Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவசரப்பட்டுட்டீங்களே டிஐஜி சார்! தீபிகா படுகோன் டூ சைப் அலி.. ஓசிடி பாதித்தும் சாதித்தவர்கள் பலர்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தீபிகா படுகோன் முதல் சன்னிலியோன் வரை அஜய் தேவ்கன் முதல் சல்மான் கான் வரை இத்தனை பேர் மன அழுத்த நோயான ஓசிடியால் பாதிக்கப்பட்டு இன்று சிகிச்சைகளை மேற்கொண்டு சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் டிஐஜி விஜயகுமார் ஏனோ அவசரப்பட்டுவிட்டார்.

கோவை சரக டிஐஜி விஜயகுமார் கடந்த வெள்ளிக்கிழமை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கு பணிச்சுமையா அல்லது குடும்ப பிரச்சினையா என்ற கேள்வி எழுந்த நிலையில் அவர் ஓசிடி எனும் மன அழுத்தத்திற்கு மருந்து சாப்பிட்டு கொண்டிருந்தார் என அவருடன் பணியாற்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் ஒரு டாக்டராக இல்லாமல் அவ்வப்போது டாக்டரை மாற்றி கொண்டே இருப்பார் என்கிறார்கள். இந்த நிலையில் ஓசிடி எனும் பிரச்சினை உயிரையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு இத்தனை பிரச்சினையா என மக்கள் அச்சமடைந்து வருகிறார்கள். ஆனால் முறையான சிகிச்சை இருந்தால் ஓசிடி பிரச்சினையை தூர தூக்கி போட்டுவிட்டு சாதிக்கலாம் என்பதற்கு எத்தனை உதாரணங்கள் இருக்கின்றன தெரியுமா?

பாலிவுட் நடிகர், நடிகைகள் முதல் ஹாலிவுட் நடிகர் வரை எத்தனையோ பேர் சாதித்து வருகிறார்கள். தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, கரீனா கபூர், சன்னி லியோன், வித்யா பாலன், ப்ரீத்தி ஜிந்தா, சல்மான் கான், பர்ஹான் அக்தர், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங், ஆயுஷ்மான் குர்ரானா, சைப் அலிகான், அலி பாசில், இம்ரான் கான், ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ ஆகியோர் இந்த ஓசிடியால் பாதிக்கப்பட்டு இன்று ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.

ஹாலிவுட் நடிகர் லியானார்டோ

do you know Bollywood to hollywood who are all affected by OCD?

இவர் வாட்ஸ் ஈட்டிங் கில்பெர்ட் கிரேப் எனும் படத்திற்காக 1990 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர். இவரது படம் உலகம் முழுவதும் நல்ல வெற்றியை தேடித் தந்தது. தி ரிவேனன்ட் என்ற படத்திற்காக முதல் அகாதெமி விருதை 2015 இல் பெற்றார். பாப்டா விருதையும் பெற்றுள்ளார். இவர் தனக்கு ஓசிடி எனும் மன அழுத்த நோய் இருக்கிறது என தெரிவித்திருந்தார். மேலும் பப்பிள் கம்மில் காலை வைத்து கறையாகிவிடும் என்ற அச்சத்துடனே நடப்பதால் ஷூட்டிங்கிற்கு தாமதமாக வருவதாக தெரிவித்திருந்தார். இந்த நோயால் கோபம், தேவையில்லாத பயம், ஒரே சம்பவம் திரும்ப திரும்ப மனதில் தோன்றுதல் உள்ளிட்டவை ஏற்படும். உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இருந்தால் இந்த நோய் வர வாய்ப்பிருக்கிறது. சில நேரங்களில் தேவையற்ற எண்ணங்கள் எல்லாம் தோன்றும் என தெரிவித்திருந்தார்.

பிரியங்கா சோப்ரா

do you know Bollywood to hollywood who are all affected by OCD?

பிரியங்கா சோப்ரா பாலிவுட் நடிகை, மிஸ் இந்தியா, மிஸ் வேர்ல்டு பட்டம் பெற்றவர். இவர் உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் ஆர்வம் அதிகமுள்ளவர். அவர் தன்னை விட வயதில் சிறிய ஹாலிவுட் நடிகரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். ஆனால் இவருக்கு மன அழுத்த நோயான ஓசிடி இருப்பதாக அவரே சொல்லியுள்ளார். விருந்துகளுக்கு செல்லும் போது ஃபோர்க் ஸ்பூன், டிஸ்யூ பேப்பர் உள்ளிட்டவை சரியான இடத்தில் இல்லாவிட்டால் இவருக்கு கோபம் வந்துவிடும். இது போன்ற சிறிய விஷயங்களால் இவர் பார்ட்டியை அனுபவிக்க மறந்துவிடுவார்.

கரீனா கபூர் கான்

do you know Bollywood to hollywood who are all affected by OCD?

இந்தி சினிமாவில் மிகப் பெரிய ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் சைப் அலிகானை திருமணம் செய்து கொண்டுள்ளார். சிறிய வயதில் கொழு கொழுவென chubbyயாக இருந்தாலும் அவர் உடல் எடை கூடுவதை விரும்பவே மாட்டார். அவருக்கு குழந்தை பிறந்ததும் உடல் எடை கூடியதால் அவர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார். பிறகு கடுமையான உடற்பயிற்சிக்கு பிறகு இவர் மீண்டும் பழைய உருவத்தை அடைந்தார்.

தீபிகா படுகோன்

do you know Bollywood to hollywood who are all affected by OCD?

இந்தி சினிமா துறையில் முக்கிய நடிகையாவார். 2007 ஆம் ஆண்டு ஓம் சாந்தி ஓம் படத்தில் நடித்து பிரபலமடைந்தார். வீட்டில், அவருடைய அறையில், ஷூட்டிங்கில் ஒழுங்கில்லாமல் ஏதாவது இருந்தால் நரம்புகள் முறுக்கேறும் அளவுக்கு கோபம் வந்துவிடுமாம். அதை சரி செய்யாமல் அந்த இடத்தை விட்டு அவர் போகமாட்டாராம்.

சன்னிலியோன்

do you know Bollywood to hollywood who are all affected by OCD?

கவர்ச்சி பட நடிகை சன்னிலியோன் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவர் சில தமிழ் படங்களில் கூட நடித்துள்ளார். அவருடைய காலடி பாதங்கள் அழுக்காகாமல் இருக்க வேண்டும் என அவ்வப்போது பார்த்து கொண்டே இருப்பாராம். ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒரு முறை தன் பாதத்தில் அழுக்கு இருக்கிறதா என பார்ப்பாராம்.

வித்யா பாலன்

do you know Bollywood to hollywood who are all affected by OCD?

பத்மஸ்ரீ விருதை பெற்ற பாலிவுட் நடிகை வித்யா பாலன். The Dirty Picture என்ற படத்தில் நடித்திருந்தாலும் இவர் டேர்டி என்ற வார்த்தையை கேட்டால் பிடிக்காதாம். தன்னை சுற்றியுள்ள இடங்கள் எல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும் என நினைப்பாராம். தனது விளம்பரங்கள் மூலமும் சுத்தத்தை பேணி காக்கிறார். கிருமிகளிடம் இருந்தும் பாதுகாப்பாக இருப்பதை அவ்வப்போது உறுதி செய்து கொள்வாராம்.

ப்ரீத்தி ஜிந்தா

do you know Bollywood to hollywood who are all affected by OCD?

உயிரே படத்தில் சல்மான் கானுடன் நடித்தவர். இவரும் சுத்தம் குறித்து மிகவும் கவலைப்படுவாராம். கழிப்பறைகள் தூய்மையாக இல்லாவிட்டால் இந்த நடிகையால் பொருத்துக் கொள்ளவே முடியாதாம். ஹோட்டல் அறையாக இருந்தாலும் கேரவனாக இருந்தாலும் சுத்தம் இருக்கிறதா என்பதைத்தான் முதலில் பார்ப்பாராம்.

சல்மான் கான்

மான் வேட்டையாடிய வழக்கில் மிகவும் புகழ் பெற்றவர் சல்மான் கான். அது போல் நடைபாதையில் படுத்திருந்தவர் மீது குடித்து விட்டு காரை ஓட்டிய வழக்கும் இவர் மீது இருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு மேலாக நடிப்புலகில் இருந்து வருகிறார். உலகில் இருந்து விதவிதமான சோப்புகளை சேகரிப்பதில் ஆர்வம் உடையவர். அனைத்து சோப்புகளும் கைகளால் செய்யப்பட்டு மூலிகைகளால் ஆனவை என்றால் மட்டுமே அதை வாங்குவாராம். பாலிவுட்டிலேயே இவர்தான் சிறந்த சென்ட்டை வைத்திருக்கிறாராம். இதற்காக அவரை அனைவரும் பாராட்டுகிறார்கள்.

அஜய்தேவ்கன்

do you know Bollywood to hollywood who are all affected by OCD?

1990 களின் கனவுக்கன்னி கஜோலின் கணவர் அஜய் தேவ்கன். அண்மையில் இவருடைய மகள் ஒரு பார்ட்டியில் போதையில் ஆட்டம் போட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இவரும் சுத்தத்தைதான் விரும்புவாராம். தனது விரல் நுனியில் கூட அழுக்கு இல்லாமல் பார்த்து கொள்வார். கைகளில் எந்த வாசனையும் வரக் கூடாது என்பதற்காக சாப்பிடுவதற்கு கைகளை பயன்படுத்தவதை தவிர்ப்பாராம்.

ரன்வீர் சிங்

ஸ்டைல் ஐகான் என்ற பெயரை பெற்றவர். இவர் பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். வலிமையான நடிப்பை கொடுப்பதில் வல்லவர், அது போல் இவர் தனித்துவமான நடிகர். இவருக்கு இருந்த மன அழுத்தம் குறித்து தீபிகா படுகோன் முன்னொரு நாட்களில் விவரித்துள்ளார். இவர் அதிகமாக வாசனை திரவியங்களையும் சானிடைசர்களையும் டியோடிரன்ட்களையும் பயன்படுத்துவாராம், ஒவ்வொரு ஷாட்டின் போது கைகளை கழுவுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

சைப் அலிகான்

do you know Bollywood to hollywood who are all affected by OCD?

1993 ஆம் ஆண்டு நடிக்கத் தொடங்கினார். இவரது தந்தை கிரிக்கெட் வீரர் பட்டோடி. இவர் ஹீரோ, வில்லன், பிளே பாய் , காமெடி உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இவருக்கும் ஓசிடி இருந்ததாம். இவர் நீண்ட நேரமாக கழிப்பறையில் அமர்ந்திருக்கும் வழக்கத்தை கொண்டிருப்பராம். பாத்ரூமில் நூலகத்தையும் போன் கனெக்ஷனையும் வைத்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+