முருங்கைக்கீரை வாங்கறீங்களா.. முருங்கை சூப் ஒன்று போதும்.. 30 நோய் தீரும்.. முருங்கையிலை மருத்துவம்
சென்னை: முருங்கைக்கீரை பல சத்துக்கள் நிறைந்தது என்று தெரியும்.. ஆனால், எவ்வளவு சத்துக்கள் உள்ளன தெரியுமா? இந்த கீரையில் துவையல் செய்வது எப்படி தெரியுமா?
மற்ற கீரைகளில் உள்ள இரும்புச்சத்தினை விட 75 சதவீத அதிக சத்து முருங்கை கீரையில் இருக்கிறது.. ஆரஞ்சைவிட 7 மடங்கு விட்டமின் சி இதில், நிரம்பி உள்ளது.
இரும்பு சத்து: பாலில் இருப்பதை விட 4 மடங்கு அதிகம் கால்சியம் இந்த கீரையில் உள்ளது. கேரட்டில் இருப்பதுப்போல 4 மடங்கு விட்டமின் A இந்த கீரையில் உள்ளது. வாழைப்பழத்தில் உள்ளதுபோல 3 மடங்கு பொட்டாசியம் இந்த கீரையில் உள்ளது. அதனால்தான்., இந்த முருங்கைக்கீரை மட்டும்தான், மற்ற கீரைகளைவிட மிகவும் ஸ்பெஷலாக கருதப்படுகிறது..

முருங்கைக்கீரையில், ஆண்டி - ஆக்சிடன்ட், ஆண்டி - டயாபடிக், ஆண்டி - அத்திரோஜெனிக், ஆண்டி - ஹைப்பர் டென்சிவ், ஆண்டி - மைக்ரோபியல், ஆண்டி - இன்பிள மேட்ரி, ஆண்டி - பையிரிடிக், ஹெப்படோ புரொடெக்டிவ் இப்படி நோய் எதிர்ப்பு சக்திகள் அனைத்துமே நிரம்பி கிடக்கின்றன.
முருங்கைக்கீரை: முருங்கைக்கீரையின் நன்மைகளை பட்டியலிட முடியாது.. அதன் தலையாய பயன்கள் என்னென்னவென்றால், உடலின் சர்க்கரையை குறைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.. மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்று வலியை குணப்படுத்துகிறது.. கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவுகிறது.
தலைமுடி வளர்ச்சிக்கு பயன்படுகிறது.. இதை உணவில் உட்கொள்ளும்போது, தலைமுடியும் வளரும். நரைமுடியும் குறையும். மலச்சிக்கல், வயிற்று வலி, வயிற்றுப்புண் நீங்கும்... தோல் வியாதிகள் தீரும்.. உடல் சூட்டை தணிக்கும்.. தணியும் மலச்சிக்கல் நீங்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.. இருதய நோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள், ஜீரணக் கோளாறு நீங்கும். பற்கள் உறுதியாகும். ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும்.
நன்மைகள்: உடல் வெப்பத்தால் ஏற்படும் வாய் புண்கள் போன்றவை நீங்கும்.. தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது குறைந்து, அனைத்து விதமான தோல் வியாதிகளும் விரைவில் நீங்கும்.. இன்னும் பல நன்மைகள் உள்ளன. முருங்கையை தின்னால் முன்னூறு நோய்கள் விலகும் என்று இதற்குதான் சொன்னார்கள்.
வழக்கமாக, இந்த கீரையில் சாம்பார், பொரியல், செய்வோம். ஆனால், முருங்கைக்கீரை பொரியலே செய்தாலும்கூட, அதனுடன் வேர்க்கடலை சேர்த்து சமைத்து சாப்பிட்டால் இன்னும் பலன் கிடைக்கும். அல்லது முருங்கைக்கீரையை பொரியலாக செய்யும்போது, அதில் முட்டையை அடித்து ஊற்றி கிளறினால் இன்னும் சத்து கிடைக்கும்..
கீரை சூப்: அதேபோல, சூப் வடிவில் இந்தகீரையை சாப்பிடும்போது, அல்லது மருந்து வடிவில் பக்குவமாக சமைத்து சாப்பிடும்போது கூடுதல் பலன் தரகிறது. ஆனால், முருங்கைக்கீரை இளசாக இருக்க வேண்டும்.. இதில், ஒரு கைப்பிடி கீரையை, 1 டீஸ்பூன் நெய் விட்டு, வதக்கி, 5 பல் பூண்டு, 5 மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம் போன்றவற்றை பொடித்து, தினமும் மதிய உணவில் சேர்த்து கொண்டாலே பல நன்மைகள் கிடைக்கும். இதையே ஜூஸ் போலவும் சாப்பிடலாம்..
முருங்கைக் கீரை ஒரு கைப்பிடி எடுத்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ள வேண்டும்.. அதை வடிகட்டி, எலுமிச்சை பழச்சாறு, தேன் சேர்த்து கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அல்லது இரவு உணவு சாப்பிட்ட அரை மணிநேரம் கழித்துக் குடிக்கலாம்..
முருங்கை துவையல்: வாணலில் எண்ணெய் ஊற்றி, கடுகு, வெங்காயம், காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பு, பூண்டு, சுத்தம் செய்யப்பட்ட முருங்கைக்கீரை சேர்த்து வதக்கி உப்பு சேர்ரக்க வேண்டும்..
பிறகு, சிறிது புளியும் சேர்த்து கிளறி இறக்கி, வதக்கிய அனைத்து பொருட்களும் ஆறியவுடன் மிக்சியில் போட்டு தண்ணீர் தெளித்து அரைத்து கொள்ள வேண்டும். பிறகு அதே வாணலில் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டினால், அதுவே முருங்கை துவையல்.
வாழைத்தண்டு: இந்த கீரையை வாழைத்தண்டுடன் சேர்த்தும் சமைக்கலாம்.. வாழைத்தண்டில் நாரை மட்டும் எடுத்து விட்டு மெல்லி துண்டுகளாக வெட்டிக்கொண்டு, அதன் நிறம் மாறாமல் இருக்க மோரில் போட்டு வைத்துவிட வேண்டும்.
பிறகு. வாணலில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், ப.மிளகாய், சின்ன வெங்காயம் சேரத்து தாளிக்க வேண்டும். இப்போது, சுத்தம் செய்யப்பட்ட வாழைத்தண்டையும் சேர்த்து சிறிது நேரம் வேக விட வேண்டும். பிறகு, முருங்கைக் கீரையையும் சேர்த்து வேகவைத்து இறக்கிவிட வேண்டும். இதில் தேங்காய் துருவல் அல்லது உடைத்த வேர்க்கடலை சேர்த்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications