ஆசனவாயில் ரத்தமா.. மூலநோய் மிரட்டுதா.. முளையிலேயே விரட்டலாம்.. ஈஸியா விரட்டலாம்.. அற்புத பழம் இதுதான்
சென்னை: உணவுப்பழக்கவழக்கமே பெரும்பாலான நோய்களுக்கு காரணமாகிறது.. இதே உணவுப்பழக்கவழக்கம்தான், பெரும்பாலான நோய்களுக்கு தீர்வாகின்றன.. அந்தவகையில் மூல நோய்க்கும் முளையிலேயே தீர்வு கிடைத்துவிடும்.
மூலநோய் வர பல்வேறு காரணங்கள் உள்ளன.. ரொம்ப நாளாக மலச்சிக்கல், மலம் கழிப்பதில் சிக்கல் இருந்தால் மூலநோய் வர வாய்ப்புள்ளது...

காரணங்கள்: ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பது, ஒவ்வாமைக்குரிய உணவுகளை சாப்பிடுவது, அல்லது அதிக காரமான உணவை சாப்பிடுவது, அதிகமாக வெயிட் தூக்குவது, நார்ச்சத்து குறைவாக உள்ள உணவை சாப்பிடுவது என, மூலம் வருவதற்கு இப்படி பல்வேறு காரணங்கள் உள்ளன.
உணவு முறைகளில் மூலநோய் வராமல் தடுக்கலாம்.. அல்லது ஆரம்பநிலை மூலநோயையும் உணவு முறைகளில் குணப்படுத்திவிடலாம்.. ஆனால், மூலநோய் அதிகமானால், ரத்தக்கசிவுகள் ஏற்பட்டால், உடனடியாக டாக்டரை சந்திக்க வேண்டும்..
என்னென்ன உணவுகள்: நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வரவேண்டும்.. அதேபோல எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளை எடுத்து கொள்ளலாம்.. அதேபோல, குளிர்ச்சியான உணவுகளை சாப்பிட்டு வரவேண்டும்.. முக்கியமாக, உடல் சூட்டை தரக்கூடிய உணவுகளை தொடவே கூடாது.. சுருக்கமாக சொன்னால், மலம் கழிப்பதில் எந்த சிரமமும் இல்லாதவாறு, உணவுமுறைகள் இருக்க வேண்டும்.
மலச்சிக்கல்: எலுமிச்சை, சாத்துக்குடி சப்போட்டா, திராட்சை, ஆப்பிள், வாழைப்பழம், தர்பூசணி, முலாம்பழம், அவகோடா, பப்பாசி பழம், பேரிக்காய், மாதுளை போன்ற பழங்களை சாப்பிட வேண்டும்.. இதில் ஆப்பிள் மிகவும் நல்லது.. இதில், பெக்டின் என்ற நார்ச்சத்து உள்ளதால், மலச்சிக்கலுக்கு நிவாரணம் கிடைக்க தூண்டுகிறது..
காய்கறிகள்: தக்காளி, வெங்காயம், முள்ளங்கி, ப்ரக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், கேரட், புடலங்காய், கொத்தமல்லி போன்ற காய்கறிகளை எடுத்து கொள்ள வேண்டும். இதில், சிலவற்றை பச்சைக்காய்கறிகளாகவும் சாப்பிட வேண்டும். வெந்தயக்கீரை, பசலைக்கீரை குளிர்ச்சியை தரக்கூடியது.. எண்ணெய், காரம், உப்பு அதிகமாக சேர்க்காமல் சமைக்க வேண்டும்.. ஆனால், உணவில் விளக்கெண்ணெய் சேர்த்து கொண்டால் இன்னும் பலன்கிடைக்கும்.
அதேபோல, கஞ்சித்தண்ணீர் என்று சொல்லப்படும் பழைய சாதம் மூலத்துக்கு மிகச்சிறந்த தீர்வாக உள்ளது.. பழைய சாதத்தில் தண்ணீர் ஊற்றி, சின்ன வெங்காயம், கல் உப்பு போட்டு மூடி வைத்துவிட்டாலே போதும்.. மறுநாள் காலை வெறும் வயிற்றில் இந்த பழைய கஞ்சியை 10 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால், மூல நோய்க்கு நிவாரணம் கிடைக்கும்.
பழைய சாதம்: பழைய சாதத்தை, இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைத்துவிட்டால், லட்சக்கணக்கான நல்ல, நல்ல பாக்டீரியாக்கள் உருவாகிவிடும்.. இதை வெறும் வயிற்றில் குடிக்கும்போது, உடல் உஷ்ணம் குறையும்... மிகச்சிறந்த மலமிளக்கி.. அல்சர் புண்களும் மெல்ல மெல்ல ஆறும்.. சிறுகுடல் ஆரோக்கியம் அடையும்.. மிகச்சிறந்த எனர்ஜி நிறைந்த பானமாகவும், திகழ்கிறது.
புட்டு, இடியாப்பம், இட்லி போன்ற உணவுகளை சாப்பிடுவதால் எளிதில் ஜீரணமாகும்.. நிறைய தண்ணீர் குடிப்பதுடன், யோகாவும் மூலத்திலிருந்து விடுபட உதவுகிறது.. யோகா செய்துவந்தால், மலச்சிக்கல், அஜீரணம் நீங்குகிறது..
பருப்பு வகைகள்: அதேபோல பருப்பு வகைகளை நிறைய சாப்பிட வேண்டும்.. இதனால், உணவு எளிதில் செரிமானமாகும்.. ஒருவேளை மூலநோய்க்கு சிகிச்சை எடுத்து கொண்டால், அரிசி, சோளம், ஓட்ஸ், பார்லி போன்றவை தவிர்க்கவே கூடாது என்பார்கள். செரிமானத்தை எளிதாக்க இந்த உணவுகளும் உதவுகின்றன..!!
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications