முருங்கை பிசினை போல.. பற்பல பலன்தரும் பிசின் இதுதான்.. இத்துனூண்டு போதும்.. பிள்ளைப்பேறு உண்டாகுமாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முருங்கை பிசின் போலவே, மனித நலனுக்கு அருமருந்தாவது பாதாம் பிசினாகும்.. இந்த பிசின், பெண்களுக்கு தரும் நன்மைகளை லிஸ்ட் போட்டு சொல்ல முடியாது. அந்த அளவுக்கு பேருதவி புரிகின்றது.

பாதாம் மரத்தில், பசைபோல வடிவதுதான் இந்த பாசாம் பிசின். பார்ப்பதற்கு வெள்ளை கலர், அதாவது பழுப்பு நிறத்தில் காணப்படும்.. கெட்டியாக கட்டி போல இருக்கும்..

Do you know Health Benefits of Badam Pisin and Almond Gum is the Best Food for Women, children

பாதாம் பிசின்: இந்த பிசினில் நிறைய மருத்துவ குணம் உள்ளதால், நம்முடைய முன்னோர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தார்கள். இப்போதுகூட நாட்டு மருந்து கடையில், பாதாம் பிசின் விற்கப்படுகிறது.
மெலிந்த உடல் வாகு இருப்பவர்களுக்கு இந்த பிசினை தருவார்கள்.. இதனால் புசுபுசுவென்று உடல் சதையும், எடையும் அதிகரிக்கும்.. இதற்கு, ஒரு பாத்திரத்தில், பாதம் பிசினை போட்டு, அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, 8 மணி நேரம் ஊற வைத்துவிட வேண்டும். இப்போது கெட்டியாக காணப்பட்ட பிசின், ஜெல்லிபோல தளர்ந்து காணப்படும். இதனுடன் பால், நாட்டு சர்க்கரை அல்லது தேன் சேர்த்து சாப்பிட்டால், சதைப்பிடிப்புள்ள புஷ்டியான தேகத்தை பெறலாம்..

கெட்டி பால்: அதாவது, எடையை அதிகரிக்க வேண்டுமானால், கெட்டியான பாலில், ஊறவைத்த பாதாம் பிசினை சாப்பிடலாம். இதுவே, உடல் எடையை குறைக்க வேண்டுமானால், பாலுக்கு பதில் வெந்நீரில் பாதாம் பிசின் சேர்த்து குடிக்க வேண்டுமாம். இதனால், வயிறு நிரம்பின உணர்வு கிடைப்பதுடன், பசியையும் இந்த பிசின் கட்டுப்படுத்துகிறது.. அந்தவகையில், நாம் பயன்படுத்தும் விதத்தில், உடல் எடையை கூட்டவும், குறைக்கவும் வகை செய்கிறது பாதாம் பிசின்.
உடலுக்கு குளிர்ச்சியை தரும் இந்த பிசின், அடிவயிறு தொடர்பான பிரச்சனைகளையும் தீர்க்கிறது. அதுமட்டுமல்ல, அஜீரணம், நெஞ்செரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளும் தீர்கின்றன.. முக்கியமாக, தசைகள், எலும்புகளின் ஆரோக்கியம் காக்கப்படுகிறது.. சருமத்தின் வறட்சியை நீக்கி, பொலிவை தரக்கூடியது இந்த பிசின்..

குளிர்ச்சி நிறைந்த பிசினை, உடல் உஷ்ணத்தை தணிக்க தாராளமாக பயன்படுத்தலாம்.. இதனால், வயிற்று பிடிப்பு, சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல் போன்றவை தணியும்.. அடிக்கடி சிறுநீர்ப்பாதை தொற்று பாதிப்புக்கு உள்ளாகுபவர்களுக்கு, சிறந்த நிவாரணம் இந்த பிசின்..

மாதவிடாய் சுழற்சி: இந்த பிசின், பெண்களின் உடலில் ஊட்டச்சத்துக்களை தரக்கூடியது.. மாதவிடாய் பிரச்சினைகளை சரி செய்யக்கூடியது.. குறிப்பாக, மாதவிடாய் சுழற்சி முறையற்று இருந்தால், அதை இயல்பு நிலைக்கு கொண்டு வரக்கூடியது. அதேபோல, பிரசவத்திற்கு பின்னர், இழந்த வலுவை திரும்ப பெறுவதற்கும் இந்த பிசினை சாப்பிட தருவார்கள்.. இதனால், கர்ப்பபையில் உள்ள நச்சுக்களும் நீங்கிவிடும்..

அதுபோலவே, மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய இந்த பிசின், ஆண்களுக்கும் நல்லது.. மலட்டு தன்மை உடையவர்கள், இந்த பிசினை சூடான பசும்பாலில் கலந்து குடித்து வந்தால், தீர்வு கிடைக்கும்.. நரம்புகளிலும் வலு கிடைக்கும். இதற்கு காரணம், பிசினில் காணப்படும் அபரிமிதமான ஜிங்க் சத்துக்கள்தான்.. இது ஆண்களின் டெஸ்டோஸ்டிரான் அளவை அதிகரிக்க தூண்டுவதால், விந்தணுக்கள் குறைப்பாடும் மெல்ல நீங்குகிறது.

நன்மைகள்: ​இந்த பிசினை ஊற வைத்து எடுத்தால், ஜெல்லி போல காணப்படுவதால், க்ரீம்களில், ஐஸ்க்ரீம்களில், லட்டு தயாரிப்புகளில், ஜெல்லிகளில் பயன்படுத்துகிறார்கள். ஜிகிர்தண்டாவிலும் கலந்து விற்கிறார்கள்.. நன்னாரி, இளநீர் சர்பத்களிலும் கலந்து விற்கிறார்கள்.. இவைகளை குழந்தைகளும் அதிகமாகவே விரும்பி சாப்பிடுகிறார்கள்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடக்கூடிய இந்த பிசினை, அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாதாம். உயிர்ச்சத்து நிறைந்தவை என்பதால், இரைப்பை பிரச்சனை வந்துவிடுமாம்.. தினமும் சாப்பிடுவதானால், வெறும் கிராம் மட்டுமே போதும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+