கல்லீரலை காக்கும் குப்பைமேனி.. ரத்தத்தை கிளீன் செய்யும் குப்பைமேனி கஷாயம்.. 100 ஆயுசை தரும் மூலிகை
சென்னை: கல்லீரலை பாதுகாக்கக்கூடிய குப்பை மேனி கஷாயம் பற்றி தெரியுமா? குப்பை மேனி எண்ணெய் எப்படி தயாரிப்பது?
குப்பையில் வளரும் இந்த குப்பை மேனி தழைகளுக்கு ரத்தத்தை சுத்திகரிக்கக்கூடிய தன்மை உண்டு.. குப்பைமேனி இலையுடன் 2 மிளகை சேர்த்து அரைத்து, தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தாலே ரத்தம் சுத்திகரிப்பு அடையும்..
நரம்பு பலவீனம்: குப்பைமேனி இலையை அடிக்கடி சாப்பிட்டு வந்தாலே நரம்பு வலு பெறும்.. உடல் வலி, கால் வலி, மந்தத்தன்மை விலகிவிடும்..

சளி, தொண்டை வலி, தொண்டைக்கட்டு, தொண்டை கமறல் போன்ற தொந்தரவுகள் இருந்தாலும், இந்த குப்பை மேனி இலையை கசக்கி சாறு எடுத்து, அதில் சிறிது சுண்ணாம்பு கலந்து பூசினாலே குணமாகிவிடும்..
குப்பைமேனி இலை பொடியை விளக்கெண்ணையில் கலந்து சாப்பிடும்போது, வயிற்று பூச்சிகள் வெளியேறிவிடும். சொத்தை பல் அல்லது பல் வலி இருந்தால், குப்பை மேனி இலைகளை கழுவி, விரல்களாலேயே நசுக்கி, சொத்தை பற்களின் மீது வைத்தால் வலி உடனே விலகிவிடும்...
சொறி சிரங்கு: குப்பைமேனி இலையுடன் சிறிது கல் உப்பு சேர்த்து அரைத்து உடம்பெல்லாம் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் சொறி, சிரங்கு விலகி, சருமத்தின் நிறமும் பொலிவுபெறும்... உடம்பில் புண்கள், காயங்கள் இருந்தாலும், குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து பற்று போடலாம்.. அதேபோல, தீக்காயங்களுக்கும் இதுபோலவே அரைத்து பூசினால், புண்கள் ஆறிவிடும்.
இந்த குப்பைமேனி இலையை வைத்து கஷாயம் தயாரிப்பார்கள். அதாவது வெள்ளை கரிசாலை பொடி, மஞ்சள் கரிசாலை பொடி, வல்லாரை பொடி, இவற்றுடன் குப்பைமேனி இலைகளையும் சேர்த்து ஆயுர்வேதத்தில் தயாரிக்கப்படும் கஷாயமானது எண்ணற்ற நோய்களை நீக்குகிறது.
ஈரல் நோய்கள்: குறிப்பாக, ஈரல் நோய்கள், மண்ணீரல் நோய்கள், ஈரலை பாதிக்கக்கூடிய தொற்றுகள் உள்ளிட்ட அனைத்தையும் இந்த கஷாயம் குணமாக்கிவிடும்.. உடல் உறுப்புகள் பலம்பெறவும, ஆரோக்கியமாக இருக்கவும் இந்த கஷாயம் பயன்படுத்தப்படுகிறது.. ஈரல் நோய் சிறந்த மருந்தாக குப்பைமேனி கஷாயம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.
மண்ணீரல் விரிவாக இருப்பது, மண்ணீரல் வீக்கம் போன்றவற்றை குணப்படுத்தும் அருமருந்து இந்த குப்பைமேனி கஷாயம்.. எனவே, மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று இந்த கஷாயத்தை பயன்படுத்தினால் நோயின்றி வாழ முடியும்.. ரத்த சோகை சார்ந்த நோய்கள், ரத்தத்திலுள்ள தொற்றுகளுக்கும் இந்த கஷாயம்தான் ஆயுர்வேதத்தில் முக்கிய மருந்தாகிறது.. கண் நோய்களை நீக்கி, பார்வையை கூர்மையாக்கக்கூடிய தன்மை இந்த குப்பை மேனிக்கு உண்டு.
குப்பைமேனி இலை: அதேபோல, இந்த குப்பைமேனி இலையில் எண்ணெய் காய்ச்சி வைத்து கொண்டால், எந்த சரும நோய்களையும் அண்டவிடாமல் தடுக்கலாம்.. குப்பைமேனி இலையை ஒரு கைப்பிடி எடுத்து சுத்தம் செய்து, விழுதுபோல அரைத்து கொள்ள வேண்டும். பிறகு, அதன் சாற்றை மட்டும் வடிகட்ட வேண்டும்.
ஒரு வாணலில் இந்த சாற்றினை ஊற்றி, அதே அளவுக்கு தேங்காய் எண்ணெய்யும் சமமாய் சேர்த்து, அத்துடன் சிறிது மஞ்சளையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.. நன்றாக கொதித்து சத்தம் அடங்கும்வரை காய்ச்ச வேண்டும்.. சிறிது நேரம் கழித்து, தண்ணீர் வற்றியதும் அடுப்பை நிறுத்திவிட வேண்டும். வாணலில் தேங்கியிருக்கும் எண்ணெய்யை மட்டும் ஆறவைத்து எடுத்து கொண்டால், குப்பைமேனி எண்ணெய் ரெடி.
சரும வியாதி: தோல்நோய்கள், நோய்த்தொற்றுகள், காயங்கள், சரும வியாதிகள் போன்றவற்றுக்கு குப்பை மேனி எண்ணெய் பயன்படுகிறது.. உடலில் ஏற்படும் அரிப்பு, தடிப்புகளுக்கு குப்பைமேனி எண்ணெய் பயன்படுகிறது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications