ஒரு இலையில் ஓராயிரம் நன்மை.. பீட்ரூட்டை வாங்கும்போதே கீரையை மிஸ் பண்ணாதீங்க! பீட்ரூட் இலை ஆரோக்கியம்
சென்னை: பீட்ரூட் கிழங்கில் எவ்வளவு சத்து உள்ளதோ, அவ்வளவும் பீட்ரூட் கீரைகளிலும் உள்ளது.. இந்த கீரையை கத்தியை வைத்து பறிக்காமல், கைகளாலேயே பறித்து, பொடியாக நறுக்காமல் பயன்படுத்தினாலே முழு சத்துக்களையும் பெறலாம்.. பீட்ரூட் கீரையிலுள்ள ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன? இதனை சாப்பிடுவதால் தீரக்கூடிய உடல்நல கோளாறுகள் என்னென்ன? யார் யாருக்கு பீட்ரூட் கீரைகள் நல்லது என்பதையெல்லாம் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
பொட்டாசியம், போரான், மெக்னீசியம், சோடியம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம், பீட்டைன், வைட்டமின் C, போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்தது பீட்ரூட் கீரைகள்.. கனிமச்சத்து இதில் அதிகம்..

உஷ்ண கோளாறு
பீட்ரூட் கீரைகள் குளிர்ச்சி தரக்கூடியது.. உஷ்ண கோளாறுகளால் அவதிப்படுவோருக்கு பீட்ரூட் கீரை அருமையான மருந்து.. சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல் போன்ற சூடு கோளாறுகள் நீங்குவதுடன், சிறுநீர் பெருக்கியாகவும் பயன்படுகிறது..
இக்கீரையை தவறாமல் உணவில் சாப்பிட்டு வருவோருக்கு கண்கள் சம்பந்தமான பாதிப்புகள் வருவதில்லை.. முக்கியமாக புற ஊதா ஒளியிலிருந்து கண்களை காக்கிறது இந்த பீட்ரூட் கீரை.. கண் வீக்கம், கண் அழற்சி போன்றவை இருந்தால், பீட்ரூட் கீரையிலிருந்து சாற எடுத்து, கண் இமைகளில் பூசினால் நிவாரணம் கிடைக்கும்.
பீட்ரூட் கீரைகள்
வளரும் குழந்தைகளுக்கு மாங்கனீசு சத்து நிறைந்த பீட்ரூட் கீரைகளை தருவதால், அவர்களது எலும்புகள், பற்கள் வலுவாகின்றன.. நினைவாற்றலையும் பெருக்கக்கூடியது என்பதால் வளரும் குழந்தைகளுக்கு இந்த கீரையை அடிக்கடி சமைத்து தரலாம். அதாவது, பீட்ரூட் கீரையில் பொரியல் மட்டுமல்லாமல், சாலட், ஜாம், ஊறுகாய், சூப், பராத்தா, ரசம் வைத்து குழந்தைகளுக்கு தரலாம்.
பீட்ரூட் கீரையிலுள்ள நரம்பு, கரோட்டின் என்ற உயிர்சத்து கொண்டது.. இந்த கரோட்டின்தான், வைட்டமின் A சத்துக்களை அதிகமாக சேர்த்து வைத்துக் கொள்ள உதவுகிறது.. கால்சியம், வைட்டமின் K சத்துக்கள் பீட்ரூட் கீரைகளில் நிறைந்துள்ளதால், ரத்தம் உறைவதற்கும், புதிய செல்களை உருவாக்குவதற்கும் தூண்டுகோலாகின்றன.. ரத்த ஓட்டம் சீராகிறது...
கலோரிகள் குறைவு
பீட்ரூட் கீரையில் கலோரிகள் குறைவு.. எனவே, அனைவரும் பயன்படுத்தக்கூடிய கீரையாக உள்ளது.. தித்திப்பு சுவை நிறைந்த பீட்ரூட் இலைகள், ரத்த சர்க்கரையை குறைக்கிறது.. கல்லீரலை சுற்றி படிந்திருக்கும் கொழுப்பையும் கரைத்து வெளியேற்றுகிறது.. அஜீரண குறைபாடு உள்ளவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் இந்த கீரை..
இந்த கீரைகளை சிறிது நேரம் நீரில் வேக வைத்து எடுத்து, அந்த கீரைகளை மட்டும் விழுதாக அரைத்து தலைக்கு தேய்த்து வரும்போது, தலைமுடி கொட்டுவது நின்றுவிடும்..
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications