அக்கு அக்கா கொட்டுதா தலைமுடி.. இந்த 4 இலைகளே போதும்.. தலைமுடி கொட்டவே கொட்டாது.. கருகரு வளரும் முடி
சென்னை: தலைமுடி வளர்வதற்கு, செயற்கை மருந்துகளைவிட, இயற்கையான முறையில் எண்ணெய்யை பயன்படுத்தினாலே போதும்.. அந்தவகையில், வீட்டில் காய்ச்சி பலன்பயன்படுத்தக்கூடிய 3 விதமான எண்ணெய்களை பார்ப்போம்.
தலைமுடி உதிர்தலுக்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். ஆனால், நாம் உண்ணும் உணவுக்கு தலைமுடிக்கும் நேரடி சம்பந்தம் உள்ளதால், உணவு விஷயத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டி உள்ளது. அந்தவகையில், காய்கறிகள், கீரைகள், பழங்களுடன், போதுமான அளவுக்கு தண்ணீரை குடிக்க வேண்டும் என்பது அடிப்படையான விஷயம்.

எண்ணெய்கள்: அதேபோல, தலைமுடியை பராமரிக்க எண்ணெய்களை பயன்படுத்தியும் பலன் பெறலாம்.. அந்தவகையில், கரிசலாங்கண்ணி கீரையை வைத்து எண்ணெய் தயாரிக்கலாம்.
ஒரு வாணலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, அதில், கறிவேப்பிலை, வேப்பிலை, மருதாணி, கரிசலாங்கண்ணி போன்ற இலைகளை சேர்க்க வேண்டும்.. வெந்தயம், கருஞ்சீரகம், வெட்டி வேர் போன்றவற்றையும் சேர்த்து கலக்க வேண்டும்..
கற்றாழைகள்: இந்த கலவையில், கற்றாழையின் சதைப்பகுதியையும், சின்ன வெங்காயத்தையும், நெல்லிக்காயையும், இடித்து சேர்க்க வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக காய்ச்ச வேண்டும். பிறகு, காய்ச்சிய எண்ணெய்யை ஒருநாள் முழுவதும் அதே பாத்திரத்தில் வைத்து, மறுநாள் அதை வடிகட்டி எடுத்து பயன்படுத்த துவங்கலாம்.
அதேபோல, நொச்சி இலைகளின் சாறு எடுத்தும் எண்ணெய்யில் சேர்க்கலாம்.. அதாவது, நொச்சி இலைகளை இடித்து சாற்றினை தனியாக எடுத்து கொள்ள வேண்டும். இதனை நல்லெண்ணெய்யுடன் சேர்த்து காய்ச்ச வேண்டும். பிறகு, சூடுபொறுக்கு அளவுக்கு அந்த சூட்டிலேயே, எண்ணெய்க்கலவையை தலைக்கு குளித்து, அரைமணி நேரம் கழித்து குளித்து வந்தால், தலைமுடி உதிர்வது நிற்கும்.. தலைமுடி வளர்ச்சியும் பெற துவங்கும்.
கரிசலாங்கண்ணி: அதேபோல, கரிசலாங்கண்ணி, ஆவாரம்பூ இந்த இரண்டையும் அரைத்து உலர வைத்து, பிறகு, தேங்காய் எண்ணெயில் கலந்து, மிதமான சூட்டில் காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வந்தாலும் மிகுந்த பலன் தரும்.. அல்லது தேங்காய் எண்ணெய்யில், சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும். பிறகு, செம்பருத்தி பூ, செம்பருத்தி இலைகளை சேர்த்து நன்றாக காய்ச்சி எடுத்து தலைக்கு தேய்த்து வரலாம்.
அதேபோல, செம்பருத்தி, தேங்காய் எண்ணெய் கலந்தும் பயன்படுத்தலாம். செம்பருத்தி பூக்களையும், செம்பருத்தி இலைகளையும் கழுவி அதை ஈரமில்லாமல் அரைக்க வேண்டும்.. ஒரு பாத்திரத்தில், தேங்காய் எண்ணெய் ஊற்றி லேசாக சூடானதும், அதில், இந்த செம்பருத்தி விழுதை கொட்ட வேண்டும்.. இதிலேயே சிறிது வெந்தயத்தை பொடி செய்து போட்டு, கருகாமல் கொதிக்கவிட வேண்டும். இந்த எண்ணெய்யை வடிகட்டி வைத்து கொண்டு பயன்படுத்தலாம்.
பொன்னாங்கண்ணி: ஒரு வாணலில், பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை, செம்பருத்தி, இந்த 4 இலைகளுடன், வெட்டிவேர், அதிமதுரம், நெல்லிக்காய், கடுக்காய் சேர்க்க வேண்டும். பிறகு, தேங்காய்ப்பால் + தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி பயன்படுத்தலாம்.
அல்லது, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி, கறிவேப்பிலை, வெந்தயக்கீரை என இந்த 4 கீரைகளையும் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாணலில், தேங்காய் எண்ணெய்யை ஊற்றி, இந்த விழுதையும் கொட்டி காய்ச்ச வேண்டும். ஒருநாள் இதை அப்படியே விட்டுவிட்டு, மறுநாள் வடிகட்டி தலைமுடிக்கு பயன்படுத்தலாம்.












Click it and Unblock the Notifications