இலைக்கள்ளி.. இலையின் மருத்துவம்.. ஜஸ்ட் 2 துளி மட்டும் போதும்.. ஆச்சரியத்தை பாருங்க.. இலைக்கள்ளி இலை
சென்னை: உடல் ஆரோக்கியத்துக்கு, கீரைகளும், இலைகளும், தழைகளும் பேருதவி புரிகின்றன.. குறிப்பாக, வயிறு தொடர்பான உபாதைகளை தீர்ப்பதில் இலைகளுக்கே அதிகம் பங்குள்ளதாக சொல்கிறார்கள்.
கீரைகளிலேயே தலையானது முருங்கைக்கீரை என்பார்கள்.. ஆன்டி ஆக்சிடண்ட் உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த சோகை, இருதய நோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள், ஜீரணக்கோளாறு இப்படி இன்னும் ஏகப்பட்ட கோளாறுகளை இந்த ஒரே ஒரு கீரை சரிசெய்துவிடும்.

வயிறு உபாதைகள் : அதேசமயம், வயிறு சம்பந்தமான கோளாறுகளையும் முருங்கை தீர்த்துவிடும்.. குறிப்பாக, வயிறு உப்புசம், வயிற்று பொருமல், வயிறு வலி என அத்தனை உபாதைகளும் தீர்க்கக்கூடியது முருங்கை. அதுமட்டுமல்ல, உணவு கோளாறு, செரிமான பிரச்சனை, அல்சர், குடல் பிரச்சனை இப்படியான தொந்தரவுகளுக்கு, முருங்கையின் சாறு மட்டுமே போதும்.
முருங்கையிலையில், சிறிது கல் உப்பு சேர்த்து இடிக்கும்போது, சாறு வெளிவரும். வயிறு வலியிருக்கும்போது, இந்த சாற்றினை வயிற்றில் தடவிக்கொண்டாலே போதும்.. வலி குறைந்துவிடும்.. குழந்தைகளுக்கும் வயிறு வலி எடுத்தால், இப்படி தடவிவிடலாம். இதனால், வயிற்றிலுள்ள புண்களும் ஆறிவிடும். இந்த முருங்கையைபோலவே, சாறு எடுத்து, வயிற்றின் மீது தடவி, பல நோய்களை விரட்ட உதவுவது இலைக்கள்ளி என்ற இலையாகும்.
கால்நடைகள்: இலைக்கள்ளி என்பது கள்ளிச்செடியின் ஒரு வகை.. முயலின் காதுபோல இதன் இலைகளும், முக்கோண வடிவில் இதன் பூக்களும் இருக்கும். இந்த செடியிலிருந்து வெளிவரும் பால், நம்முடைய சருமத்தில் பட்டால் புண்ணாகிவிடுமாம். அதனால்தான், இந்த செடி பக்கமே, ஆடு, மாடுகள் நெருங்குவதில்லை.. இந்த இலையையும் சாப்பிடுவதில்லையாம்.
எனினும், இந்த செடியின் இலைகள், வேர்கள் என அத்தனையும் மருத்துவ குணங்கள் வாய்ந்தவை.. காது வலி, காதில் குடைச்சல் என்றால், இந்த இலையில் சாறு எடுத்து, அதை சூடுபடுத்தி, காதில் 2 சொட்டு விட்டாலே நிவாரணம் கிடைக்குமாம்.
இலைச்சாறு: இந்த இலையை வதக்கி, அடிவயிற்றில் பற்று போட்டால், சிறுநீர் எளிதில் தாராளமாக பிரியும்.. இலைக்கள்ளி செடியின் வேர்களுடன் பெருங்காயம் சேர்த்து, குழந்தைகளின் வயிற்றில் பற்றுப்போட்டால் வயிற்று பூச்சிகள் ஒழியும்.. அல்லது வேருடன் வெங்காயம் சேர்த்து அரைத்து குழந்தைகளின் அடிவயிற்றில் பூசினாலும் பூச்சிகள் ஒழியும்.. பாம்புக்கடிக்கும் இந்த இலைகள் மருந்தாக பயன்படுகின்றன..
நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள இலைக்கள்ளி இலைகள், ஆஸ்துமா, மூலம், மூட்டுவலி, காச்சல், ரத்தசோகை, குடல் புண், தோல் நோய், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, வாதம், நோய்களையும் குணப்படுத்துகிறது. ஈரல்கள் வீக்கம், பெருவயிறு, ஆறாதபுண்கள் என பல்வேறு பிரச்சனைகளையும் இந்த இலைகள் தீர்க்கின்றன. எனவே, சித்த மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று, இந்த இலைக்கள்ளி இலைகளை மருந்தாக பயன்படுத்தி நலன் காணலாம்.












Click it and Unblock the Notifications