ஹெல்த் வாக்.. கலக்குறாரே சுப்ரமணியன்.. தமிழக அரசின் சூப்பர் நியூஸ்.."நவம்பர் 4" ரெடியாயிருங்க மக்களே
சமீபத்தில், போலந்தில் உள்ள லாட்ஸ் மருத்துவ பல்கலைக்கழகம் சுமார் 2,27,000 பேரின் தரவுகளை வைத்து ஆய்வு ஒன்றை நடத்தியிருந்தது.. இந்த ஆய்வு முடிவுகளின்படி, இதய ஆரோக்கியம், மனச்சோர்வு, சோர்வை நீக்குதல், மனநிலையை மேம்படுத்துதல், மூட்டுகளில் குறைந்த அழுத்தத்தை உருவாக்குதல், எடை அதிகரித்தலை தடுத்தல், புற்றுநோய் ஆபத்தை குறைத்தல் இப்படி பல நன்மைகளை கொண்டுள்ளதாம் "நடைப்பயிற்சி".சென்னை: தமிழக மக்களின் உடல்நலனில் அக்கறை கொண்டு, அடுத்த அதிரடியை அரசு கொண்டுவரப்போகிறது.. இதற்கான அறிவிப்பை சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
திமுக இந்த முறை ஆட்சிப்பொறுப்பேற்றதுமே, சிங்கார சென்னை திட்டத்தில் கூடுதல் கவனத்தை செலுத்தி வருகிறது.. இது முதல்வர் ஸ்டாலினின் கனவுத்திட்டமாகவும் உள்ளது. அதனால்தான், பட்ஜெட் அறிவிப்புகளில்கூட, சிங்கார சென்னைக்கு பிரத்யேகமான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

சிங்கார சென்னை: எனவே, பூங்காங்கள், பாலங்கள், சாலைகள், என பல்வேறு விஷயங்களில் அதிக அக்கறையை செலுத்தி வருகிறது. அந்தவகையில், சென்னையின் முக்கிய சாலைகளிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன..
ஏற்கனவே, இருந்த பகுதிகளை, சீரமைத்து, புனரமைத்து வருவது ஒருபுறமும், சாலைகளை அகலமாக்குவது, புதிய அலங்கார அமைப்புகளை உருவாக்குவது போன்ற பணிகள் மறுபுறமும் நடந்து வருகின்றன. சமீபத்தில்கூட அண்ணாசாலையில் வாகன ஓட்டிகளின் வசதிக்காக, புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு, சென்னைவாசிகளின் கவனத்தையும் ஈர்த்தது. இனி நிறைய பாலங்களும் திறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு குட்நியூஸ் சொல்லி உள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.. சென்னையில் அவர் பேசும்போது, "நாங்கள் ஜப்பான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த போது அங்கு ஹெல்த் வாக் என்ற சாலை அமைக்கப்பட்டிருந்தது. இது என்ன? என்று அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள், மக்களிடையே நடைப்பயிற்சி பழக்கத்தை ஏற்படுத்த இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளதாக சொன்னார்கள். அந்த சாலைகள் 8 கி.மீ தூரத்திற்கு மட்டுமே அமைக்கப்பட்டிருந்தது.
ஆரோக்கியம்: இதுகுறித்து நாங்கள் கேட்டபோது, 8 கி.மீ என்பது 10 ஆயிரம் அடிகள் ஆகும். ஒருவர் தினமும் 10 ஆயிரம் அடிகள் நடந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதனால், 8 கி.மீ தூரத்திற்கு அமைத்துள்ளதாக அவர்கள் காரணம் கூறினார்கள். இதற்கு பிறகு, நாங்கள் தமிழ்நாட்டிற்கு திரும்பியதும், இந்த அருமையான திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்தேன். உடனே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு 38 மாவட்டங்களிலும் இந்த திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஹெல்த் வாக் சாலை அமைக்கப்பட்டுள்ளன. இந்த சாலையின் இருபுறங்களிலும் மரங்கள் நடப்பட்டுள்ளது. இதைத்தவிர, விழிப்புணர்வு பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் முத்துலட்சுமி ரெட்டி பார்க்-ல் இருந்து பெசன்ட் நகர் பீச் வழியாக அன்னை வேளாங்கன்னி சர்ச் வழியாக மீண்டும் முத்துலட்சுமி ரெட்டி பார்க் வரை சாலை அமைக்கப்பட்டிருக்கிறது.
முதல்வர் ஸ்டாலின்: முதல்வர் ஸ்டாலின் வரும் நவம்பர் 4-ம் தேதி இந்த திட்டத்தை தொடங்கி வைக்கின்றார். அன்று காலை 6 மணிக்கு தொடங்கி வைத்து அவர் நடைப்பயிற்சியும் மேற்கொள்ளவுள்ளார் என்றார் அமைச்சர் சுப்பிரமணியன்.
சமீபத்தில், போலந்தில் உள்ள லாட்ஸ் மருத்துவ பல்கலைக்கழகம் சுமார் 2,27,000 பேரின் தரவுகளை வைத்து ஆய்வு ஒன்றை நடத்தியிருந்தது.. இந்த ஆய்வு முடிவுகளின்படி, இதய ஆரோக்கியம், மனச்சோர்வு, சோர்வை நீக்குதல், மனநிலையை மேம்படுத்துதல், மூட்டுகளில் குறைந்த அழுத்தத்தை உருவாக்குதல், எடை அதிகரித்தலை தடுத்தல், புற்றுநோய் ஆபத்தை குறைத்தல் இப்படி பல நன்மைகளை கொண்டுள்ளதாம் "நடைபயிற்சி".
இதய நோய்: ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தபட்ச 2,337 அடிகள் நடந்தால், இதய நோய் சம்பந்தமான எந்த பிரச்சனையும் வராது என்றும் அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. அதாவது, ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 6,000 முதல் 10,000 அடிகள் நடந்தால், உடல் ஆரோக்கியத்துடன் இருக்கலாம் என்றும் ஆய்வு கூறுகிறது. சுருக்கமாக சொல்லப்போனால், தினமும் 4,000 அடிகள் நடப்பவர்கள் மரணம் முதல் இதய நோய் பாதிப்பு வரை தள்ளி போடலாம் என்று தெரிவித்திருந்தது அந்த ஆய்வின் முடிவு.
இப்படிப்பட்ட சூழலில், 10 ஆயிரம் அடிகள் நடப்பதற்கேற்றவாறு, ஹெல்த் சாலையை தமிழக அரசு கொண்டுவருவதும், பொதுமக்களின் உடல்நலனில் அக்கறை செலுத்தி வருவதும், மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications