Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொட்டை பாக்கு.. கொட்டிக்கிடக்கும் நன்மை.. தொற்றுகளை ஓட ஓட விரட்டும் "கொட்டை பாக்கு" நல்லதா? கெட்டதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொட்டை பாக்கும் - கொழுந்து வெத்தலையும் என்று வழக்கத்தில் சொல்லி வருகிறோம் என்றாலும், கொட்டை பாக்கு என்னென்ன நன்மைகளை தருகின்றன?

வெற்றிலை, பாக்கு போடும் பழக்கத்தை, நம் முன்னோர்கள் அன்றிலிருந்தே கடைப்பிடித்து வந்தார்கள்.. இன்றும்கூட, திருமண வீடுகளிலும் விசேஷ விருந்துகளிலும் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இந்த 3 பொருட்களுக்கான மகத்துவமும், முக்கியத்துவம் குறையாமல் உள்ளது.

Do you know Health Benefits of Betel Nuts and Kottai Pakku is the Best Nuts for Gut Health

வெற்றிலையை போடுவது நல்லதா? கெட்டதா? என்ற ஆராய்ச்சிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், வெற்றிலையை குறிப்பிட்ட அளவு போடலாம் என்கிறார்கள் .

வயிற்றுப்புண்கள்: வெற்றிலை உடன் பாக்கு குறைவாகவும், சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் சேர்த்து சாப்பிட்டால் பசி எடுக்காதவர்களுக்கு பசி எடுக்கும்... வயிற்றுப்புண், வாய்ப்புண், வாயில் துர்வாடை பிரச்னை உள்ளவர்கள், மாலையில் வெற்றிலை அதிகமாகவும், பாக்கு சுண்ணாம்பு குறைவாகவும் மென்றால் இந்த பிரச்சனைகள் குணமாகிவரும்.

நம்முடைய உடலில் வாதம், பித்தம், கபம் என இந்த 3 விஷயங்கள் உள்ளன.. இந்த மூன்றும் எப்பவுமே குறையவும் கூடாது, அதிகரிக்கவும் கூடாதாம்.. சரியான அளவில் இருக்க வேண்டுமாம்.

சுண்ணாம்பு: அந்தவகையில், இதில், வெற்றிலை கபத்தை நிக்க, சுண்ணாம்பு வாதத்தை நீக்க, பாக்குகளோ பித்தத்தை சரிவிகிதத்தில் வைக்க உதவுகிறது. எனவே, வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு சேர்த்து மென்று விழுங்கினால், இவை யாருமே சீராகும்.

இதில், துவர்ப்புச்சுவை கொண்ட பாக்குகள், மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படுகின்றன.. கழிவுகளையும், நச்சுக்களையும், நீக்கி குடலை சுத்தப்படுத்தக்கூடியது.. செரிமானத்தை சீராக்கக்கூடியது.. உடலுக்குத் தேவையான இயற்கையான கால்சியம் சத்துக்கள் உடலில் சேரவும் தூண்டுகோலாகிறது.

அதுவும், கொட்டைப் பாக்குகளை பொறுத்தவரை, கிருமிகளுக்கு எதிராக செயல்படக்கூடியவை.. குறிப்பாக, இரைப்பையில் உள்ள தொற்றுகளை அகற்றக்கூடியவை.. பற்கள் உறுதியாக இருக்க வேண்டுமானால், கொட்டை பாக்கை சுட்டு பவுடராக்கி, அதில் பற்களை தேய்த்து வந்தால் போதும்.

தாம்பத்தியம்: கானா வாழைக்கீரையுடன் கொட்டைப்பாக்கு சேர்த்து சாப்பிட்டால், தாம்பத்தியம் நன்றாக இருக்கும் என்பார்கள். ஆனால், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில்தான் இவைகளை எடுத்து கொள்ள வேண்டும். இப்படி சில நன்மைகளை பாக்குகள் தந்தாலும், கெடுதலைதான் அதிகம் தருகிறதாம். இந்த பாக்குகளை நிறைய சாப்பிடக்கூடாது என்பார்கள்.. ரத்தசோகை வந்துவிடுமாம்.

வாந்தி, வயிற்றுப்போக்கு, சிறுநீரக நோய், இதய நோய், மார்பு வலி, ரத்த அழுத்தம், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.. அதேபோல, தொடர்ந்து கொட்டைப்பாக்கை மென்று சாப்பிட்டால், பல் ஈறுகளில் எரிச்சல் உண்டாகும்.. பற்சிதைவும் உண்டாகும்..

தவிர்க்கலாம்: மத்திய நரம்பு மண்டலமும் பாதிக்கலாம். எனவே, கர்ப்பிணிகள் இதை தொடவே கூடாது. அதேபோல, நுரையீரலுக்கும் தீங்கு தரக்கூடும் என்பதால், ஆஸ்துமா நோயாளிகளும் கொட்டைப்பாக்கு சாப்பிடக்கூடாது. இதய கோளாறுகள் இருப்பவர்களும், இந்த கொட்டை பாக்கை தொடக்கூடாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+