ஷீலாவோ வஞ்சிரமோ அயிலாவோ! எந்த மீன் வாங்கினாலும் ஃபிரஷ்ஷா என கண்டுபிடிக்க டிப்ஸ் இதோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீன் பிடி தடைக்காலம் முடிந்தாலும் முடிந்தது, மக்களுக்கு மீன் மீதுதான் கண்ணாக இருக்கிறது. ஆனாலும் சிலருக்கு மீனை எப்படி வாங்குவது என தெரியாது. பிரஷ்ஷான மீனை எப்படி கண்டுபிடிப்பது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அசைவம் சாப்பிடும் மக்களுக்கு சிலருக்கு கோழிக்கறியும் சிலருக்கு ஆட்டுக்கறியும் சிலருக்கு இரண்டுமேவும் பிடிக்கும். அது போல் ஒரு சிலருக்கு இந்த கறியெல்லாம் பிடிக்கவே பிடிக்காது. அதற்கு பதிலாக கடல் வாழ் உயிரினங்களான மீன், நண்டு, இறால் உள்ளிட்டவை பிடிக்கும்.

health fish

இப்படிப்பட்ட மீன் பிரியர்கள் சிலருக்கு மீனில் பெயர் தெரியும். எந்த மீனை எதற்கு பயன்படுத்துவது என தெரியும். ஆனால் வாங்கும் மீன் பிரஷ்ஷாக இருக்கிறதா என்பது மட்டும் தெரியாது. பழைய மீனை வாங்கி வந்து அதனால் சமையலில் ருசியே இருக்காது.

மீன்களை எப்படி வாங்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 2 நாட்களுக்கு முன்பு சந்தைக்கு வந்த மீனா, இல்லை புதியதா என தெரியாமலேயே வாங்கி சாப்பிடுவார்கள். பொதுவாக ஆழ்கடலில் தங்கி மீன் பிடிப்பார்கள். பெரிய படகை வைத்திருப்போருக்கு அப்படி பிடித்தால்தான் லாபம் கிடைக்கும்.

அப்படி கிடைக்கும் மீன்களை அவர்கள் ஒவ்வொன்றாக எடுத்து படகில் கீழே உள்ள ஸ்டோரேஜ் ஏரியாவில் உள்ள ஐஸ்பெட்டியில் வைத்துவிடுவார்கள். அது கரைக்கு வந்து கடைகளுக்கு ஏலம் போய் பிறகு விற்பனையாகி வீடுகளுக்கு வருவதற்கு நேரம் பிடிக்கும்.

இந்த நிலையில் பிரஷ்ஷாக மீன்களை எப்படி வாங்குவது என்பது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சில டிப்ஸ்களை சொல்கிறார்கள். மீன் பிடித் தடைகாலமும் முடிவடைந்து மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்வதால் மார்க்கெட்டுகளில் அதிக அளவிலான மீன்கள் வருகின்றன. இதை பார்த்தவுடன் மீன் பிரியர்களுக்கு எச்சில் ஊறி வாங்கத் தோன்றும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் ஏராளமான மீன் இனங்கள் உள்ளன. அந்த மாவட்டத்தின் பிரதான தொழிலே மீன்பிடி தொழில்தான். மீனில் எந்த கலப்படமும் செய்யாமல் கொடுக்கப்படுகிறது. நாட்டு படகு, விசைப்படகுகளில் மீன் பிடிக்க இரவில் செல்கிறார்கள். அது போல் அதிகாலையும் சென்று மீன்பிடித்த வருகிறார்கள். இதனால் அந்த பகுதி மக்களுக்கு பிரஷ்ஷான மீனே கிடைக்கிறது.

ஒரு சில இடங்களில் மீன் விற்காவிட்டால் அதை ஐஸ் பெட்டியில் வைத்து மறுநாள் விற்பனை செய்து பொதுமக்கள் ஏமாற்றி வருகிறார்கள். இது போன்ற மீன்களை எப்படி கண்டறிவது என்பதை தெரிந்து கொள்ளலாம். மீனை கையில் வைத்து விரல் மூலம் அழுத்தி பார்த்து வாங்க வேண்டும். விரல் மூலம் அழுத்தும் போது அதில் குழி போல் உருவாகி மீண்டும் அந்த குழி பழைய நிலைக்கு திரும்பும். அப்படி வந்தால் நல்ல மீன் என்று அர்த்தம். செவில் பகுதியில் பார்க்கும் போது ரத்தம் சிவப்பு நிறத்தில் இருந்தால் அது நல்ல மீன். சிலர் குங்குமம், ஃபுட் கலரை பயன்படுத்த வாய்ப்பு உண்டு. இதனால் அந்த நிறத்தை கையில் தடவி பார்த்து வாங்க வேண்டும்.

புதிதாக பிடித்து வந்த மீன்கள் பளபளப்பாக இருக்கும். பழைய மீனில் அது இருக்காது. கண்களைச் சுற்றி வெள்ளை நிறம் இருக்கும். அது போல் மீனின் வயிற்று பகுதியை பிடித்தால் அது வளையாமல் நேராக இருக்க வேண்டும். ஒரு வேளை அது வளைந்தால் பழைய மீன் என்று அர்த்தம். இப்படியாக மீனை நன்றாக பார்த்து பார்த்து வாங்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+