இலந்தை பழம்.. இனிமை நிறைந்த "இலந்தை" இருக்கு.. இதிலே உனக்கு கவலை எதுக்கு? குழந்தை வரம் தரும் இலந்தை
சென்னை: குழந்தை பேறு உண்டாக்கக்கூடிய மிக முக்கியமான மூலிகை இலந்தை மரம்.. இந்த மரத்தின் எல்லா பாகங்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை.
சிவப்பு கலரில் காணப்படும் இலந்தை பழம், புளிப்பு சுவையுடன் இருக்கும். வைட்டமின் சி நிறைந்த இந்த இலந்தையானது, பெரும்பாலும் அஜீரணத்தை போக்கவும், பித்தத்ததை தணிக்கவும் பயன்படும்.
நினைவுத்திறன்: இலந்தை பழத்தில் 74 சதவீதம் மாவுப்பொருள், 17 சதவீதம் புரோட்டீன், 0.8 சதவீதம் தாது உப்புகள், இரும்புசத்தும் நிறைந்துள்ளன.. வைட்டமின் A, C, B3, B6 போன்றவை அடங்கியிருக்கின்றன.. இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு இந்த பழம் சிறந்த மருந்தாகும். ஞாபகசக்தியை அதிகரிக்க செய்யும் பண்பு இலந்தையில் உள்ளதால்தான், மாணவர்களுக்கு இலந்தையை அடிக்கடி சாப்பிட செய்வார்கள்

இலந்தை இலை மற்றும் பட்டையை நீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். கை, கால் குடைச்சல், வலி நீங்கும். வாந்தியை கட்டுப்படுத்தும். நாவறட்சி, அதிக தாகம், இருமல், உடல் உள் உறுப்பு புண்ணை குணப்படுத்தும்.
முக சுருக்கங்கள்: கால்சியம் நிறைந்த இலந்தை, சிறந்த ஆன்டி ஆக்சிடன்ட்டாக செயல்படுகின்றன.. அதனால்தான், முகத்தில் சுருக்கங்களை நீக்கி, இளமையை தக்க வைக்கிறது இந்த இலந்தை.. பற்கள் வலுவாகவும், எலும்புகள் உறுதியாகவும் இருக்க வேண்டுமானால் இலந்தையை பரிசீலிப்பார்கள். உடல் எடை குறைக்க நினைப்போருக்கு பெஸ்ட் பழமாக இந்த இலந்தை உள்ளது.. காரணம், உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து, அஜீரணத்தை போக்கி, குடல் இயக்கத்தை சீராக்குகிறது..
உடல் சூடு இருப்பவர்கள், இலந்தை பழம் சாப்பிட்டு வந்தால், நீர்ச்சத்து காக்கப்படும்.. இந்த இலந்தையின் இலை, பட்டையை நீரில் கொதிக்க வைத்து குடித்தால், கை, கால் குடைச்சல், நீங்கும்.. ரத்தத்தை சுத்திகரித்து, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் இந்த பழத்துக்கு உண்டு..
கர்ப்பிணிகள்: இலந்தை இலையுடன் 1 கைப்பிபிடி மிளகு, 6, பூண்டுப்பல், 4 அரைத்து மாதவிலக்கான முதல், 2 நாட்கள் சாப்பிட்டு வந்தால், கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.. கருப்பை குற்றங்கள் நீங்கி, புத்திர பாக்கியம் கிட்டும். பெண்களுக்கு மாதவிலக்கின்பொது ஏற்படும் அதிகப்படியான உதிரப்போக்கை கட்டுப்படுத்துவதில், இலந்தை பழத்துக்கு பெரும்பங்கு உள்ளது.
வெளியூர்களுக்கு பஸ்களில் சென்றால், சிலருக்கு வாந்தியும், தலைச்சுற்றலும் ஏற்படும். இவர்களுக்கு இலந்தை பழம் தீர்வு தருகிறது.இந்த பழத்தின் இலைகள் குளிர்ச்சியை தரக்கூடியவை..
காயங்கள்: உடலில் எங்காவது காயங்கள் ஏற்பட்டுவிட்டால், அல்லது உடல் சூட்டினால் கட்டிகள் ஏற்பட்டுவிட்டால், இந்த இலையை அரைத்து காயங்கள் மீது பூசினாலே போதும், நிவாரணம் விரைவில் கிடைக்கும். ஆனால், எவ்வளவுதான் நன்மைகள் இருந்தாலும், இந்த பழத்தினை நிறைய சாப்பிடக்கூடாது.. இதனால் உடலில் சர்க்கரை அளவு மாறுபடுமாம்.












Click it and Unblock the Notifications