சர்க்கரை நோயாளி "விதை" சாப்பிட்டாலே போதும்.. சுகர் லெவல் கன்ட்ரோல் ஆகுமாம்.. வியப்பை கூட்டும் 5 விதை
சென்னை: சர்க்கரை நோய்க்கும், நாம் உண்ணும் உணவுக்கும் நேரடி தொடர்பு உள்ளது.. அந்தவகையில் சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் விதைகளுக்கும்கூட முக்கிய பங்கு உள்ளது.. அதில் ஒருசில விதைகளை பார்ப்போம்.
பொதுவாக விதைகள் என்றாலே, நார்ச்சத்து நிறைந்த பொருளாக கருதப்படுகிறது.. சியா விதைகள், சீரகம், போன்ற விதைகளில் ஆன்டி ஆக்ஸிடெண்ட், ஒமாகா-3 என சத்துக்கள் நிறைந்துள்ளன. கரையக்கூடிய நார்ச்சத்துகள் உள்ளதால், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை ஏறவிடாமல் பார்த்து கொள்கின்றன.. சர்க்கரை உறிஞ்சப்படுவதையும், செரிமானமாவதையும் தாமதப்படுத்துகின்றன.

நாவல் பழம்: உதாரணத்துக்கு நாவல் பழத்தை எடுத்துக் கொண்டால், ஏராளமான சத்துக்கள் உள்ளன.. இந்த பழங்களிலுள்ள விதைகளில், ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்களும் நிரம்பியுள்ளன, அதனால்தான் நாவல் எப்போதுமே நீரிழிவு நோய்க்கான சிறந்த பழமாக மட்டுமல்லாமல், மருந்தாகவும் திகழ்கிறது.
தூண்டுகோல்: ஏகப்பட்ட ஆக்ஸிஜனேற்றிகள், நார்ச்சத்து, இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்களுடன் குறைந்த கலோரிகள் கொண்டிருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தேர்வாக உள்ளது. இந்த பழத்தின் விதைளில், ஜம்போசின், எலாஜிக் அமிலம், அந்தோசயினின்கள் போன்ற கலவைகள் உள்ளதால், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த தூண்டுகோலாகின்றன..
சப்ஜா விதைகளை எடுத்துக் கொண்டால், சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல், உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும் உதவக்கூடிய விதையாகும். நார்ச்சத்து நிறைந்த இந்த விதைகளில் இரும்பு, கால்சியம், மெக்னீசியம் போன்ற கனிமங்கள் அடங்கியது.. ஒமேகா-3 கொழுப்பு கலந்திருக்கிறது..
சப்ஜா விதைகள் : சப்ஜா விதைகள் எப்போதுமே தண்ணீரில் ஊறவைத்து பயன்படுத்த வேண்டும்... ஒரு ஸ்பூன் சப்ஜா விதையில் 7 கிராம் நார்ச்சத்து இருக்கிறதாம்.. அதனால்தான், எடை இழப்புக்கு மிகச்சிறந்த உணவாக இது பார்க்கப்படுகிறது. தினமும் ஒரு ஸ்பூன் நீரில் ஊறவைத்து சாப்பிட்டாலும், உடல் எடை மெல்ல குறைய தொடங்கும்.சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால், சர்க்கரை அளவு குறையும்..
சியா விதைகள்: சியா விதைகளை வைத்து சமீபத்தில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதில், சியா விதைகள், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதாக நிரூபணமாகி உள்ளது. அதுமட்டுமல்ல, வெறும் பிரட் சாப்பிட்டவர்களுக்கும், பிரட் கூட, சியா விதைகளை சேர்த்து சாப்பிட்டவர்களுக்கும் டெஸ்ட் செய்து பார்த்ததில், உணவுக்கு பிந்தைய சர்க்கரை அளவுகள் குறைந்திருந்ததாம்.
அதாவது, உணவுக்கு பிறகு அதிகரிக்கும் ரத்தத்தின் குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இந்த விதைகள் உதவுகின்றன. நார்ச்சத்து அதிகமாகவும், மாவுச்சத்து குறைவாகவும் இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற விதையாக உள்ளது..
வெந்தய விதை: வெந்தய விதைகளில் இயற்கையாகவே ரத்த குளுக்கோஸ் அளவை குறைக்கும் சக்தி உள்ளது.. பூசணி விதைகளிலும், மக்னீசியம் அதிகமாக உள்ளதால், ரத்த சர்க்கரை ஆபத்தை குறைக்கிறது..
ரத்த சர்க்கரையை குறைக்க தாமரை விதைகளும் உதவுகின்றன.. குறைந்த அளவு கிளைசெமிக் குறியீடுகளை கொண்டுள்ளதால், ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க இந்த விதைகள் பயன்படுகின்றன. பலாப்பழ விதைகள், மாதுளை விதைகள், பூசணி விதைகளும் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகின்றன. எனவே, மருத்துவரின் முறையான ஆலோசனையை பெற்று, இந்த விதைகளை உணவில் பயன்படுத்தி நலனை பெறலாம்.












Click it and Unblock the Notifications