வெறும் இலையே போதும்.. ஆயுசை கூட்டும் "நிலவேம்பு" கசாயம்.. பல வியாதிகளை விரட்டும் நிலவேம்பு குடிநீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா தொற்று காலத்தில் அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயர் மட்டுமல்ல, அதிகமாக பயன்படுத்தப்பட்ட மூலிகைதான், நிலவேம்பு. ஆனால், வெறும் டெங்குவை போக்க மட்டுமல்லாமல், பல்வேறு வகைகளில் இந்த நிலவேம்பு பயன்படுகிறது.

சித்த மருத்துவத்தில் இந்த நிலவேம்புக்கென்று சிறப்பான இடம் என்றுமே உண்டு.. சிறியா நங்கை என்றும் இந்த செடியை சொல்வார்கள். ஆனால் அது தவறு... சிறியா நங்கையும் நிலவேம்பும் வேறு வேறு.

Do you know Excellent Benefits of Nilavembu and Nilavembu Kudineer is the Best Medicine for Diabetics

கசப்பு காய்: பார்ப்பதற்கு சிறிய அளவுதான் இந்த செடி இருக்கும்.. கசப்பு சுவை அதிகமாக உள்ள செடியாகும்.- மெத்தைல் சாலிசிலிக் அமிலம் இதில் நிறைந்து காணப்படுகிறது.. இந்த செடியின் வேரில் இருந்து கஷாயம் தயாரித்து ஒரு டம்ளர் வீதம் இரவில் மட்டும் 3 நாட்களுக்கு சாப்பிட்டு வர வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.

விஷக்கடி முதல் விஷஜூரம் வரை பஞ்சாய் பறக்க வைத்திடும் சக்தி இந்த மூலிகை செடிக்கு உண்டு. இந்த செடியின் எல்லா பாகங்களுமே மருத்துவக் குணங்கள் நிறைந்தவை.. குறிப்பாக, இந்த செடியின் இலைகளும், தண்டுகளும்தான் அளவிலாத நன்மைகளை அள்ளி தருகின்றன..

காய்ச்சல்கள்: நிலவேம்புக் குடிநீர், டெங்கு காய்ச்சல் மற்றும் மூட்டுக்களைப் பாதித்து, தாங்கமுடியாத வலியை உண்டாக்கும் சிக்குன்குனியா ஆகிய இரண்டு காய்ச்சல்களுக்கும் சிறந்த மருந்து.

டெங்கு, சிக்குன்குனியாவுக்கு எதிராக செயல்படுவதில் நிலவேம்பு குடிநீரை வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இந்த நிலவேம்பினை இடித்து, தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

வயிற்றுப்புழுக்கள்: 34 கிராம் பவுடரை எடுத்து, 4 கிராம் கிராம்புத்தூள் கலந்து, 700 மிலி வெந்நீரில் கொட்டி 6 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு வடிகட்டி, இதில், தினமும் 3 வேளையும், 15-30 மி.லி குடித்து வந்தாலே போதும், குளிர்ஜூரம் அகன்றுவிடும்.. அஜீரணம், வயிற்றுப்புழுக்களும் நீங்கிவிடும். கிராம்புத்தூளுக்கு பதிலாக, ஏலப்பொடியையும் சேர்த்து கொள்ளலாம். நிலவேம்பு இலையைச் சுத்தமான தண்ணீரில் ஊறவைத்து, குடிநீர் செய்து, குடித்துவர கல்லீரல் தளர்ச்சி, நரம்புவலி, அஜீரணம், குடல் பொருமல் நீங்கும்.

அல்லது, கைப்பிடி அளவு நிலவேம்பு பொடியை, அரை லிட்டர் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு, ஒரு மணி நேரம் கழித்து, 2 ஏலக்காய், 2 கிராம்பு சேர்த்து பாத்திரத்தை மூடிவைத்து, கொதிக்கவிட வேண்டும்.. தண்ணீர் சுண்டியதுமே தினமும் 2 வேளை தலா 60 மி.லி. சாப்பிட்டால் போதும்.. காய்ச்சல் குணமாகும். நீர்க்கோவை, மூக்கடைப்பு விலகும்.

Do you know Excellent Benefits of Nilavembu and Nilavembu Kudineer is the Best Medicine for Diabetics

சர்க்கரை நோய்: காய்ச்சல் இல்லாதவர்கள்கூட, இந்த நிலவேம்பினை 2 ஸ்பூன் பயன்படுத்தலாம்.. இதனால் செரிமானம் நன்றாக ஏற்பட்டு, பசி தூண்டிவிடப்படும்.. வாயு பிரச்சனைகள் விலகும்.. மலச்சிக்கல் தீரும்.. வீக்கங்கள் குறையும்.. புண்கள் ஆறும்.. வயிற்று வலி குணமாகும்..

அதிலும், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் மலச்சிக்கலுக்கு, நிலவேம்பு பெரிதும் கைகொடுக்கிறது. இதன் இலையை அரைத்து பாலுடன் கலந்து காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தாலே உடல் வலுவாகும். தாதுபலம் அதிகமாகும்..

அற்புத செடிகள்: இந்த இலைகளுடன் சிறிது மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டால் விஷக்கடி நீங்கும்.. அவ்வளவு ஏன்? இந்த இலைகளை அரைத்து சாப்பிட தரும்போது பாம்புக்கடி விஷமும் இறங்கிவிடுமாம்.. நம்முடைய வீடுகளில் வளர்க்கப்பட வேண்டிய செடிகளில் முதன்மையானது நிலவேம்பு..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+