இறால் மீன் வாங்கறீங்களா.. அற்புதங்களை செய்யும் இறால் வகைகள்.. இறாலை இப்படியும் செய்யலாம் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இறால் மீன்களில் உள்ள மருத்துவ குணங்கள் தெரியுமா? அபார ருசியுடைய இந்த இறால் மீன்களை எப்படியெல்லாம் சமைக்கலாம் தெரியுமா?
இறால் மீனில் உள்ள சத்துக்கள் அபரிமிதமானவை.. கனிமச்சத்தின் அளவு அதிகமாக உள்ளது. ஹீமோகுளோபினில் ஆக்ஸிஜன் கலக்கும் செயலில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த கனிமம்.

அதிக சத்து: கூடுதல் இரும்புச்சத்து உடம்பில் ஏறும்போது, தசைகளுக்கு கூடுதல் அளவிலான ஆக்ஸிஜன் செல்லக்கூடும். இறால் மீனை குழந்தைகள் சாப்பிட்டு வந்தால், மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவும் அதிகரித்து ஞாபக சக்தி அதிகரிக்கும்,

Do you know about Excellent Prawn and What are the Health Uses of Prawn Fish

இறாலில் அயோடின் சத்து நிறைய உள்ளதால், உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க பேருதவி புரிகின்றன.. இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், மூளையின் வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது. இறாலில் புரதம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளன. பல வகை புற்றுநோய்களில் இருந்து காப்பதுடன், நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக போராடும்.

இறால் 65: இந்த இறாலில், வறுவல் செய்வார்கள், தொக்கு செய்வார்கள், 65 செய்வார்கள், பிரியாணி செய்வார்கள்.. அதேபோல,மேலும் வகைகளிலும் இறாலை நாம் பயன்படுத்தலாம். குறிப்பாக கருணைக்கிழங்கை சேர்த்து கிரேவி போல செய்யலாம்.

கருணைக்கிழங்கை, சிறிதாக வெட்டிப்போட்டு, உப்பு சேர்த்து குக்கரில் 1 விசில் விட்டு எடுத்து கொள்ள வேண்டும்.. பிறகு, ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சோம்பு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்..

அதிலேயே தக்காளியையும் வெட்டிப்போட்டு, பிறகு, கருணைக்கிழக்கு மற்றும் இறால் இரண்டையும் சேர்த்து 5 நிமிடம் உப்பு போட்டு வேக வைக்க வேண்டும். பிறகு, மிளகாய் தூள், மஞ்சள் சேர்த்து சேர்த்து, தண்ணீர் மீண்டும் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கினால், கருணை இறால் கிரேவி ரெடி

இறால் பிரைடு ரைஸ்: இந்த இறாலிலேயே, ஃபிரைட் ரைஸ் செய்யலாம்... நூடுல்ஸை வெந்நீரில் கொதிக்க விட்டு தண்ணீரை வடித்து ஆறவிட்டு எடுத்து கொள்ள வேண்டும். கேரட், கோஸ், குடைமிளகாய், வெங்காயம் எல்லாவற்றையும் பொடியாக, நீளமாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும். ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய பூண்டு, வெங்காயம் தாளித்து, நறுக்க வைக்கப்பட்ட பொருட்களை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு, சுத்தம் செய்யப்பட்ட இறாலையும் கொட்டி கிளற வேண்டும்.

பிறகு, அதிலேயே நூடுல்ஸையும் கொட்டி, மசாலா, சோயா சாஸ், தக்காளி சாஸ், சேர்த்து, கடைசியாக ஸ்ப்ரிங் ஆனியன் சேர்த்து இறக்கிவிடவேண்டும்.

இறால் பிரியாணி: ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி, அதில், இறால்களை கொட்டி சிறிது வதக்கி எடுத்து கொள்ள வேண்டும். பிறகு, அதே வாணலியில், நெய் சூடாக்கி, வெங்காயம், பூண்டு, இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை, தக்காளி, என ஒவ்வொன்றையும் சேர்த்து வதக்க வேண்டும். இப்போது சிறிது எலுமிச்சம் சாறு, புதினா, மல்லி தழைகளையும் சேர்த்து, இறால்களையும் கொட்டி, சிறிது தண்ணீர் சேர்த்து கிளற வேண்டும்.

Do you know about Excellent Prawn and What are the Health Uses of Prawn Fish

தனியாக ஒரு பாத்திரத்தில் அரைவேக்காடு, பாசுமசி அரிசியை வேக வைத்து எடுத்துக் கொண்டு, அதை இந்த இறால்களில் கொட்டி, மெல்லிய தீயி 10 வைத்து எடுத்தால், பிரியாணி ரெடி

இந்த இறாலில், வடையும் செய்யலாம்.. இறாலை சுத்தம் செய்து, உப்பு, மஞ்சள் பொடி கலந்து தண்ணீரில் வேக வைத்து, ஆறியதும் மிக்ஸியில் அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

இறால் வடைகள்: வெங்காயம் + பச்சை மிளகாய் பொடியாக இடித்து கொள்ள வேண்டும். கடலையை உடைத்து வைத்து கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு, சோம்பையும் நசுக்கி கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில், இவைகள் அணைத்தையும் சேர்த்து, அரைத்த இறாலையும் அதிலேயே கொட்டி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீரின்றி பிசைந்துக்கொண்டு, வடைகளாக தட்டி போட வேண்டியதுதான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+