நீரிழிவு நோயாளி இளநீர் குடிக்கலாமா? உடம்பு வறட்சிக்கு நீர்ச்சத்து நிறைந்த ஹெல்த் டிரிங்க்.. அற்புதம்
சென்னை: எந்தவித ரசாயனமும் இல்லாத, இயற்கையாகவே நீர் சத்தை அதிகரிக்கும் பானம் இளநீர். தினமும் ஒரு இளநீரை குடித்து வருவது, உடலில் நீர் சத்துக்களை தக்கவைக்கும் என்பார்கள்.. அந்தவகையில், இளநீரில் உள்ள நன்மைகள் என்னென்ன தெரியுமா? வெறும் வயிற்றில் தேங்காய் தண்ணீர் குடிக்கலாமா? சர்க்கரை நோயாளிகள் இளநீர் குடிக்கலாமா? சுருக்கமாக பார்க்கலாம்.
100 கிராம் இளநீரில் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான சுண்ணாம்பு சத்து 29 மி.கி உள்ளது. ரத்த விருத்திக்கு தேவையான இரும்பு சத்து 0.1 மி.கி. இருக்கிறது. குளோரின் உப்பு 183 மி.கி. உள்ளது.

அதேபோல, 100 கிராம் இளநீரில் 312 மி.கி. பொட்டாசியமும், 30 மி.கி. மெக்னீசியமும் உள்ளது. இந்த இரு தாது உப்புகளும் உடனடியாக எலும்புகளுக்கும், தசைகளுக்கும் புத்துணர்ச்சியையும், வலுவையும் ஊட்டும்.
சத்துக்கள் - புத்துணர்ச்சி
சர்க்கரை சத்துடன் தாதுப்பொருட்கள் நிறைந்திருப்பதுதான் இளநீர்.. பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், கந்தகம் போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இதிலுள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானதாம்..
வைட்டமின்கள், மினரல்கள், எலக்டோலைட்டுகள் போன்றவை இளநீரில் உள்ளன.. எனவே, தினமும் காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்தால், நம்முடைய உடலின் எலெக்ரோலைட்டுகள் சீராகின்றன.. இதனால், மந்தம், அஜீரணம் போன்ற கோளாறுகள் நீங்கும். வயிறு பிரச்சினையும் நீங்குகிறது.. வயிற்றில் அல்சர் இருந்தாலும் தொற்று இருந்தாலும் அதை குணப்படுத்தும் தன்மை இளநீருக்கு உள்ளது.. குடலில் உள்ள தொற்றுகளையும் நீக்குகிறது. குடலில் உள்ள நச்சுகளையும் முறிக்கிறது..
சிறுநீரக பாதுகாப்பு
காலையிலேயே ஒரு இளநீர் குடிப்பதால், அன்றைக்கு தேவையான ஆற்றலும், புத்துணர்ச்சியும் கிடைக்கும். அதுமட்டுமல்ல, இளநீரில் பொட்டாசியம் நிறைந்திருப்பதால், சிறுநீரக பாதுகாப்பு பலப்படுகிறது.. இதனால், சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாமலும் தடுக்கப்படுகிறது.. அப்படியே கற்கள் இருநதாலும், அவைகள் உடைந்து வெளியேறிவிடும். சிறுநீரக பாதையிலுள்ள தொற்று, நச்சு இருந்தாலும் வெளியேறிவிடும்.
வளரும் பிள்ளைகளை இளநீர் குடிக்க செய்ய வேண்டும். காரணம், இதிலுள்ள கால்சியம், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தடுத்து, எலும்புகளின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. ஹீமோகுளோபின் பிரச்சனை உள்ளவர்கள் இளநீரை தாராளமாக குடிக்கலாம். இதனால், ரத்தம் சுத்தமாகும்.
கர்ப்பிணிகள் - நீர்ச்சத்து குறைபாடு
கர்ப்பிணி பெண்கள் தினமும் இளநீரை குடிப்பது, கருவின் வளர்ச்சிக்கு உதவும்.. நீர்ச்சத்து குறைபாட்டையும் நீக்கும்.. எனவே மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் கர்ப்பிணிகள் இளநீர் குடிக்க வேண்டும்.
வைரஸ்களை அழிக்கும் திறன் இளநீருக்கு உண்டு என்பதால், காய்ச்சல், சளி, இருமல் இருந்தாலும் இளநீர் குடிக்கலாம்.. இரவு தூங்குவதற்கு முன்பு இளநீர் சாப்பிட்டால் மன அழுத்தத்தை நீக்கி நல்ல உறக்கத்தை தரும். உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களும், தைராய்டு தொந்தரவு உள்ளவர்களும் இளநீர் குடிக்கலாம்.. தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்வதுடன், தைராய்டு சுரப்பிகள் சிறப்பாக செயல்படவும் இளநீர் உதவி புரிகிறது..
உடல் எடை குறைகிறதா
குறைந்த அளவு கலோரி உள்ள இளநீரை, உணவுக்கு முன்பு குடித்து வந்தால், உடல் எடையும் குறையும்.. அதாவது, 60 நாட்கள் இளநீர் குடித்து வந்தால், உடல் எடை குறைவதாக ஆய்வுகளில் நிரூபணமாகியுள்ளது.
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை இளநீர் கட்டுப்படுத்துகிறது என்பதால் நீரிழிவு நோயாளிகள் தாராளமாக குடிக்கலாம்.. பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் C, எல் ஆர்ஜினைன் போன்றவை இருப்பதால் இன்சுலின் சுரப்பையும் அதிகரிக்க செய்கிறது.. அதிகபட்சம் 250 ML சர்க்கரைதான் இளநீரில் இருக்கும்.
எனினும் சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் இளநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதேபோல, பொட்டாசியம் மற்றும் சோடியம் தவிர்ப்பவர்களும், கால் நீர் கோர்த்து வீக்கம் உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்கள் இளநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டுமாம்.












Click it and Unblock the Notifications