20 நிமிடங்கள்தான் கோல்டன் ஹவர்! கார்டியாக் அரெஸ்ட் ஆனவுடனே சிபிஆர்.. ஹார்ட் அட்டாக் என்றால் என்ன?
சென்னை: கார்டியாக் அரெஸ்ட்டிற்கும் ஹார்ட் அட்டாக்கிற்கும் என்ன வித்தியாசம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் இன்று காலை காலமானார். அது போல் அண்மையில் ஆர்.எஸ்.சிவாஜியும் மாரடைப்பால் காலமானார். இளம் சீரியல் நடிகர் பவன் சிங் என மாரடைப்பு மரணங்கள் நிறைய நடக்கின்றன.

இந்த நிலையில் மாரடைப்புக்கும் ஹார்ட் அட்டாக்கிற்கும் என்ன வித்தியாசம் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். இது குறித்து அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மற்றும் மருத்துவமனையின் டாக்டர் ஒய் தீபா ஏற்கெனவே ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மாரடைப்பு (கார்டியாக் அரெஸ்ட்) என்பது மிகவும் அவசர நிலையாகும். அதாவது இதய துடிப்பு நின்றுவிட்டது என்பதுதான் இதன் அர்த்தம். இதயத்துடன் நுரையீரலின் செயல்பாடும் நின்றுவிடும்.
இதனால் ஹார்ட் ரேட்டும், ரெஸ்பிரேட்டரி ரேட்டும் இருக்காது, மூச்சும் இருக்கவே இருக்காது, இதயத் துடிப்பு நின்றுவிடும். உடல் ஜில்லினு ஆகிவிடும். கண்களின் கருவிழி ஒரே இடத்தில் நின்றிருந்தால் நோயாளி இறந்துவிட்டார் என புரிந்து கொள்ளலாம். இதயம் துடிப்பது நின்று உடல் ஜில்லென ஆகி ஒருவர் மயங்கிவிட்டால் அவருக்கு சிபிஆர் சிகிச்சை உடனே கொடுக்கப்பட வேண்டும்.
இப்படி கொடுப்பதன் மூலம் இதய துடிப்பை கொண்டு வரலாம். உடனே நுரையீரலும் செயலாற்றும். நோயாளியின் கான்சியஸ்ஸை கூட திரும்ப கொண்டு வந்துவிடலாம். நெஞ்சு பகுதியில் எலும்புக் கீழ் உள்ளங்கைகளால் அழுத்தம் கொடுக்க வேண்டும். 15 முறை அழுத்தம் கொடுத்தல் வேண்டும். இரு முறை வாயோடு வாய் வைத்து சுவாசத்தை தர வேண்டும்.
இதயத்தின் செயல்பாடு நின்ற 15 நிமிடங்களில் நுரையீரலின் செயல்பாடும் நின்றுவிடும். இதன் பிறகு மூளையின் செயல்பாடு 5 நிமிடங்கள்தான் இருக்கும். அந்த 5 நிமிடங்களில் சிபிஆர் செய்தால் பிழைக்க வைக்க வாய்ப்பிருக்கிறது. ஹார்ட் அட்டாக்கும் அவசர நிலைதான். நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ரத்தத்தை பம்ப் செய்து கொடுக்கிறது இதயம்.
ஆனால் இதயத்திற்கே ரத்தத்தை சப்ளை செய்வது கரோனரி ஆர்ட்ரி கொடுக்கிறது. கொழுப்பு நிறைய உணவுகளை உட்கொள்ளுதல், ரத்த அழுத்தம் அதிகரித்தல், உடற்பயிற்சி இல்லாமை, உடல் பருமன் போன்றவைகளால் இதயத்தில் உள்ள ரத்தக் குழாய்கள் முழுமையாக அடைபடும் போது நெஞ்சு வலி ஏற்படும். இடது புற தோள் பட்டை பகுதியில் வலி இருக்கும். மூச்சுத்திணறல், அதிக வியர்த்தல், தொண்டை அடைப்பது போல் இருக்கும். இதெல்லாம் ஹார்ட் அட்டாக்கின் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றிவிடலாம். இவ்வாறு டாக்டர் தீபா தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications