வழ வழன்னு "வெண்டைக்காய்".. இயற்கை தந்த அதிசயம்.. அந்த பிரச்சனையும் ஓடிரும்.. வெண்டைக்காய் மருத்துவம்
சென்னை: காய்கறிகளை அதிகமாக சாப்பிட்டால் நல்லது என்பார்கள்.. ஆனால், இந்த வெண்டைக்காயை மட்டும், பச்சையாகவே சாப்பிட்டால் இன்னும் நன்மைகளை தரும்.. அதிலும், திரவ வடிவில் சாப்பிட்டால், பலமடங்கு சத்துக்கள் கிடைக்கும் என்பது ஆச்சரிய உண்மை.
அதேபோல, வெண்டைக்காயின் வழவழப்புத்தன்மையை பலர் விரும்புவதில்லை. இந்த வழவழப்புத்தன்மையில்தான், அதிக மருத்துவப் பலன்கள் ஒளிந்திருக்கின்றன என்பதும் ஆச்சரியமான உண்மை. பெக்டின் (Pectin) + ஒருவித கோந்துத்தன்மை சேர்ந்துதான், இப்படியான வழவழப்பை உண்டு பண்ணுகிறது..

வழவழப்புக்காய்: இந்த வழவழப்பில் ஏகப்பட்ட நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் உள்ளன.. இந்த நீர்ச்சத்து, உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. அளவுக்கு அதிகமான கரையும் நார்ச்சத்து, கொல்ஸ்ட்ராலின் அளவை கட்டுக்குள் வைத்து, இதய நோய்களின் ஆபத்தை குறைக்கிறது.. மாரடைப்பு வராமல் தடுக்கிறது.
வெண்டைக்காயை சாப்பிட்டால் அறிவு வளரும் என்பார்கள்.. அறிவுக்கும் வெண்டைக்காய்க்கும் தொடர்பு இருக்கிறதோ இல்லையோ, இந்த வெண்டைக்காயை சாப்பிடுவதால், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரோட்டீன், வைட்டமின் A, E, K, போன்ற சத்துக்கள் நமக்கு நேரிடையாக கிடைக்கின்றன. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த வெண்டைக்காயை மட்டும் விட்டுவிடக்கூடாது.
நீரிழிவு நோயாளிகள்: அதாவது 100 கிராம் வெண்டைக்காயில், வெறும் 35 கிலோ கலோரிகள் மட்டுமே இருக்கிறதாம். நீரிழிவு நோயாளிகள் வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால், அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு மெல்ல குறையும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.. போலிக் அமிலம் உள்ள இந்த வெண்டைக்காய், கர்ப்பிணி பெண்களுக்கும், கருவில் உள்ள குழந்தைக்கும் இது மிகச்சிறந்த உணவாக திகழ்கிறது.
வெண்டைக்காயை பச்சையாக மென்று சாப்பிட்டால், பற்கள் வெண்மையாகும்.. ஆஸ்துமா கோளாறு இருந்தால், வெண்டைக்காயில் பால் ஊற்றி வேகவைத்து குடித்தால் நிவாரணம் கிடைக்கும். இரவில் தூங்கப்போகும்போது, ஒரு டம்ளர் தண்ணீரில் வெண்டைக்காய் துண்டுகளை போட்டு மூடிவைத்து, இரவெல்லாம் ஊறவைத்து மறுநாள் காலையில், அந்த நீரை மட்டும் குடித்து வந்தாலே போதும்.
கால்சியம்: அன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சி கிடைக்கும்.. குடலியக்கம் சீராகும்.. குடல் அபாயம் நீங்கும்.. பெருங்குடல் சுத்தமாகும். சுவாச பிரச்சனைகள் நீங்கும்.. எலும்புகள் பலப்படும்.. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.. வயிற்றுப்புண் ஆறும். கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகள் விலகி ஓடும்.. மலச்சிக்கல், வயிற்றுப் போக்குகளை நீக்குகிறது.. ஈறுகள் பலப்படும்..
பார்வைத்திறன் கூர்மையாக வேண்டுமானால் கட்டாயம் வெண்டைக்காயை சாப்பிட வேண்டும்.. காரணம், இதிலுள்ள பீட்டா கரோட்டின், கேட்டராக்ட், க்ளாக்கோமா போன்ற பிரச்சனைகளை தவிர்க்ககூடியது இந்த வெண்டைக்காய்.

பொரியல், வறுவல்: வெண்டைக்காயில் வழக்கமாக பொரியல், வறுவல், புளிக்குழம்பு, வெண்டை மண்டி இப்படி செய்வார்கள்.. எனினும், இந்த காயை, அதிகம் மசாலாக்கள், எண்ணெய் இல்லாமல், சூப் மட்டுமே வைத்து குடித்தால், ஏராளமான நன்மைகள் கிடைக்கும். வேண்டாம் என்று ஒதுக்கப்படும் முற்றிய வெண்டைக்காயை வைத்தே சூப் செய்யலாம்.
நான்கைந்து வெண்டைக்காய், தக்காளி, சிறிது பூண்டு பற்கள், சின்ன வெங்காயம், மிளகு சீரகம் எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீர்விட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.. இதில், கல் உப்பு, கொத்தமல்லி சேர்த்து குடித்தாலே சுவாசக்கோளாறுகள் நீங்கும்.
கண்டிஷனர்: அதேபோல, இந்த வெண்டைக்காய் தலைமுடிக்கு மிகச்சிறந்த "இயற்கை கண்டிஷனராக" செயல்படுகிறது.. வெண்டைக்காயை கொதிக்க வைத்த தண்ணீரில் சேர்த்து, சிறிது எலுமிச்சம் சாறு பிழிந்து, அந்த தண்ணீரில் தலைமுடியை அலசினால், தலைமுடி பளபளப்பு கிடைக்கும்.. முடிகள் உறுதியாகும்.












Click it and Unblock the Notifications