முருங்கை மரம்..முருங்கையின் பிசின் தெரியுமா? "அந்த" பிரச்சனையை அடியோடு தீர்க்கும் இயற்கை தங்கபஸ்பம்
சென்னை: உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் முருங்கைதான்.. வாரம் 3 முறையாவது முருங்கையை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
முருங்கை மரத்திலிருந்து வெளிவரும் பொருள்தான் முருங்கை பிசின்.. பார்ப்பதற்கு பிரவுன் கலரில் இருக்கும்.. ரப்பர் போல கெட்டித்தன்மை உடையதாக இருக்கும். முதலில் நீர்த்தன்மையுடன் காணப்பட்டாலும், நாளடைவில் இது இறுகி கெட்டியாகிவிடும். மரத்தின் பட்டைகளிலேயே ஆங்காங்கே இந்த பிசின்கள் ஒட்டிக் கொண்டிருக்கும்.

கால்சியம்: முருங்கைமரத்தில் உள்ள அதிகப்படியான கால்சியம் + சுண்ணாம்புச்சத்து + நார்ச்சத்து போன்றவை அனைத்துமே சேர்ந்து, மரத்திலிருந்து பசை போல வெளியே தள்ளும்.. அதற்குதான் பிசின் என்று பெயர்... வெளியே தள்ளிவிடுவதால், இதை வீணான பொருள் என்று நினைத்துவிடக்கூடாது. தங்கபஸ்பத்திற்கு இணையான சத்துக்கள் இந்த பிசினில் உள்ளது என்கிறார்கள்.
ஏராளமான சத்துக்களும், வேதிப்பொருள்களும், அமினோ அமிலங்களும், தாது உப்புகளும் இந்த பிசினில் அடங்கி உள்ளன.. இந்த பிசின்கள் உடலை வலுப்படுத்தக்கூடியது.. இரும்புச்சத்து உட்பட கால்சியம், வைட்டமின் A, C, பொட்டாசியம், புரதம் இப்படி பல சத்துகள் இதில் இருக்கின்றன. இந்த பிசினை பலவகைகளில், பலவித பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம்.
விந்தணுக்கள்: விந்தணுக்களை அதிகரிக்க செய்ய இந்த பிசின் உபயோகமாகிறது என்றாலும், உடல் எடை குறைய நினைப்பவர்களும், இதை பயன்படுத்தினால் பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
குறிப்பாக, ஜிம் செல்பவர்கள், அல்லது உடல் எடையை சீராக தக்க வைப்பவர்களுக்கு இந்த பிசின் கை கொடுக்கிறது.. இந்த முருங்கை பிசினை இரவில் தூங்க செல்லும்போது, ஊறவைத்துவிட வேண்டும்.. மறுநாள் காலையில், வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வேண்டும். இத்துடன், நார்ச்சத்து, நீர்ச்சத்து நிறைந்த பழங்களை மட்டும் காலை உணவாக எடுத்து வந்தால், மிகப்பெரிய மாற்றம் உடல் எடையில் தெரிய ஆரம்பிக்குமாம்.
ஜூஸ் நன்மைகள்: ஜூஸ் அல்லது டீ போல இதை தயாரித்து சாப்பிடலாம்.. எடை குறைப்பில் மிகப்பெரிய பங்கு இந்த முருங்கை இலை டீ-க்கு உள்ளது.. அதாவது, இந்த முருங்கை இலையை காய வைத்து, பொடியாக்கி, காலை வேளையில், டீயில் கலந்து முருங்கை இலை டீயாக குடித்து வரலாம்... உடல்எடை குறைக்க உதவுவதுடன், இதை குடிப்பதால், தோல் நோய்கள் மொத்தமாக தீரும்..
நீரிழிவு நோயாளிகளுக்கு டீ அல்லது காப்பியுடன் முருங்கை இலைப் பொடியை கலந்து உட்கொள்வதன் மூலம், ரத்த சக்கரை அளவை கட்டுப்படுத்தலாம்.. அல்லது ஜூஸ் போலவும் தயாரித்து சாப்பிடலாம்.. முருங்கை இலைகளை நன்றாக கழுவி ஒரு கைப்பிடி அளவிற்கு கொழுந்து முருங்கைகளை தனியாக எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications