தம் செய்து, அதில் புதினா இலைகள், எலுமிச்சம் சாறு கலந்து வடிக்கட்டாமல் வெறும் வயிற்றில் குடித்து வரும்போது, உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்கள் அதிகமாக கிடைக்கும்.. இதனால் தொப்பையும் கரையும். எனவே, உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தாராளமாக கறிவேப்பிலையை சாப்பிடலாம்..
சர்க்கரை நோயாளிகள்
கர்ப்பிணிகள், நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து கறிவேப்பிலையை சாப்பிட்டு வரும்போது, இரும்புச்சத்து ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவியாக உள்ளது..
ரத்த சர்க்கரை குறைவு பண்புகள் இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் கறிவேப்பிலையை மென்று சாப்பிடலாம். இதனால் கணையத்தில் இன்சுலின் உற்பத்தியும் அதிகரிக்கும்.. இரும்பு, துத்தநாகம் தாமிரம் போன்ற தாதுகள் உள்ளதால் சர்க்கரை அளவை குறைத்து, நோயையும் கட்டுக்குள் வைத்திருக்க செய்யும்.
செரிமான திறனை அதிகரிக்கக்கூடிய தன்மை கறிவேப்பிலைக்கு உண்டு.. குறிப்பாக இதயம் தொடர்பான நோயாளிகள் கறிவேப்பிலை உணவில் சேர்த்து கொள்வது கட்டாயமாம். ஏனென்றால் வெறும் வயிற்றில் பத்து கறிவேப்பிலையை சாப்பிட்டு வரும்போது, உடலில் தேவையற்ற கொழுப்பு கரைந்து நல்ல கொழுப்புகள் பெருகும்..
கறிவேப்பிலை சுத்தம் செய்து நிழலில் உலரவிட்டு, சீரகம், மிளகு, கல்உப்பு சேர்த்து அரைத்து வைத்து கொண்டால், சுடுசோற்றில் நல்லெண்ணை ஊற்றி கலந்து குழந்தைகளுக்கு தரலாம். இதனால் வளரும் பிள்ளைகளுக்கு இரும்புச்சத்து அதிகமாகும்.
ஊட்டச்சத்து நிறைந்த நீர்
வழக்கமாக குடிக்கும் தண்ணீருக்கு பதிலாக, கறிவேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து, வெதுவெதுப்பான தண்ணீரில் ஊறவைத்து குடிக்கலாம்.. இந்த தண்ணீரில் ஏராளமான ஆண்டிஆக்ஸிடன்ட்டுகள், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, செரிமானத்தையும் சீராக்க தூண்டுகிறது.
இதனால், உடலிலுள்ள தசைகள், நரம்புகள் தளர்வடையும்.. மன அழுத்தம் இருந்தாலும் நீங்கிவிடும்.. மாறாக அன்றைய தினம் முழுக்க புத்துணர்ச்சி, சுறுசுறுப்பை இந்த கறிவேப்பிலை தண்ணீர் தந்துவிடும்.
கறிவேப்பிலை தண்ணீர்
இரவில் தூங்க செல்வதற்கு முன்பு, 2 டம்ளர் நீரில் 1 கைப்பிடி கறிவேப்பிலையை ஊறவைத்து, மறுநாள் காலையில் இதனுடன் சீரகம், இந்துப்பு சேர்த்து கொதிக்கவைத்து, வடிகட்டி குடிப்பதால் தலைமுடி கருகருவென வளரும்.. வெறும் நீரில் டீ தயாரிப்பதற்கு பதில், கறிவேப்பிலை தண்ணீரில் டீ போட்டு குடிக்கலாம்..
கறிவேப்பிலை நீரை குடித்து வரும்போது, சருமத்திலுள்ள பருக்கள், மருக்கள், கரும்புள்ளிகள் நீங்கும்.. சருமமும் பளபளப்பாகும்.. அதேபோல தலைமுடி வேர்களை வலுப்படுத்தும் சக்தி இந்த கறிவேப்பிலை தண்ணீருக்கு உள்ளது.. இதனால் முடி உதிர்வும் தடுக்கப்படும்.
குடல் ஆரோக்கியம்
வயிற்று புண்களை குணப்படுத்தக்கூடியது கறிவேப்பிலை தண்ணீர்.. இதனால் வயிறு, குடல் பிரச்சனைகள் நெருங்காது.
இத்தனை பலன்கள் இருந்தாலும், அலர்ஜி உள்ளவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனை பெற்று கறிவேப்பிலையை சாப்பிடுவது சிறந்த ஆரோக்கியமாகும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications