குழந்தைகள் திக்கி பேசுகிறார்களா? 3 வயதாகியும் பேச்சு வரவில்லையா? இந்தா இருக்கே "பேர் சொல்லாது"!
சென்னை: வசம்பின் பயன்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். குழந்தைகள் இருக்கும் வீடுகளில் இருக்க வேண்டிய முக்கியமான மருந்து இதுவாகும். குழந்தைகளின் பசியின்மையை போக்கும். சிறு தொற்றுகள் கூட வராமல் தடுக்கும். இதை பிள்ளை வளர்ப்பான் என கூறுவார்கள்.
வசம்பை ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃபிளாக் என அழைப்பார்கள். உலகில் எத்தனை மருந்துகள் வந்தாலும் குழந்தைகளின் அசவுகரியத்தை போக்க இந்த வசம்பை தவிர வேறு நல்ல மருந்து கிடையாது.

வசம்பின் முனையை காமாட்சி அம்மன் விளக்கில் சுட்டு, அதை சுடும் பாலில் குழைத்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மை, வயிறு உப்புசம், சிறிய தொற்றுகள் வராமல் தடுக்கும்.
கைக் குழந்தைகளாக இருந்தால் வாரத்தில் ஒரு நாள் இந்த வசம்பை விளக்கில் சுட்டு , ஒரு களிமண் அகலில் முதலில் வசம்பை இழைக்க வேண்டும். அப்போது அதிலிருந்து கரி போன்று பவுடர்கள் வரும். தேவையான அளவு எடுத்து கொண்ட பிறகு, அதில் தாய்மார்கள் சிறிது தாய்ப்பாலை விட்டதும் அதை இழைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அந்த கலவையை பாலாடையில் போட்டு குழந்தைகளுக்கு வாயில் ஊற்றி விட வேண்டும். பிறகு மீதமுள்ளதை குழந்தையின் தொப்புள், மாறு கால் மாறு கையில், உள்புறம் இட வேண்டும். நெற்றியிலும் ஒரு பொட்டு வைத்துவிட்டால் காற்றுக் கருப்பு ஏதும் அண்டாது என்பார்கள்.
அது போல் குழந்தைகளுக்கு இருக்கும் திக்குவாய் நீங்கவும் இந்த வசம்பு உதவுகிறது. இந்த வசம்பை பொடி செய்து அருகம்புல் சாறு எடுத்து 30 நாட்கள் கொடுத்து வந்தால் திக்குவாய் குணமாகும். அது போல் வசம்பை வீட்டு வாசலில் கட்டி வைத்தால் கெட்ட சக்திகள் உள்ளே வராது என்பார்கள்.
அது போல் குழந்தைகளுக்கு வசம்பால் காப்பும் போட்டுவிடுவார்கள். வசம்பை கிருமிநாசினியாகவும் பயன்படுத்தலாம். பசி, சோம்பலை நீக்க இந்த வசம்பை பெரியவர்களும் சிறுவர்களும் சாப்பிடலாம். வசம்பு பொடியை தேனுடன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வயிற்று பிரச்சினைகள் நீங்கும். ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம்.
வசம்பு மற்றும் அதிமதுரத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயத்தை கொடுத்தால் இருமல், வயிற்று வலி போன்ற குழந்தைகளின் நோய்களுக்கு கொடுக்கப்படுகிறது. இது குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது. வசம்பை அடிவயிற்றில் தடவினால் வாயுத் தொல்லை நீங்கும்.
குழந்தைகளுக்கு சரியான மூளை வளர்ச்சி, பேச்சுத் திறன், சிறந்த பார்வை திறன் போன்றவைகளுக்கு தீர்வை கொடுக்கிறது இந்த வசம்பு. இதை எரித்து பிறகு தேங்காய் எண்ணெயில் வைத்து குழைத்து கண் மை போல் பயன்படுத்தலாம். இதன் மூலம் திருஷ்டி போகும்.
வசம்பு பொடியை முகத்திற்கு அதிகம் பயன்படுத்துவதில்லை. ஆனால் இது தோல் நோய்களுக்கும் சரும தடிப்பு போன்றவை தடுக்கலாம். வசம்பு மிக மிக நல்லது. இதை அதிகம் பயன்படுத்தக் கூடாது. அப்படி செய்தால் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications