பூலாங்கிழங்கு.. அதென்ன வெள்ளை மஞ்சள்.. அந்த பிரச்சனையை அடியோடு விரட்ட உதவும் "கிச்சிலி கிழங்கு".. பலே
சென்னை: அன்றைய காலங்களில், நம் தாத்தா பாட்டிகளுடன் வீடுகளில் சேர்ந்தே பயணித்தது, ஏராளமான மூலிகைகள்.. அதனால்தான், ஆரோக்கிய வாழ்வு தழைத்தோங்கி காணப்பட்டது. அப்படிப்பட்ட மூலிகைகளுள் ஒன்றுதான் பூலாங்கிழங்கு.. வீடுகளில் வளர்க்கப்பட்ட மூலிகைகளுள் இதுவும் ஒன்றாக திகழ்ந்திருக்கிறது.
பூலாங்கிழங்கு அல்லது கிச்சிலி கிழங்கு என்பார்கள்.. சிலர் இதனை வெள்ளை மஞ்சள் என்றும் சொல்வார்கள்.. ஆனால், வெறும் வாசனைக்கான பொருளாக மட்டுமே பூலாங்கிழங்கு பயன்படுவதில்லை.

இஞ்சி + மாம்பழம்: இது பார்ப்பதற்கு இஞ்சி போலவே இருக்கும்.. ஆரஞ்சு கலரில் கடினமாக காணப்படும்.. கசப்பு சுவையை கொண்டிருக்கும்.. மாம்பழம் போன்ற வாசனை இருக்கும்.. அதனால்தான், அம்பா மஞ்சள் என்றும் இதனை சொல்வார்கள்.
மஞ்சளுடன் சேர்த்து அரைத்து பூசி குளித்தால் உடல் நாற்றம், வியர்வை நாற்றம் இருக்காது.. குழந்தைகளை இதில்தான் குளிப்பாட்டுவார்களாம்.. சுருக்கமாக சொல்லப்போனால், மஞ்சள் + இஞ்சி இந்த இரு பொருட்களின் மருத்துவ குணங்கள் இந்த பூலாங்கிழங்கில் அடங்கி உள்ளன.
கிச்சிலி கிழங்கு: வடமாநிலங்களில் இதில் ஊறுகாய் போடுவார்ககளாம்.. சில வெளிநாடுகளில் மசாலா பொருளாக பயன்படுத்துவார்களாம்.. சிலர் இந்த கிழங்கை வைத்து டீ போட்டு குடிப்பார்கள்.. நம்முடைய ஊர்களில், இந்த கிச்சிலி கிழங்கை பொடி செய்து விற்கிறார்கள்..
முக்கியமாக, வேர்ப்பகுதி கிழங்காக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.. இந்த பொடியை நாமும் வீட்டிலேயே தயார் செய்யலாம்.. இந்த கிழங்கை உலர்த்தி இடித்து பவுடராக்கி, சலித்து வைத்துக்கொண்டு, பலவிதமாக பயன்படுத்தலாம்.. இந்த பொடியை, அரை கிராம் மட்டுமே எடுத்து, தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலே போதும், ஏகப்பட்ட பிரச்சனைகள் தீரும்..

வாதவலிகள்: வறட்டு இருமல், தொண்டைக்கட்டு, காய்ச்சல் போன்றவை நீங்கும். அல்லது இந்த பொடியை, நீரில் கலந்து பற்றுப்போட்டால், வாதவலிகள் விலகும்.. உடலிலுள்ள காயங்களுக்கும், தோல் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வை தரும்..
நுரையீரல் பிரச்சனைகளுக்கெல்லாம் பெருத்த தீர்வை இந்த கிழங்கு தருகிறது.. ஜீரண சக்தியையும் அதிகரிக்க செய்கிறது. குடல் சார்ந்த பிரச்சனைகளையும் சரி செய்கிறது.. நிறைய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள இந்த பூலாங்கிழங்கு, உதவுகிறது.
சுவாச மண்டலத்தையும் பலப்படுத்தகிறது.. அவ்வளவு ஏன், அல்சர் புண்களையே ஆற்றக்கூடிய சக்தி இந்த பூலாங்கிழங்குக்கு இருக்கிறதாம்.
காஸ்மெடிக்ஸ்: பெரும்பாலும் மருந்துகள், அழகுசாதன பொருட்களில் இந்த கிச்சிலி கிழங்குகளை பயன்படுத்துவார்கள்.. காரணம், சருமத்துக்கு ஆரோக்கியம் என்பதுடன், வயதான தோற்றத்தையும் தாமதப்படுத்தும் பண்பு இந்த கிழங்குக்கு உண்டு. உள்ளூர உறுப்புகளுக்கும் சரி, வெளிப்புற தோற்றத்துக்கும் சரி, இந்த வெள்ளை மஞ்சள் பெரும்பலனை தருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications