ஆசனவாய் அரிப்பா.. கவலையை விடுங்க.. உருளைக்கிழங்கு போதுமே..ஆசனவாய் எரிச்சலை தணிக்கும் சூப்பர் டிப்ஸ்
சென்னை: ஆசனவாய் பகுதியில் அரிப்பு, எரிச்சலுக்கு காரணங்கள் என்னென்ன? இவைகளை வீட்டு வைத்தியத்தினால் குணப்படுத்த முடியுமா?
மூலநோய், வயிற்றுபோக்கு, நோய் தொற்றுகள் இருந்தாலே ஆசனவாய் பகுதியில் எரிச்சல் ஏற்படும்.. இப்படியான அறிகுறிகள் இருந்தாலே உடனடியாக டாக்டரை சந்திக்க வேண்டும்.. சிறிய அளவிலான புண்கள் இருந்தாலும் மருத்துவரை அணுக வேண்டும். மலம் கழிக்கும்போது ரத்தம் வந்தாலும் உடனே டாக்டரிடம் செல்ல வேண்டும்.. இதற்கெல்லாம் வீட்டிலேயே வைத்தியத்தை முயற்சிக்கக்கூடாது.

ஆசனவாய் அரிப்பு: மற்றபடி, ஆசனவாய் அரிப்புக்கு நிறைய காரணங்கள் இருக்கலாம்.. வெயில் காலங்களில் இப்படியான அரிப்புகள் ஆசன பகுதியில் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான்.. அல்லது அதிக ஈரப்பதமான குளிர்நாட்களில் அரிப்புகள் ஏற்படலாம்.
அல்லது சுத்தமின்மை, சுகாதாரமற்ற கழிப்பிடம், ரசாயன பொருட்களை பயன்படுத்துதல், வயிற்றுப்போக்கு, சுத்தமில்லாத உள்ளாடைகள், உள்ளாடைகளுக்கு பயன்படுத்தும் சோப்பின் தரம் போன்றவைகள், எல்லாமே காரணமாகிவிடுகின்றன.. எனவே, சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உடலை வைத்திருப்பதும், உடுப்புகளை அணிவதும், மிக முக்கியமான காரணமாகும். சர்க்கரை நோய், தைராய்டு இருந்தாலும் ஆசனவாய் அரிப்பு ஏற்படலாம்.
உடலுறவு: அதேபோல, உடலுறவு மூலமும் தொற்றுகள் பரவலாம்.. அதாவது, ஆசனவாய் வழியாக உடலுறவு மூலமும் பரவலாம். அதனால், உடலுறவுக்கு பிறகு அந்தரங்க உறுப்பையும் ஆசனவாய் பகுதியையும் தண்ணீரால் சுத்தப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் டாக்டர்கள்.
ஆசனவாயில் எரிச்சல், வலி இருந்தால் அந்த இடத்தில் விளக்கெண்ணெய்யை தடவலாம்... அல்லது துத்தி இலையை பறித்து கழுவி, சுத்தம் செய்து, சின்ன வெங்காயம் சேர்த்து கூட்டு, பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால், இந்த எரிச்சல் நீங்கும்.
அல்லது துத்தி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி, லேசான சூட்டுடன் ஆசனவாயில் வைத்து கட்டிவந்தால் எரிச்சல், வலி நீங்குமாம்.. அல்லது சித்த மருத்துவக் கடைகளில் கிடைக்கும் கருணைக்கிழங்கு லேகியம், இதற்கு மிகச்சிறந்த மருந்து என்கிறார்கள்.
நிவாரணம்: விளக்கெண்ணெய்யை போலவே, தேங்காய் எண்ணெய்யும் சிறந்த நிவாரணம் தரக்கூடியது.. இது மலத்தை வெளியேற்றுவதை எளிதாக்குகிவதுடன், ஆசன வாய் எரிச்சல், ஆசனவாய் பிளவுகளை சரிசெய்கிறது.. இதனால் புண்கள் இருந்தாலும் ஆறிவிடும். அல்லது கற்றாழையையும் ஆசனவாய் பிளவுகளில் வைத்து வந்தால், வலி, எரிச்சல் தணியும்.. ஆளிவிதை டபுவரை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தாலும், இந்த எரிச்சலும், வலியும் தீரும்.
நார்ச்சத்து, நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.. குறிப்பாக பழங்களும், கீரைகளும் இதற்கு நிறையவே உதவுகின்றன.. காய்கறிகளில் புடலங்காய் தோல், விதை, வெண்டைக்காய், போன்றவற்றை வேகவைத்து சாப்பிட்டால் அரிப்பு நீங்கும்.. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.. முக்கியமாக மலச்சிக்கலை தவிர்த்துவிட்டாலே, இப்படியான பிரச்சனைகள் அண்டாது என்கிறார்கள்..

நான்கைந்து பூண்டு பற்களை நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து, இறக்கி, குளிர்ந்ததும் அந்த தண்ணீரை கொண்டு ஆசனவாய் பகுதியை கழுவிவந்தால், அரிப்பு நீங்கும் அல்லது உருளைக்கிழங்கை வெட்டி, அதன் துண்டுகளை ஆசன வாயில் வைத்து சிறிது நேரம் தேய்த்தாலும் அரிப்பு நீங்குமாம்.
நிவாரணம்: அதேபோல, தொலை தூர பயணங்களை தவிர்ப்பது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதை தவிர்ப்பது போன்றவைகளை கடைப்பிடித்தாலும் இந்த தொந்தரவுகள் ஏற்படாது. இதெல்லாம் தற்காலிகம்தானே, 2 நாட்களுக்கு மேல் வலி, எரிச்சல், அரிப்பு இருந்தால் டாக்டரை சந்திக்கவேண்டும்.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications