"களாக்காய்" சாப்பிடறீங்களா? கருப்பை கழிவை நீக்கும் கலாக்காய்.. மினுமினு உடம்புக்கு அருமை களாக்காய்
சென்னை: பலரும் மறந்துவிட்ட காட்டுச்செடிதான் களாக்காய்.. ஏகப்பட்ட நன்மைகளை தரும் இந்த களாக்காயின் குணங்களை பற்றி சுருக்கமாக பார்ப்போமா..!
தித்திப்பும், புளிப்பும் சேர்ந்த கலவைதான் இந்த களாக்காய்.. காட்டுக்குள் வளர்ந்தாலும், இதன் பூ, காய், பழம், வேர் என மொத்தமும் மருத்துவ குணம் கொண்டவை.. நாளடைவில் இந்த கலாக்காய் விவசாயிகளுக்கு பெருத்த லாபத்தையும் தர ஆரம்பித்துவிட்டது. இரும்புச்சத்துக்களும் மற்றும் தாது சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன..

ஊறுகாய்கள்: பொதுவாக, இந்த களாக்காயில் ஊறுகாய் போடுவார்கள்.. இது ஒரு சீசன் காய் என்பதால், கிடைக்கும் காலத்திலேயே ஊறுகாயாக போட்டு வைத்து கொள்வார்கள். இதற்கு காரணம், கிட்டத்தட்ட எலுமிச்சையை போலவே குணமுள்ளது இந்த கலாக்காய்..
வாயு, வயிறு வீக்கம், வயிறு உப்புசம், அஜீரண பிரச்சனைகளை களாக்காய் சரி செய்கிறது. குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது.. நோய் தொற்றுகளை அண்ட விடாமல் தடுக்கிறது..
இளம்பெண்கள்: மாத விலக்கு பிரச்சனை இருக்கும் பெண்கள், களாக்காயை அடிக்கடி சாப்பிட்டு வரவேண்டும். அதேபோல, பிரசவமான பெண்களுக்கு, கருப்பையில் உள்ள அழுக்கை வெளியேற்ற இந்த காய்தான் துணைபுரிகிறது.
ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் இரண்டையுமே குறைக்க இந்த களாக்காய் உதவுகிறது.தொடர்ந்து களாக்காய் சாப்பிட்டு வருவதால், கண்களில் ஏற்படும் பிரச்சனைகள் தீர்கிறது.. முக்கியமாக, வெண்படலமும், கரும்படலம், ரத்தப் படலம் போன்ற குறைகளை நீக்குகிறது. பற்களின் கறைகளை நீக்கி, ஈறுகளுக்கு பலத்தை தரக்கூடிய பண்பு, இந்த கலாக்காயுக்கு உண்டு. கர்ப்பமான பெண்களுக்கு வாந்தி அல்லது மயக்கம் வந்தால், இந்த களாக்காயை தருவார்கள்.
பித்தம் நீங்கும்: இந்த களாக்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொண்டு, வெறும் உப்பு மட்டுமே சேர்த்து குலுக்கி வைத்து பயன்படுத்தினாலே, பித்தம் முழுமையாக நீங்கும்.. அல்லது இந்த செடியின் வேரை சுத்தம் செய்து, கழுவி காயவைத்து பொடி செய்து கொண்டால், அதனுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டாலும் பித்தம் குறையும். பித்தம் நீக்கப்படுவதால், ஈரலுக்கு வலு சேர்க்கிறது.. ஆரோக்கியம் கிடைக்கிறது.. மஞ்சள் காமாலையை தடுத்து நிறுத்துகிறது.
சருமத்துக்கு மிகச்சிறந்த பாதுகாப்பை தருகிறது இந்த கலாக்காய்.. அதனால்தான், இதை மருந்தாகவும், பேக் பேலவும் சருமத்தில் தடவி உபயோகிப்பார்கள்.. மேலும், சருமத்திற்கு கெடுதல் தரும் கூறுகளை எல்லாம் அழித்து, இளமையை தக்க வைக்கிறது இந்த களாக்காய்.. அதுமட்டுமல்ல, ஆண்ட்டி-ஏஜிங் எனப்படும் வயது முதிர்வை தடுக்கும் கிரீம்கள், ஜெல்களில் இந்த கலாக்காயைதான் முக்கிய பொருளாக சேர்க்கிறார்களாம்.. அதனால், நேரடியாகவே களாக்காயை சாப்பிட்டு வருவதால், சருமம் பொலிவு பெறும்.

தலைமுடி: அதேபோல, தலைமுடி வளர்ச்சிக்கும் இந்த களாக்காயை பயன்படுத்துவார்கள்.. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய் என்பதால், முடி உதிர்வது குறைந்து, தலையின் முடிகள் பலம் பெறுகின்றன. "நாளை கிடைக்கப்போகும் பலாக்காயைவிட இன்று கிடைக்கும் களாக்காய் சிறந்தது" என்று நம்பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்??!!!
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)












Click it and Unblock the Notifications