வெறும் இலையே போதுமே.. கல்லீரலை காக்கும் அரச மர இலை ஜூஸ்.. உள்ளுறுப்புகள் பலம் பெற "கொழுந்து துவையல்"
சென்னை: மரங்களின் அரசன் அரச மரம் பல்வேறு நன்மைகளை மனித குலத்துக்கு தரக்கூடியது என்றாலும், அரச மர இலைகளின் சாறு எந்தெந்த வகைகளில் பலன்தருகிறது தெரியுமா?
அரசமரம் - இந்த மரத்திலிருந்து வெளியிடும் காற்றில், பெண்களின் மாதச்சுழற்சி மற்றும் அது சம்பந்தமான சுரப்பிகள் சீரடைகின்றன.. அரசமரத்தை சுற்றினால் குழந்தை பேறுகிடைக்கும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது.

அரச மரம்: அதாவது, அரச மரத்தின் பட்டை, வேர், விதை போன்றவற்றை பாலில் கொதிக்கவைத்து, ஆறிய பிறகு, தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தாலே தாது விருத்தியடையும் என்பார்கள்..
பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகளும் நீங்கும்... இந்த மரத்தின் இலையை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்துபொடியாக்கி வைத்துக்கொண்டு, மாதவிலக்கு நேரத்திலும் கஷாயம் போல செய்து குடித்தால், மாதவிலக்கில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும்.
இந்த மரத்தின் இலையை அரைத்து வெறும் வயிற்றில் ஒரு உருண்டை சாப்பிட்டு வந்தாலும் குழந்தை பெறு உண்டாகும் என்பார்கள். ஆனால், மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று, மருந்தாக இதனை பயன்படுத்த வேண்டும்.
இலைகள் நன்மைகள்: அந்தவகையில், அரச மர இலைகள் தரும் நன்மைகள் என்னென் தெரியுமா? இந்த இலைகளில், டானிக் அமிலம், அஸ்பார்டிக் அமிலம், ஸ்டெராய்டு, வைட்டமின்கள், மெத்தயோனின், கிளைசின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.. இதைத்தவிர ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்புகள், பாக்டீரியா எதிர்ப்புகள், நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் இப்படி ஏகப்பட்ட நன்மைகள் அடங்கி உள்ளன. இவைகள் எல்லாம், நோய்கள் நம்மை தாக்காமல் அரணாக காத்து நிற்கின்றன.
இந்த இலைகளின் சாறுகளிலிருந்து எடுக்கப்படும், மருந்துகள், பல நோய்களுக்கு தீர்வை தந்து வருகின்றன.. இந்த சாறினை பல்வேறு கோளாறுகளுக்கு நாம் பயன்படுத்தி, நன்மைகளையும் நேரடியாகவே பெறலாம்.
கல்லீரல் : முக்கியமாக, இந்த இலைகளை கல்லீரல்களின் காவலன் என்றே சொல்லலாம். கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், இந்த இலைகளின் சாறு குடித்தாலே போதும். எந்த நோய்களும் நெருங்காது. அதனால்தான், மஞ்சள் காமாலை நோய் அறிகுறி தென்பட்டாலும், இந்த இலைச்சாறுடன், பனங்கற்கண்டு சேர்த்து, தினமும் 3 முறை குடித்தாலே பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
அதுபோலவே, நுரையீரலுக்கும் இந்த சாறு மிகவும் நல்லது.. இதனால், சுவாச கோளாறுகள் எளிதாக நீங்குவதுடன், செரிமான கோளாறுகளும் நீங்கிவிடும். ரத்தம் சுத்திகரிப்பாகும்.. அத்துடன், சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்துகிறது இந்த சாறு..
கண் சருமம்: கண் பாதுகாப்பு முதல் சரும பாதுகாப்பு வரை, அத்தனையையும் இந்த அரச மர இலைகள் தீர்க்கின்றன.. கண்களில் வலி என்றால், இந்த இலைச்சாற்றினை சில துளிகள் ஊற்றினாலே போதும்.. உடனே வலி நின்றுவிடும். அதேபோல, அரச மரத்தின் பழுப்பு இலைகளை எரித்து பவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் கலந்து வைத்து கொண்டால், தீப்புண், தழும்புகள், காயங்களுக்கு தடவினால் குணம் பெறலாம்.
இந்த மரத்தின் இலைகள் அல்லது கொழுந்து இலைகள் இவைகளை இடித்து வைத்துக் கொண்டு அதில் பல் தேய்த்து வந்தால், பற்கள் பளிச்சிடும்.. பல் வலி நீங்கிவிடும்.. அல்லது இந்த இலைகளில் வாய் கொப்பளித்து வந்தாலும், வாய் துர்நாற்றம் நீங்கி, ஈறுகள் பலப்படும். பற்களில் கறைகள் படிந்திருந்தாலும், மெல்ல மெல்ல நீங்கிவிடும். அதேபோல, இந்த இலைக்கொழுந்தை அரைத்து மோருடன் கலந்து குடித்தால் வயிற்றுக்கடுப்பு உடனே தீர்ந்துவிடும்.
இந்த இலைகளை இரவு தூங்கும்முன்பு ஒரு பாத்திரத்தில் போட்டுவைத்துவிட்டு, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும். அரிப்புகள், நமைச்சல், தடிப்புகள், வீக்கங்கள் இருந்தாலும் நீங்விவிடும்
கொழுந்து துவையல்: இந்த அரச மர இலைகொழுந்துவில் துவையல் செய்தும் சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.. அரச மரக்கொழுந்து இலைகளை சுத்தம் செய்து, கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு வாணலில், எண்ணெய், காய்ந்த மிளகாய், பெருங்காயம், புளி, உப்பு, இந்த கொழுந்து போன்றவற்றை வறுத்து ஆறவைத்து அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். மீண்டும் வாணலில் கடுகு, உளுத்தம்பேருப்பு பெருங்காயம் தாளித்தகொழுந்து இலை துவையல் தயார்.












Click it and Unblock the Notifications