முருங்கை மரத்தின் ஸ்பெஷாலிட்டி.. மாதவிடாய் முதல் மூட்டுவலி வரை விரட்டும் முருங்கை பிசின்.. விடாதீங்க
சென்னை: முருங்கை இலை, வேர், பூ, காய், பட்டை, என அனைத்து பாகங்களிலும் உள்ள சத்துக்களை விட அதிகமான சத்துக்கள் முருங்கையின் பிசினில் உள்ளதாக கூறுகிறார்கள். இந்த பிசினை எப்படி பயன்படுத்தலாம்? இதன் நன்மைகள் என்னென்ன?
முருங்கை மரங்கள் வெளித்தள்ளும், சிவப்பு நிற கெட்டிப்போன்ற பொருளே பிசின் என்பார்கள்.. மரம் வெளியேற்றிவிடுவதால் இதை கழிவு என்று நினைக்கக்கூடாது. முருங்கையின் பிரதான சத்துக்களே இந்த பிசினில்தான் உள்ளது.

சத்துக்கள்: வைட்டமின் A, C, பொட்டாசியம், புரதம் சத்துகள், கால்சியம், சுண்ணாம்புச்சத்து, நார்ச்சத்துக்கள், வேதிப்பொருள்கள், தாது உப்புகள், என ஏகப்பட்ட சத்துக்கள் இந்த பிசினில் உள்ளன.
இதனை பவுடர் வடிவில் சாப்பிடலாம்.. அல்லது லேகியம் போல தயாரித்து சாப்பிடலாம்.. அல்லது நீரில் ஊறவைத்து குடிக்கலாம். எப்படியெல்லாம் இந்த பிசினை பயன்படுத்தினால், என்னென்ன நோய்கள் தீரும் என்று பார்க்கலாம்.
1. முருங்கையின் பிசினை சுத்தமாக கழுவி, தண்ணீரில் இரவு ஊறவைத்து விட வேண்டும். மறுநாள் காலையில், அதே தண்ணீரில் கலக்கினால், ஜெல் போல வந்துவிடும். இதனை பசும்பாலுடன் சேர்த்து கலந்து குடிக்கலாம். இப்படி செய்தால், ஆண்களின் நரம்புத்தளர்ச்சி நீங்கி, உடலுக்கு வலு தரும் என்பார்கள்.
2. இந்த பிசினை உடைத்து, நெய்யில் வறுத்து தூள் செய்து, மருந்தாகவும் பயன்படுத்தலாம். இதனால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவதுடன், மூட்டுவலி, முழங்கால் வலிகளும் நீங்கிவிடும்.
பலமும், உறுதியும் பெற:
3. 1 ஸ்பூன் நெய்யில், முருங்கை பிசின் பொடியை 1 ஸ்பூன் சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதில், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடிவைத்துவிட்டு, காலையில் பிசின் தண்ணீரை வடிகட்டி குடிக்கலாம். அல்லது சூடான சாதத்தில் கலந்து நெய் சேர்த்து சாப்பிடலாம். இதனால், உடலில் பலமில்லாதவர்களுக்கு பலம் கிடைக்கும்.
4. முருங்கை பிசினை நெய்யில் வறுத்து தூள் செய்து பவுடராக்கி கொண்டு, இரவு நேரத்தில் கொதிக்கின்ற நீரில் போட்டு அப்படியே வைத்திருக்க வேண்டும். நடைபயிற்சிக்கு பிறகு, வெறும் வயிற்றில் இதை குடித்துவிட்டு, பழங்களை மட்டும் காலை உணவாக சாப்பிட்டு வந்தால், உடல் கட்டுக்குள் வரும். புத்துணர்ச்சியும் கிடைக்கும்.
5. தலைவலியால் அவதிப்படுபவர்கள், இந்த முருங்கை பிசின் பொடியை தலையில் பற்று போட்டு வந்தால் உடனே நிவாரணம் கிடைக்கும்.
ரத்த விருத்தி பெருக:
6. வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும் திறன் இந்த பிசினுக்கு உண்டு. எனவே, அனீமியால் அவதிப்படுபவர்கள், இரும்புச்சத்து நிறைந்த இந்த பிசினை உபயோகித்து வரலாம். இது ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்க செய்கிறது.
7. முருங்கை பிசினை நெய்யில் வறுத்து தூள் செய்து மூட்டுவலி ஏற்படும் போது 1 ஸ்பூன் பொடியை பாலில் சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் மூட்டு வலி குணமாகிவிடும்... காரணம், இந்த பிசினில் கால்சியம் ஏராளமாக நிறைந்திருக்கிறது.
8. காது வலி இருந்தால், காயவைக்காத, பச்சை பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால், காது வலி நின்றுவிடும்.
மாதவிடாய் தொந்தரவு:
9. இளநரை, முடி அதிகம் உதிர்தல் போன்ற பிரச்சனைகளுக்கு முருங்கை பிசின் சிறந்த தீர்வாகும். பிசின் மட்டுமல்ல, இந்த மரத்தின் வேர்களிலும் இதற்கான சத்துக்கள் ஏராளமாக உள்ளன. அதனால்தான், பிசின், வேர்களை வைத்து லேகியங்கள் தயாரிக்கப்படுகின்றன. இது இளநரையை தடுத்து நிறுத்தக்கூடியவை.
10. பெண்களின் உடலில் ஊட்டச்சத்துக்களை தரக்கூடியது முருங்கையின் பிசின்.. மாதவிடாய் பிரச்சினைகளை சரிசெய்து, மாதவிடாய் சுழற்சி முறையற்று இருந்தால், அதனையும் இயல்புக்கு கொண்டு வரக்கூடியது. முக்கியமாக, பிரசவத்திற்கு பிறகு, இழந்த வலுவை மறுபடியும் பெறுவதற்கும் இந்த பிசினைதான், கிராமப்புறங்களில் பெண்களுக்கு தருவார்கள். இத்தனை பயனுள்ள பிசினை, மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று சாப்பிடுவதே சிறந்த ஆரோக்கியமாகும்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications