செம்பருத்தி இலைகள்.. உடல் எடை சடசடன்னு குறையணுமா.. தலைமுடி கருகருன்னு வளரணுமா.. சூப்பரான செம்பரத்தை
சென்னை: முருங்கையிலை போலவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள இலைகளில் மிக முக்கியமானது செம்பருத்தி இலைகள்.. செம்பரத்தை இலைகள் என்றும் சொல்வார்கள்.
செம்பருத்தி செடியை பொறுத்தவரை, இதன் பூக்கள், விழுதுகள், இலைகள் என அத்தனையும் மருத்துவ குணம் வாய்ந்தவை.. வழுவழுப்பு தன்மை உடைய இந்த இலைகள் மிகவும் குளிர்ச்சி வாய்ந்தவை. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வெறும் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டி குடித்தாலே போதும்... உடல் சூட்டினால் ஏற்படக்கூடிய கோளாறுகள் நீங்கும்.

கண் எரிச்சல், கண் நோய்கள், கண் வீக்கம், கண்களில் நீர் வடிதல், கண்களில் கட்டி போன்ற சூட்டை கிளப்பக்கூடிய பிரச்சனைகளுக்கு இந்த தண்ணீர் அருமருந்தாகும்.. அதேபோல, சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கடுப்பு போன்ற பிரச்சனை இருந்தாலும், இந்த தண்ணீரே அருமருந்தாகிறது.
கஷாயம்: இந்த இலையில் டீ அல்லது கஷாயம் வைத்து குடித்தால், ரத்த அழுத்த பிரச்சனைகள் மெல்ல குறையும்.. கெட்ட கொழுப்பை இந்த செம்பருத்தி இலைகள் குறைக்கின்றன.. குறிப்பாக, தமனிகளின் உள்ளே, அடைப்புகளை நீக்குவதன் மூலம், கொழுப்பின் அளவை இவைகள் குறைக்கின்றன. அதேபோல, செம்பருத்தி இலையில் வைட்டமின் C நிரம்பி உள்ளதால், இருமல், ஜலதோஷம் போன்ற பிரச்சனைகளுக்கும் நிவாரணம் கிடைக்கிறது.
இந்த டீயை தொடர்ந்து குடித்துவரும்போது, மாதவிடாய் சீராகும்.. மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்று வலியும் குறையும்.. எனவே, ஈஸ்ட்ரோஜன் குறைவாக உள்ள பெண்கள் இந்த செம்பருத்தி இலை டீயை தவறவிடக்கூடாது. மன அழுத்தம் அதிகமாக இருப்பவர்கள், இந்த டீயை குடித்து வந்தால், மனம் அமைதி பெறும்..
புற்றுநோய்: புற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கு இந்த செம்பருத்தி இலைகள் தூண்டுகோலாக விளங்குகின்றன.. அதனால்தான், புற்றுநோயால் ஏற்பட்ட புண்களை ஆற்ற, இந்த இலைகளை அரைத்து பற்றுபோல பூசுவார்கள்..
தலைமுடி மற்றும் சரும பாதுகாப்பில் செம்பருத்தி இலைகள் வரப்பிரசாதமாக திகழ்கின்றன.. ஆண்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ள இந்த இலைகள், முக சுருக்கத்தை தள்ளிப்போடக்கூடியவை.. இளமையை தக்க வைக்கக்கூடியவை. அதனால்தான், அழகு சாதன பொருட்களில் மூலப்பொருளாக செம்பருத்தி இலைகள் கட்டாயம் இடம்பெறுகின்றன.
கண்டிஷனர்: தலைமுடிக்கு இந்த இலை போல, இயற்கையான பெஸ்ட் கண்டிஷனர் வேறு எதுவும் இருக்க முடியாது.. பளபளப்பு + மென்மைத்தனம் இரண்டுமே கிடைக்க வேண்டுமானால், இந்த இலைகளை அரைத்து தேய்த்தாலே போதும்.
அதேபோல, முடி அதிகமாக வளர வேண்டுமானால், அல்லது முடி அதிகமாக கொட்டுகிறது என்றால், இந்த இலையின் விழுதே போதுமானது.. நரைமுடி, பொடுகுத்தொல்லை இருந்தாலும், இந்த இலைகளுடன், சிறிது கறிவேப்பிலை, மருதாணி இலை சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தாலே, மொத்த பிரச்சனையும் தீரும்..
சிறப்புகள்: செம்பருத்தி இலைகளை அரைத்து, இட்லி மாவில் கலந்து, தோசை ஊற்றி சாப்பிடுவார்கள்.. இதனால், அஜீரணம் நீங்குவதுடன், உடலிலுள்ள கழிவுகள், நச்சுக்கள் வெளியேற இவை துணைபுகின்றன.. மேலும், உடல் சூடு தணிந்து, உடலுக்கு குளிர்ச்சியும் கிடைக்கிறது.. வயிறு, சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி குடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. அதனால்தான், இன்றுவரை ஆயுர்வேத மருத்துவத்தில் செம்பருத்தி இலைகள் மிக முக்கியத்தை பெற்று வருகின்றன.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications