Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்க்கரை நோயாளிகள் பழைய சோறு சாப்பிடலாமா? இவ்ளோ நாளா இது தெரியாம போயிருச்சே.. அசத்தும் "பழைய சாதம்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்க்கரை நோயாளிகள், என்னதான் சாப்பிடுவது? எவ்வளவு சாப்பிடுவது? என்ற பல்வேறு குழப்பங்களும், சந்தேகங்களும் தொடர்ந்து நீடித்து வருகிறது.. அந்தவகையில், நீரிழிவு நோயாளிகள் பழைய சோறு சாப்பிடலாமா? என்ற சந்தேகம் உள்ளது.

நீராகாரம் - அதாவது நீச்சத்தண்ணி என்பார்கள்.. ஐஸ் பிரியாணி என்பார்கள்.. பழைய சோறு கஞ்சி என்பார்கள்.. மீந்துபோன இந்த பழைய சோறுதான், சீனாவின் பாரம்பரிய சாப்பாடாக இன்றும் உள்ளது.

Do you know Excellent Benefits of Old Cold Rice and Cold Rice is the Best Morning Food for diabetics


சிறந்த உணவு: நம்முடைய பக்கத்து மாநிலமான கேரளாவில்கூட, இதுபாரம்பர்யம் மிக்க உணவாக விளங்குகிறது. அவ்வளவு ஏன், உலகிலேயே பழைய சாதம் தான் ஊட்டச்சத்துமிக்க சிறந்த காலை உணவு என்று அமெரிக்க ஆய்விலேயே நிரூபணமாகி உள்ளது.

உண்மையை சொல்லப்போனால், வடித்த சாதத்தை விட, இந்த பழைய சோறு தண்ணீரில்தான் நிறைய சத்துக்கள் உள்ளன.. வழக்கமாக சாதத்தில் உள்ள இரும்பு சத்தைவிட, 21 மடங்கு இரும்புச்சத்து இந்த நீராகாரத்தில் உள்ளதாம். உடலில் எதிர்ப்பு சத்துக்களை அதிகரிக்க செய்வதால்தான், இதனுடன் வெங்காயத்தையும் சேர்த்து சாப்பிடுகிறார்கள்.

பாக்டீரியாக்கள்: இரவே சாதத்தில், தண்ணீர் ஊற்றி மூடி வைத்துவிட்டால், லட்சக்கணக்கான நல்ல, நல்ல பாக்டீரியாக்கள் உருவாகிவிடும்.. இதை வெறும் வயிற்றில் குடிக்கும்போது, உடல் உஷ்ணம் குறையும்... இது மிகச்சிறந்த மலமிளக்கி.. அல்சர் புண்களும் மெல்ல மெல்ல ஆறும்.. சிறுகுடல் ஆரோக்கியம் அடையும்.. எனர்ஜி நிறைந்த பானமாகவும், திகழ்கிறது.

புரதச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் நிறைந்துள்ளதால், உடல் எடையை குறைப்பதில் மிகப்பெரிய பங்கினை இந்த பழைய சோறு தண்ணீர் வகிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், வயதான தோற்றத்தை தள்ளி போட செய்கிறது. ஆனால், சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடலாமா? என்றால், நிச்சயம் சாப்பிடலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

ஆய்வு தகவல்: போஸ்னான் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த போலந்து ஆராய்ச்சியாளர்கள் குழு, சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது.. இந்த ஆய்வில் டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் சோதனை நடத்தியுள்ளது. அதில் அவர்களுக்கு 46 கிராம் கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி சாதம் சமைத்து சுட சுட பரிமாறப்பட்டுள்ளது... சிலருக்கு மட்டும் ஏற்கனவே சமைத்து 24 மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்த, பழைய சாதத்தை மறுபடியும் சூடாக்கி பரிமாறப்பட்டுள்ளது.

இறுதியில், அவர்களின் ரத்த சர்க்கரை அளவை ஒப்பிட்டு பார்த்தபோது, ரத்த சர்க்கரை அளவு கணிசமாக மாறியிருந்தது தெரியவந்ததாம். அதாவது, பழைய சாதம் சாப்பிட்டவர்களுக்கு நீரிழிவு நோய் குறைந்திருந்ததும், சுட சுட சமைத்து சாப்பிட்டவர்களுக்கு சர்க்கரை அளவு கணிசமான எகிறியிருந்ததும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

பழைய சாதம்: பழைய சாதத்தில் எதிர்ப்பு ஸ்டார்ச்கள் அதிகம் இருக்கிறதாம்.. அதேபோல, வைட்டமின் B நிறைய உள்ளதால், செரிமானமும் எளிதாகிறது.. ஆனால், இரவு ஊற வைக்கும்போதே, பழைய சாதத்தை, வெளியில்தான் வைக்க வேண்டுமே தவிர, ஃப்ரிட்ஜில் வைத்துவிடக்கூடாது.. சாப்பிடுவதற்கு கொஞ்ச நேரத்திற்கு முன்பு வேண்டுமானால், ஃப்ரிஜ்ஜில் வைத்து எடுத்து கொள்ளலாம்.

24 மணி நேர குளிர்வூட்டலுக்கு பிறகு மாவுசத்து ஜீரணிக்கக்கூடிய வகையில் மாறுவதே இதற்கு காரணம்.. இதனால், நீரிழிவு நோயாளிகளுக்கு எவ்வித ஆரோக்கிய குறைபாடும் ஏற்படாது என்கிறார்கள் நிபுணர்கள்.. இதனை ப்ரீபயாடிக் என்றும் சொல்கிறார்கள்.. இது நமது உடலின் ரத்தத்தில் எந்த விதத்திலும் சர்க்கரையின் அளவை உயர்த்தாமல் அதேசமயம், குடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறதாம்.

சூப்பர் உணவு: மொத்தத்தில், இந்த பழைய சோறு, சர்க்கரை நோயாளிகளின் குடல் தொடர்பான பிரச்சினைகளை எளிதாக தீர்க்கக்கூடியது.. அல்சர் முதல் கேன்சர் வரை எந்த நோயையும் அண்டாவிடாமல் தடுத்து நிறுத்தும் சக்தி இந்த பழைய சோறுக்கு இருக்கவே செய்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+