முருங்கை மரம்.. கேழ்வரகு ஒன்னு போதுமே, ஆயுசு கூட்டும் அருமை ஜூஸ்.. மோர் குடிக்கிறீங்களா.. இதை கவனிங்க
சென்னை: நம்முடைய உடலில் நோய்எதிர்ப்பு சக்தி இருந்தாலே, எந்தவிதமான நோய்களும் நம்மை அண்டாது.. வழக்கமான உணவு., முறைகளிலேயே இந்த நோய் எதிர்ப்பு சக்தியை நாம் பெருக்கிக் கொள்ளலாம்.
கீரைகள் அனைத்துமே, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கின்றன என்றாலும், இதில் முருங்கைக்கீரைதான் பெஸ்ட் என்கிறார்கள்.. அதுவும் முருங்கை கீரையை சூப்பாக சாப்பிட்டால், உடலில் உடனே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்..

முருங்கை சூப்: ஒரு கைப்பிடி முருங்கை கீரையை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். 4 பல் பூண்டு, சிறிதளவு இஞ்சி, 4 சின்ன வெங்காயம், சிறிய தக்காளி, மஞ்சள் தூள் என அனைத்தையும், தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். நீரை வடிகட்டி தனியாக வைத்து விட்டு, மற்றவைகளை மிக்சியில் அரைத்து, வடிகட்டிய தண்ணீருடன் கலந்துவிட வேண்டும்.
இப்போது ஒரு வாணலில் நல்லெண்ணெய் விட்டு சீரகம், கருவேப்பிலை தாளித்து கொட்டி, மிளகு துாள் சேர்த்து குடித்தால், நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகச்சிறந்த சூப்பாக இது அமையும். வைட்டமின் A, C, E என இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை வாய்ந்தது இந்த முருங்கைக்கீரை.. உடலுக்குள் நுழையும் நோய் கிருமிகளை அழிப்பதில் மிகவும் வலிமை வாய்ந்தது.
எதிர்ப்பு சக்தி: கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச் சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் A அதிகமுள்ளன.. கரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம். வாரத்துக்கு இரண்டு நாள், கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டாலும் இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும்.
எலுமிச்சை, நெல்லி, ஆரஞ்சு, சாத்துக்குடி உள்ளிட்ட பழங்களில் வைட்டமின் சி, நிறைய உள்ளது. இதில் எலுமிச்சம்பழம், நெல்லிக்காய், நெல்லி, ஆரஞ்சு, சாத்துக்குடி உள்ளிட்ட பழங்களில் வைட்டமின் C அதிகம் உள்ளது. இதில் எலுமிச்சையை தவிர, மற்ற பழங்களில் தண்ணீர் கலக்காமல், ஜூஸாக குடிக்க வேண்டும்.
கேழ்வரகு: கேழ்வரகு உணவை தவிர்க்கவே கூடாது.. : ராகி கஞ்சி, ராகி புட்டு, ராகி களி என ஏதாவது ஒருவகையில் செய்து சாப்பிட்டால், இரும்புச் சத்து அதிகரிக்கும்.. கருப்பு கொண்டை கடலையிலும் இரும்பு சத்து அதிகம் என்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை இவை எளிதாக பெருக்குகின்றன.
சமையலில், மஞ்சள், பால், இஞ்சி, சோம்பு, பூண்டு போன்றவற்றை அதிகம் சேர்த்து கொள்ளும்.. காரணம், இந்த மூலிகை பொருட்களெல்லாம் நோய் கிருமிகளை எதிர்த்து போராடும் தன்மை வாய்ந்தவை.. பாதாம் பருப்புகளில் வைட்டமின் E, துத்தநாகம், மெக்னீசியம், புரதம் என ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், பாதாம் பருப்புகளை சாப்பிட்டு வரலாம்.
சிட்ரஸ் பழங்கள்: சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டு வரும்போது, உடலில் எதிர்ப்பு சக்திகள் கூடுகின்றன.. இதில், எலுமிச்சை, நெல்லிக்காய் இரண்டையும் தவறவிடக்கூடாது.. எலுமிச்சம்பழத்தை வெறுமனே ஜூஸ் போல சாப்பிடாமல், அத்துடன், நான்கைந்து புதினா இலைகள் சேர்த்து குடித்தால் கூடுதல் நலன் தரும்..
அதுபோலவே, வெயில் காலங்களில் நிறைய மோர் குடிக்க வேண்டும். இந்த மோரிலும் கறிவேப்பிலை + இஞ்சி இரண்டையும் கலந்து குடிக்க வேண்டும். வெள்ளரிக்காயை பொடியாக வெட்டி பச்சை வேர்க்கடலை சேர்த்து சாப்பிட்டாலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications