வெறும் 4 பருப்பு போதும்.. புற்றுநோயை 4 அடி தள்ளி நிறுத்தும் பிஸ்தா பருப்பு.. அருமையான பிஸ்தா பருப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரத்தத்தை சுத்திகரித்து, ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துவதில், பிஸ்தா பருப்புகளுக்கு பெரும் பங்கு உள்ளது.

நட்ஸ் வகைகளில் ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்திருப்பதால், அவை எப்போதுமே நம்முடைய உடலுக்கு வலு தருபவை.. புரோட்டீன், வைட்டமின், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் இந்த நட்ஸ்களில் தாராளமாக காணப்படும்..

Do you know Health Benefits of Pista Nuts and Pistachios is the Best Nuts for Diabetics, Weight Loss

அதனால்தான், சர்க்கரை நோயாளிகள் முதல் முதல் உடலை பலப்படுத்தும் நபர்கள் வரை, நட்ஸ்களை தவறாமல் சாப்பிடுகிறார்கள். இதனால், பல நோய்கள் நம்மை அண்டாமல் தடுக்கப்பட்டுவிடுகிறது.

ரத்த சோகை: இதில் முக்கியமானது பிஸ்தா பருப்புகள்.. இந்த பருப்பிலும் வைட்டமின் E, B காம்ப்ளக்ஸ், தாமிரம், மாங்கனீஸ், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீஷியம், துத்தநாகம் என ஏகப்பட்ட தாதுக்கள் ஒளிந்து கொண்டிருகின்றன. இதிலுள்ள வைட்டமின் B6 ரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு தேவையானதாக இருக்கிறது..

ரத்த அழுத்தத்தையும், கொழுப்பையும் கட்டுப்படுத்தக்கூடிய பருப்பு வகை பிஸ்தா என்பதால், இதயத்துக்கு ஏற்படும் அபாயங்களும் குறைகின்றன.. ரத்தத்தை சுத்திகரிக்கும் மிகப்பெரிய பங்கு இந்த பிஸ்தா பருப்புக்கு உண்டு..

ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகப்படுத்தி, செல்களுக்கு ஆக்சிஜனையும் தருவதற்கு பிஸ்தா உதவுகிறது. பிஸ்தா பருப்பிலுள்ள வைட்டமின் பி6, ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது...

புற்றுநோய் அபாயம் நீங்குகிறது: உடல் வலு குன்றியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், இந்த பிஸ்தாவை சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, உடல் எடை அதிகரிக்க வாய்ப்புண்டு... ஆனால், பிஸ்தாவில் குறைந்த அளவு கலோரிகளும், குறைந்த அளவு கொழுப்புகளும், அதிக அளவு நார்ச்சத்துக்களும் இருப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், இதை குறிப்பிட்ட அளவு எடுத்து கொள்ளலாம்.

ஆனால், பிஸ்தா சாப்பிடுவதாக இருந்தால், மற்ற உணவுகளின் அளவை நிறையவே குறைத்து கொள்ளலாம். எனினும், வளரும் குழந்தைகள் பிஸ்தாவை சாப்பிடலாம். காரணம், பிஸ்தாவை சாப்பிட்டால், மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.. ரத்த ஓட்டமும் சீராக கிடைக்கும்.. நினைவாற்றல் அதிகரிக்கும்.. அதுவும் தினமும் சாயங்கால நேரத்தில், சூடான பாலில் பிஸ்தா பருப்பை ஊற வைத்து சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகமாகுமாம்.

குடல் ஆரோக்கியம்: நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், ஜீரணம் எளிதில் நடந்து, குடலும் பாதுகாக்கப்படுகிறது.. தாய்ப்பால் நன்கு சுரக்க, பிஸ்தா பருப்பை பாலுடன் வேகவைத்து, இளந்தாய்மார்களுக்கு தருவார்கள்.. கர்ப்ப காலத்திலும் பிஸ்தாவை கர்ப்பிணிகளுக்கு சாப்பிட தருவார்கள்.

நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த பிஸ்தா பருப்பு சிறந்தது.. நீரிழிவினால் ஏற்படக்கூடிய பார்வை கோளாறு முதல் மற்ற குறைபாடுகளையும் இந்த பாதாம் தடுக்கிறது. இந்த பிஸ்தா குறிப்பிட்ட அளவு சாப்பிட்டு வரும்போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் குறைந்திருப்பதாக, ஆய்வுகளும் சொல்கின்றன.

நோயாளிகள்:
அதிலும், டைப் 2 நீரிழிவு நோயாளிகள், ஒரு நாளைக்கு 2 முறை பிஸ்தா பருப்பு என, 12 வாரங்களுக்கு சாப்பிட்டு வந்தால், ரத்த சர்க்கரை அளவு 9 சதவீதம் வரை குறைவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே, மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று, பிஸ்தாவை சாப்பிடலாம்.

பிஸ்தா பருப்புகளை சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் பிரச்சனைகள் பெரிதாக ஏற்படுவதில்லை.. பார்வைத்திறன் சிறப்பாக செயல்படுகிறது.. அத்துடன் கருவிழி சிதைவையும் தடுக்கிறது.. அதாவது பிஸ்தா பருப்பில், சியாசாந்தின், லூட்டின் ஆகிய 2 கரோட்டினாய்டுகள் உள்ளதால், இவைகள்தான், கண்ணின் விழித்திரையை பாதுகாக்கின்றன..

இந்த பருப்பில், எக்கச்சக்கமான வைட்டமின் E உள்ளதால், சரும பாதுகாப்பையும், சரும பொலிவையும் தருகின்றன.. அதனால், வயதான தோற்றமும், தோல் சுருக்கமும் தள்ளிப்போடப்படுகிறது.. புறஊதாக் கதிர்களால் தோல் பாதிக்கப்படாமல் இருக்கவும், தோல் புற்றுநோய் வராமல் இருக்கவும் இந்த பிஸ்தா உதவுகிறது.

சரும பாதுகாப்பு: சருமத்தை போலவே, தலைமுடி வளர்ச்சியிலும் பிஸ்தாவின் பங்கு கணிசமாகவே உள்ளது.. சரும வறட்சியை போலவே, முடி வறட்சியையும் இந்த பருப்புகள் சரி செய்யக்கூடியவை.. மேலும், இந்த பருப்பில் வைட்டமின் E, புறஊதாக் கதிர்களால் தோல் பாதிக்கப்படாமல் இருக்கவும், தோல் புற்றுநோய் ஏற்படாமல் இருக்கவும் பேருதவி புரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+