குக்குலு குக்குலு.. சடசடன்னு தொந்தியை குறைக்கணுமா.. அப்ப இந்த 3 சூப்பர் டிப்ஸையும் உடனே நோட் பண்ணுங்க
சென்னை: உடல் எடை குறைய வேண்டுமானால், பச்சை காய்கறிகளும், பழங்களும், போதுமான உடற்பயிற்சியும், நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும் என்பது அடிப்படையான விஷயமாகும்.
இந்த உடல் எடை குறைப்பில், நிறைய ஆயுர்வேத மூலிகைகளும் உதவுகின்றன. அவைகளில் மூன்றினை மட்டும் இப்போது பார்ப்போம்.

குக்குலு மரம்: உடல் எடைக்கு குக்குலுவை பயன்படுத்துவார்கள்.. தமிழில் எருமைகன் குங்கிலியம் என்று சொல்வார்கள். குக்குலு என்பது ஒருவகை மரம்.. இந்த மரங்கள் பெரும்பாலும், வட இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் காணப்படுகிறது.
இதிலிருந்து கிடைப்பதுதான், குக்குலு பிசின்.. இந்த பிசின் கிடைக்க கிட்டத்தட்ட 8 வருடமாகிறதாம். அதனால்தான், ஆயுர்வேதத்தில், இந்த பிசினுக்கான முக்கியத்துவம் ஆயிரக்கணக்கான வருடங்களாக நீண்டு வருகிறது. கீல்வாதத்திற்கு சிகிச்சை தருவதற்காக இந்த குக்குலு பயன்படுகிறது என்றாலும், எடை குறைப்பிற்கும் உபயோகப்படுத்துவார்களாம்.
நீரிழிவு நோயாளிகள்: உடலிலுள்ள கொழுப்பை இந்த குக்குலு கரைக்கும் தன்மை உடையது. கொழுப்பு கல்லீரல்களும் இதனால் தடுக்கப்பட்டுவிடும். இந்த குக்குலு மாத்திரை வடிவிலும் கிடைக்கிறது. ஆனால், கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும், நீரழிவு நோயாளிகளும், ரத்த அழுத்த மாறுபாடு உள்ளவர்களும், இதை தொடவே கூடாது.. மற்றவர்கள் இந்த குக்குலுவை பயன்படுத்துவதாக இருந்தாலும்கூட, மருத்துவரின் ஆலோசனையை பெற்று சாப்பிடுவது மிகவும் நல்லது.
அடுத்ததாக குடம்புளி தண்ணீரை பயன்படுத்தியும் உடல் எடையை குறைக்கலாம்.. இந்த குடம்புளியைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, தொடை மற்றும் தொப்பையை சுற்றியுள்ள கொழுப்புகள் குறைய துவங்கும்.. இதற்கு ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு குடம் புளியை முதல்நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் குடித்து வந்தாலே, தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பை குறையுமாம்.
தகவல் பரிமாற்றம்: அல்லது உணவு உண்பதற்கு முன்பு, ஒரு டம்ளர் நீரில், குடம்புளியை ஊறவிட்டு, கொதிக்க வைத்தும் குடிக்கலாம். குடம்புளியிலுள்ள ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலமானது, மூளை நரம்புகளிடையே தகவல் பரிமாற்றத்துக்கு உதவக்கூடிய செரட்டோனின் செயல்பாட்டை தூண்டிவிடும். இதனால் பசி உணர்வு கட்டுப்படுத்தப்பட்டு, உடல் எடை குறையவும் காரணமாகிறதாம்.
அதேபோல, திரிபலா சூரணத்தை பயன்படுத்தி வந்தாலும், உடல் எடை குறைய துவங்கும்.. நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் என 3 வகையான காய்களிளை சமஅளவு சேர்த்து அரைத்த பவுடர் இது..
மூன்றுமே காய்கள் என்றாலும், முற்றிய கனிகளில்தான், இந்த சூரணத்தை செய்வார்களாம். சிலர் இதை வீட்டிலேயே தயார் செய்வார்கள்.. கடுக்காய் ஒரு பங்கு, நெல்லிக்காய் 4 பங்கு, தான்றிக்காய் 2 பங்கு எடுத்து, நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்து கொண்டால், திரிபலா பொடி தயார்.
வெறும் வயிற்றில்: திரிபலா சூரணம் கடைகளிலேயே எளிதாக கிடைக்கிறது.. தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு, ஒரு டம்ளர் நீரில், ஒரு ஸ்பூன் பவுடரை கலக்கி வைத்துவிட வேண்டும். மறுநாள் காலையில், வெறும் வயிற்றில் இந்த நீரை குடித்து வந்தால், அத்தனையும் பலன் கிடைக்கும்.
சிலர், இரவில் இந்த பொடியை 5 கிராம் அளவுடன் சாப்பிடுவார்கள். சிலர் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் பொடியை, வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பார்கள்.. எனினும், டாக்டர்களின் முறையான ஆலோசனையை பெற்று இந்த பொடியை பயன்படுத்துவது நல்லது.












Click it and Unblock the Notifications