இரவில் கண் விழிப்பவர்களுக்கு அதிக உடல்நலகுறைவு ஏற்படுகிறதா? 37 ஆண்டு கால டேட்டாவில் புதிய ஆய்வு
சென்னை: இரவு நேரத்தில் நீண்ட நேரம் கண் விழிப்பவர்களுக்கு அதிக உடல்நலக் குறைவு ஏற்படுகிறதா என்பது குறித்து புதிய ஆய்வு முடிவுகள் என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்.
சீக்கிரம் தூங்கி, சீக்கிரம் எழுதல் என்பதுதான் நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்தது. இதை இன்று வரை பெரும்பாலானோர் கடைபிடித்து வருகிறார்கள். சில கிராமங்களில் இரவு 8 மணிக்கு மேல் மக்கள் நடமாட்டமோ வாகன இயக்கமோ இருக்காது.
அது போல் அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து அவரவர் வேலையை செய்வார்கள். வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு வெளி வேலைக்கும் சென்றுவிடுவார்கள். இந்த பழக்கத்தில் இன்னொரு நன்மையும் இருக்கும்.

அதாவது இரவு உணவை 7 மணிக்கே சாப்பிட்டுவிட்டு ஒரு மணி நேரம் உட்கார்ந்திருந்துவிட்டு இரவு 8 மணிக்கு தூங்க சென்றுவிடுவார்கள். இதனால் உணவு எளிதில் ஜீரணமாகி உடல் உபாதைகளை ஏற்படுத்தாமல் இருந்தது. ஆனால் இன்று தொழில் வளர்ச்சி அடைய இந்த பழக்கவழக்கங்கள் மாறிவிடுகின்றன.
இரவு நேரத்தில்தான் சிலர் பகல் போல் இயங்கும் அளவுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகிவிட்டன. அமெரிக்காவில் உள்ள நிறுவனத்திற்கு இந்தியாவில் இருந்தபடியே பணியாற்றி வருகிறார்கள். இந்தியர்களுக்கு இரவு நேரம்தான் அமெரிக்கர்களுக்கு பகல் நேரம் என்பதால் இரவு நேரத்தில் இந்தியர்கள் கண் விழித்து பணியாற்றுகிறார்கள்.
அதாவது 20 ஆண்டு கால பழக்கவழக்கத்தை வேலைக்காக மாற்றிக் கொள்ளும் சூழல் எழுந்துள்ளது. இரவு நேரத்தில் நீண்ட நேரமாக விழித்துக் கொண்டு அதன் பிறகு நள்ளிரவில் சாப்பிட்டு விட்டு மீண்டும் அதே வேலையை தொடர்ந்து பகல் முழுவதும் தூங்குவது என இவர்களுடைய லைப்ஸ்டைல் மாறிவிடுகிறது.
ஆனால் நீண்ட நேரம் கண்விழித்து கண்ட நேரத்தில் சாப்பிடுவோருக்கு மாரடைப்பு உள்ளிட்ட உயிருக்கு உலை வைக்கும் நோய்கள் ஏற்படும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. மருத்துவர்களிடம் ஒரு சாதாரண தலைவலி என சென்றாலே அவர்கள் சொல்வது இரவில் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு காலையில் சீக்கிரம் எழுதல்தான்.
இரவு நேரம் கண் விழிப்பதால் பலரால் உடல் உழைப்பே இல்லாமல் போய்விடுகிறது. இதுவும் உடல் உபாதைக்கு காரணமாகிறது. இந்த நிலையில் இரவு நேரம் விழிப்பதால் மட்டும் உடல் நலக்கோளாறுகள் ஏற்படுவதில்லை என புதிய ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது இரவு கண் விழிக்கும் மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகிறது என்றால் அதற்கு அது மட்டும் காரணமில்லை என்கிறது இந்த புதிய ஆய்வு.
ஃபின்லாந்தில் 37 ஆண்டுகளாக இரவு நேரத்தில் பணியாற்றிய 23 ஆயிரம் பேரின் டேட்டாக்களை வைத்து புதிய ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களில் இரவு நேரத்தில் கண் விழிப்பவர்கள், காலை நேரத்தில் வேலை பார்ப்பவர்கள் என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு இவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் 8700 பேர் சில ஆண்டுகளிலேயே இறந்துவிட்டனர்.
அவர்கள் குறித்து மற்றவர்களிடம் விசாரிக்கப்பட்டது. அதில் அவர்கள் காலையில் கண் விழிப்பவர்களா இல்லை இரவு நேரத்தில் கண் விழிப்பவர்களா என கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலானோர் இரவு நேரத்தில் கண் விழிப்பவர்கள் என கூறினார். காலையில் கண் விழித்து வேலை பார்ப்பவர்களை காட்டிலும் 21 சதவீதம் அதிக ஆபத்து இரவில் கண் விழிப்போரிடம் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
அதே நேரம் அவர்கள் இரவு நேரத்தில் கண் விழித்தது மட்டுமே அவர்களின் இறப்பிற்கு காரணம் இல்லை என்பதையும் தெரிந்து கொண்டனர். இரண்டாவது முறை அவர்களுடைய பழக்கவழக்கங்களை கேட்டறிந்தனர். அதாவது பாடி மாஸ் இன்டெக்ஸ், தூங்கும் மொத்தம் நேரம், படிப்பு, இணை நோய்கள் இருப்பது, மது குடிப்பது, சிகரெட் குடிப்பது ஆகியவை ஆண், பெண், வயது ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
மேற்கண்ட பழக்கங்களை உடையவர்களை காட்டிலும் இரவு நேரத்தில் கண் விழிப்பவர்களுக்கு உயிரிழப்பு ஏற்படும் ஆபத்து 9 சதவீதம குறைந்துள்ளது. எனவே இரவு பணியாற்றுபவர்களோ காலையில் பணியாற்றுபவர்களோ அவரவர் வாழ்க்கை முறையை பொருத்து பாதிப்புகள் ஏற்படும் என்பதை ஃபின்லாந்து ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications