"15,000 பேரை கொல்வதே எனது திட்டம்.." மும்பை முஹர்ரம் ஊர்வலத்தில் விஷ மாத்திரை கொடுத்தவர் வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் நடைபெற்ற மொஹர்ரம் ஊர்வலத்தின் போது விஷ மாத்திரை கொடுத்தாக கைது செய்யப்பட்ட நபர், ஆயிரக்கணக்கான மக்களைக் கொல்லத் திட்டமிட்டதாக அதிர்ச்சியூட்டும் வாக்குமூலத்தை அளித்துள்ளார். இந்த ஊர்வலத்தில் பங்கேற்ற பலரைக் கொலை செய்ய வேண்டும்.. பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்துவதே தனது நோக்கம் என்று அவர் ஒப்புக்கொண்டுள்ளார். கைது செய்யப்பட்ட பிறகு, தான் குறைந்தது 15,000 பேரைக் கொல்ல விரும்பியதாக அந்த நபர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களால் மொஹர்ரம் அனுசரிக்கப்பட்டது. நாட்டின் பல பகுதிகளில் மொஹர்ரம் முன்னிட்டு ஊர்வலங்களும் நடத்தப்பட்டது. அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்திலும் மொஹர்ரம் நடந்தது. அப்போது தான் பெரும் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அங்கு மக்களுக்கு விஷ மாத்திரையைக் கொடுத்த கொலை செய்யும் முயற்சி நடந்துள்ளது.

Mumbai Moharram Mass Poisoning Case Mumbai Moharram

மொஹர்ரம் ஊர்வலம்

மொஹர்ரம் ஊர்வலத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த மாபெரும் சதித்திட்டத்தை மும்பை போலீசார் முறியடித்துள்ளனர். பைகுல்லா பகுதியில் நடைபெற்ற மொஹர்ரம் ஊர்வலத்தின் போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் அங்கிருந்த நபர்களுக்கு மாத்திரை வழங்குவதைக் கவனித்தனர். உடனடியாக அந்த மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. எலிகளைக் கொல்லப் பயன்படுத்தப்படும் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த 'ஜிங்க் பாஸ்பைடு' (zinc phosphide) என்ற மருந்து அந்த மாத்திரைகளில் கலக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கொல்ல சதி

இது குறித்துப் பேசிய மத்திய மண்டலம்-1 இன் துணைக் காவல் ஆணையர் ஜெயந்த் மீனா, "பொதுமக்கள் பலருக்குப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில், இந்த விஷ மாத்திரையைக் கொடுத்துள்ளான். மக்களுக்குச் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக இதை வலிநிவாரணிகள் என்று சொல்லி மாத்திரைகளைக் கொடுத்துள்ளான்.

அதிகாலை 4 மணியளவில், சல்மான் என்ற நபர் இந்த மாத்திரைகளில் ஒன்றைச் சாப்பிட்டுள்ளார். உடனடியாக அவருக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.. இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். சந்தேக நபரைக் கண்டறிந்து கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த ஊர்வலத்தைக் குறிவைத்து மிகப் பெரிய உயிரிழப்பை ஏற்படுத்தச் சதி செய்ததை அந்த நபர் ஒப்புக்கொண்டார்" என்றார்.

விஷ மாத்திரை

கைது செய்யப்பட்ட நபர் கடந்த 15 நாட்களாக மும்பையில் தங்கியிருந்து இந்த சதி திட்டத்தைத் தீட்டியுள்ளார். இதற்காக அவர் 50 கிலோ ஜிங்க் பாஸ்பைடு விஷத்தையும், 30,000 காலி கேப்சியூல்களை வாங்கியுள்ளார். இந்தக் காலி கேப்சியூலில் விஷ பொடியை நிரப்பி, அவற்றை வலிநிவாரணி மாத்திரை என்று பொய் கூறி கொடுப்பதே அவரது திட்டம். எலிகளை கொல்லப் பயன்படுத்தப்படும் இந்த நச்சுத்தன்மை வாய்ந்த கெமிக்கல அந்த கேப்சியூல் மாத்திரைக்குள் இருந்ததை விசாரணையில் காவல்துறை உறுதி செய்துள்ளது.

மும்பை போலீசாரின் விரைவான நடவடிக்கையால், மிகப் பெரிய அசம்பாவிதமும் சாத்தியமான பேரழிவும் தடுக்கப்பட்டுள்ளது. இதுவரை காவல்துறையினரால் 14,900 விஷ மாத்திரைகளைப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள விஷ மாத்திரை குறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பெயிண்ட் தொழில் செய்து வரும் இந்த நபர், தனது தெரிந்த நபர்கள் மூலம் இந்த விஷத்தை வாங்கியுள்ளார்..

தீவிரவாத செயல்?

மேலும், மாத்திரைக்குப் பயன்படும் காலி காப்சியூல்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். மேலும், அவர் கடந்த சில ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கும் சென்றதாகக் கூறப்படுகிறது. எனவே, இந்த கொலை முயற்சியில் வெளிநாட்டினர் தொடர்பு இருக்குமோ.. அல்லது அவருக்கு வேறு யாராவது கூட்டாளிகள் இருக்கிறார்களா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+