சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடலாமா? எந்தவகையான வாழைப்பழங்களை சாப்பிடலாம்?
சென்னை: சர்க்கரை நோயாளிகள் பழங்களை சாப்பிடலாமா? அதுவும் வாழைப்பழத்தை சாப்பிடலாமா? என்ன பழம் சிறந்தது?
வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி 6, வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள், மக்னீசியம், போன்றவை அடங்கி உள்ளன.. இதில் பொட்டாசியம் அளவு சற்று அதிகம். அதாவது, ஒரே ஒரு பழுத்த வாழைப்பழத்தில் மட்டும், ஒரு நாளைக்குத் தேவைப்படும் பொட்டாசியத்தின் அளவில் 11 சதவிகிதம் இருக்கிறதாம்.

ரஸ்தாளி: எல்லாவகையான பழங்களிலும் சர்க்கரைச்சத்து இருக்கும்போது, வாழைப்பழங்களில் இது சற்று அதிகமாகவே உள்ளது.. அதனால்தான், பூவம்பழம், ரஸ்தாளி போன்ற வாழைப்பழத்தை சர்க்கரை நோயாளிகள் தவிர்த்துவிட சொல்கிறார்கள். அதேசமயம், மஞ்சள் வாழைப்பழங்களையும் சாப்பிடலாம், ஆனால், வாரத்துக்கு 2 சிறிய பழங்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டுமாம்..
பச்சை வாழைப்பழத்தை எடுத்துக் கொண்டால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம் என்கிறார்கள்.. அதாவது, பச்சை நிறத்தில் உள்ள பழுக்காத வாழைப்பழத்தில் சர்க்கரை உயர்தல் குறியீடு (கிளைசிமிக்ஸ் இன்டக்ஸ்) குறைவாக இருப்பதாலும் செரிமானத்தை தாமதப்படுத்தும் நார்ச்சத்து கூடுதலாக இருப்பதாலும், நீரிழிவு நோயாளிகள், இந்த பழுக்காத பச்சை நிற வாழைப்பழத்தை சாப்பிடலாம் என்கிறார்கள்.
சர்க்கரை அதிகரிப்பு: இந்த பழத்தில், ஸ்டார்ச் கார்போஹைட்ரேட்டுகளின் செரிமானத்தை தாமதாமாக்குவதுடன், ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதையும் தடுப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன..
அதுமட்டுமல்ல, பச்சை வாழைப்பழத்திலுள்ள ஸ்டார்ச் கார்போஹைட்ரேட்டுகள், செரிமானத்தை மெதுவாக்கி, ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதையும் தடுக்கிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன.. மேலும், இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தி, ரத்த சர்க்கரை அளவையும் நிர்வகிக்க உதவுகிறதாம். பழுத்த வாழைப்பழங்களை விட பழுக்காத வாழைப்பழங்களில் குறைவான சர்க்கரையும், அதிக ஸ்டார்ச் எதிர்ப்புத் திறன் உள்ளது..
செவ்வாழை: அதேபோல, செவ்வாழையும் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது என்கிறார்கள். காரணம், இதில், நார்ச்சத்து அதிகமாக உள்ளன.. நேந்திரம் பழங்களிலும் நார்ச்சத்து நிறைய உள்ளது. எனினும், ஒரு நாளைக்கு, ஒரு சிறிய வாழைப்பழம் மட்டுமே சாப்பிட வேண்டுமாம்.
எனினும், சர்க்கரை நோயாளிகள், சர்க்கரைச்சத்து குறைவாகவும் நார்ச்சத்து சற்று அதிகமாகவும் உள்ள ஆப்பிள், கொய்யாக்காய், பேரிக்காய், சாத்துக்குடி போன்றவற்றை ஒரு நாளைக்கு ஒன்று என்று எடுத்து கொள்ளலாம்.. இதுவே பப்பாளியை எடுத்துக்கொண்டால், முற்றிலும் பழுக்காத, செங்காயாக உள்ள பப்பாளியை, 2 அல்லது 3 துண்டுகள் எடுத்துக் கொள்ளலாம்..அதுவும், ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் மட்டுமே மேற்கண்ட பழங்களை எடுத்து கொள்ள முடியுமாம்.












Click it and Unblock the Notifications