சம்பா கோதுமை.. நோய்களை தவிடு பொடியாக்கும் சூப்பர் ரவை.. ஆனால் கோவை கோதுமையில் சிக்கல் வந்துருச்சே?
சென்னை: பெரும்பாலான மக்களால் அதிகம் விரும்பப்படும் சம்பா கோதுமையின் மருத்துவ நன்மைகள் என்னென்ன தெரியுமா? சர்க்கரை நோயாளிகள் சம்பா ரவையை சாப்பிடலாமா?
கோதுமையிலிருந்து தயாராவதுதான், ரவை, கோதுமை மாவு, மைதா மாவு, அரிசி ரவை, சோள ரவை போன்றவை எல்லாமே.. இவைகளில் மைதாவை தவிர மற்ற உணவுகள், சத்துக்கள் நிறைந்தவையே.

உயிர்ச்சத்துக்கள்: அதிலும், சம்பா ரவையை எடுத்துக் கொண்டால், ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், இரும்பு, துத்தநாகம், தாமிரம், மெக்னீசியம் போன்ற தாதுக்களின் வளமான ஆதாரங்கள் நிறைந்து கிடக்கின்றன.
முக்கியமாக கரையாத நார்ச்சத்துக்கள் இந்த சம்பா ரவையில் உள்ளன.. இதனால் இதய நோய்கள் எளிதில் நெருங்கவிடாமல் தடுக்கப்படுகிறது.. அதிகமான நார்ச்சத்துக்கள், மலச்சிக்கல் ஏற்படும் பிரச்சனையை எளிதாக தீர்க்கிறது.. இதனால் ஜீரணம் எளிதாவதுடன், இரைப்பை குடல் கோளாறுகளையும் அண்டவிடாமல் தடுக்கிறது.. அஜீரணம் காரணத்தினால், புளித்த ஏப்பம், அசிடிட்டி உள்ளிட்ட செரிமான கோளாறு இருந்தால், கோதுமை ரவையில் கஞ்சி செய்து சாப்பிட்டால் போதும்..
உடல் எடை: இந்த ரவையில் குறைவான கார்போஹைட்டும், அதிகமான புரோட்டீனும் நிறைந்துள்ளதால், உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு தவிர்க்க முடியாத உணவாக திகழ்கிறது.
நிறைய நார்ச்சத்து + புரதம் + வைட்டமின் B + குறைந்த கலோரி போன்றவை அனைத்துமே உள்ளதால், மிகச்சிறந்த டயட் உணவாக இந்த சம்பா ரவை உள்ளது. இதனை காலையில் டிபனாக சாப்பிடும்போது, வயிறு நிரம்பிய உணர்வு கிடைப்பதுடன், அன்றைய தினத்துக்கு தேவையான ஆற்றலையும் வழங்குகிறது.. உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது.. உடல் எடையும் மெல்ல குறைய துவங்குகிறது.
கொழுப்பு: மேலும், உடலிலுள்ள அதிக கொழுப்பை கரைத்து வெளியேற்ற துணை புரிகிறது.. அதேபோல, டிரை கிளிசரைடு அளவையும் குறைக்கிறது. இந்த சம்பா கோதுமை ரவையில், காய்கறிகளையும் சேர்த்து சமைத்தால், உடல் எடை குறைவோருக்கும், நீரிழிவுநோயாளிகளுக்கும் மிகப்பெரிய பலனை தரும். தினமும் 3 வாரங்களுக்கு 23 கிராம் நார்ச்சத்து எடுத்து கொள்பவர்களுக்கு, உடலில் 5% கெட்ட கொழுப்பை குறைக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
அதைவிட முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த சம்பா ரவை, வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.. சர்க்கரையின் அளவை கணிசமாகக் குறைப்பதுடன், கொழுப்புச்சத்து, டிரைகிளைசிரைட் (Triglyceride) அளவையும் பிரதானமாக குறைக்க செய்கிறது.. ரத்த சர்க்கரையின் அளவைச் சமநிலையில் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது சம்பா ரவை..
இன்சுலின்: இந்த சம்பா கோதுமையில், மெக்னீசியம் நிறைந்திருக்கின்றன.. எனவே, இன்சுலின் உணர்திறனையம் ஊக்குவிக்க செய்கிறது. பொதுவாகவே, மெக்னீசியம் நிறைந்த உணவுகள்14 சதவீதம் நீரிழிவு அபாயத்தை குறைக்க செய்கிறதாம். கோதுமை ரவையில் செலினியம் சத்துக்கள் உள்ளதால், தொற்றுநோய்களை அண்ட விடாமல், நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது...
அதேபோல, எலும்பு ஆரோக்கியத்துக்கும் நரம்பு மண்டலத்துக்கும் கோதுமை ரவை மிகவும் நல்லது.. எலும்பு அடர்த்தியை அதிகரிப்பதுடன், எலும்பு, பற்களையும் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வைத்திருக்கிறது.
மூட்டு வலி: மேலும், இதில், பாஸ்பரஸ், துத்தநாகம், மெக்னீசியம் போன்றவை உள்ளதால், ஒட்டுமொத்த நரம்பு மண்டலம் பாதுகாக்கப்படுகிறது.. மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள், முழங்கால் வலி உள்ளவர்கள், இந்த சம்பா கோதுமையை வறுத்து தூள் செய்து தேன் சேர்த்து கலந்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்..
முதுகுவலியால் தொந்தரவு இருப்பவர்களும் இதனை பயன்படுத்தி பலன் பெறலாம்..
இரும்புச்சத்து நிறைந்த சம்பா ரவை, ஹீமோகுளோபின் பிரச்சனையை தீர்க்கிறது.. அத்துடன், வைட்டமின் B காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் சரியான ஆற்றல் உற்பத்தி மற்றும் மூளை செயல்பாட்டுக்கு உதவுகிறது.
பெஸ்ட் உணவு: அவசரத்துக்கு கை கொடுக்கும் உணவாகவும், எளிமையான முறையில் செய்யக்கூடிய உணவாகவும், சீக்கிரத்திலேயே செய்து முடிக்கக்கூடிய உணவாகவும் சம்பா ரவை விளங்கி கொண்டிருக்கிறது. காலை உணவாக மட்டுமல்லாமல், இரவு நேரங்களில் சாப்பிடுதற்கு தகுந்த உணவாகவும் விளங்குவது இதன் சிறப்பாகும்.
கோவை தயாரிப்பு: கடந்த மாதம் கோவையில் சம்பா ரவை தயாரிப்பில், பகீர் புகார் கிளம்பியது.. உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள், இங்கு தயாராகும் பாக்கெட் சம்பா ரவையை ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதித்தனர்.. அதில், சம்பா ரவையில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அனுமதித்த அளவைவிட, 6 மடங்கு அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதாவது, உணவுப் பொருட்கள் கெடாமலிருக்க பயன்படுத்தும் ரசாயனமான 'குளோர்பிரிபோஸ்' (Chlorpyrifos) அனுமதிக்கப்பட்ட அளவான 0.01 மி.கி.,என்பதற்கு பதிலாக 0.0604 என்ற அளவுக்கு, 6 மடங்கு அதிகமிருப்பது கண்டறியப்பட்டது. இது உண்பதற்குத் தகுதியற்றது என்றும், இதனை சாப்பிடுவதால் நுரையீரலுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும் சொல்லி கோவையில் தயாராகும் 8 பிராண்ட்களின் மீது அதிகாரிகளே பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தனர்.
அதுமட்டுமல்லாமல், இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட சம்பா ரவையில் பூச்சிக்கொல்லி அதிகமிருப்பதைக் கண்டறிந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகள் இவற்றைத் திருப்பி அனுப்பியதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.. ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் இந்த குற்றச்சாட்டை உடனடியாக மறுத்திருந்தனர்.. எனினும். நம்பி சாப்பிடும் சம்பா ரவையிலும் கலப்படமா? என்று பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பஞ்சாப் கோதுமை: எப்போதுமே சம்பா கோதுமையை குறிப்பிட்ட நேரம் ஊறவைத்து, அதற்கு பிறகே உடைக்கப்படும்... அப்படி ஊறவைக்கும்போதுதான், இதுபோன்ற ரசாயனம் கலக்கப்படுவதாக சந்தேகம் கிளம்பியது.. அதிலும், சில முக்கிய பிராண்டுகளின் சம்பா ரவையில் மட்டும்தான் இதுபோல அளவுக்கு அதிகமான பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகிறதாம்..
முக்கியமாக, பஞ்சாப்பில் விளையும் சம்பா கோதுமையில் அதிக அளவில் தெளிக்கப்படும் பூச்சிக் கொல்லிகள்தான் காரணம் என்றும் சொல்கிறார்கள். சம்பா கோதுமையின் பரபரப்பு இன்னும் அடங்கவில்லை என்றாலும், தவிர்க்க முடியாத சம்பா உணவிலும் கலப்படமா? என்று மக்கள் நொந்து போய் உள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications