14 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு! யார் யார் மாற்றம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையில் ஐஜி மற்றும் கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் உள்ள 14 உயர்மட்ட ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக மதுரை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட முக்கிய மாநகர காவல் ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளதுடன், பல முக்கிய பிரிவுகளுக்கும் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அமைந்த பிறகு பல்வேறு துறைகளிலும் அதிரடி இடமாற்றங்கள் நடைபெற்று வருகிறது. நிர்வாக காரணங்களுக்காக இந்த மாற்றங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழக காவல்துறையில் 14 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை, திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர்களும் மாற்றப்பட்டுள்ளனர். மாற்றப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களின் புதிய பொறுப்புகள் விவரங்களை இங்கு பார்க்கலாம்.

Tamil Nadu IPS Transfer 14 Senior Police Officers Shifted in Major Administrative Reshuffle

1. ஆயுஷ் மணி திவாரி, ஐபிஎஸ்

* முந்தைய பதவி: டான்ஜெட்கோ முதன்மை லஞ்ச ஒழிப்பு அதிகாரி
* புதிய பதவி: சென்னை டிஜிபி அலுவலக தலைமையிடத்து கூடுதல் காவல்துறை இயக்குநர் (ADGP Headquarters)

2. எஸ். ராஜேந்திரன், ஐபிஎஸ்

* முந்தைய பதவி: திருப்பூர் மாநகர காவல் ஆணையர்
* புதிய பதவி: மதுரை மாநகர காவல் ஆணையர்

3. கபில் குமார் சி. சரத்கர், ஐபிஎஸ்

* முந்தைய பதவி: மதுரை மாநகர காவல் ஆணையர்
* புதிய பதவி: சென்னை பெருநகர காவல் சட்டம்-ஒழுங்கு (வடக்கு) கூடுதல் ஆணையர்

4. பிரவேஷ் குமார், ஐபிஎஸ்

* முந்தைய பதவி: சென்னை சட்டம்-ஒழுங்கு (வடக்கு) கூடுதல் ஆணையர்
* புதிய பதவி: கடலோர பாதுகாப்பு குழும (Coastal Security Group) ஐஜி

5. எஸ். ராஜேஸ்வரி, ஐபிஎஸ்

* முந்தைய பதவி: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு ஐஜி
* புதிய பதவி: திருப்பூர் மாநகர காவல் ஆணையர்

6. அனில் குமார் கிரி, ஐபிஎஸ்

* முந்தைய பதவி: சேலம் மாநகர காவல் ஆணையர்
* புதிய பதவி: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு (Idol Wing CID) ஐஜி

7. ஜி. கார்த்திகேயன், ஐபிஎஸ்

* முந்தைய பதவி: சென்னை போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையர்
* புதிய பதவி: சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜி

8. டாக்டர் பி. சாமுண்டீஸ்வரி, ஐபிஎஸ்

* முந்தைய பதவி: சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜி
* புதிய பதவி: சென்னை பெருநகர போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையர்

9. ஏ.ஜி. பாபு, ஐபிஎஸ்

* முந்தைய பதவி: டிஜிபி அலுவலக நவீனமயமாக்கல் பிரிவு ஐஜி
* புதிய பதவி: சென்னை பெருநகர காவல் தலைமையிடத்து கூடுதல் ஆணையர்

10. கே. ஜோஷி நிர்மல் குமார், ஐபிஎஸ்

* முந்தைய பதவி: சென்னை பெருநகர காவல் தலைமையிடத்து கூடுதல் ஆணையர்
* புதிய பதவி: சேலம் மாநகர காவல் ஆணையர்

11. பி.சி. தேன்மொழி, ஐபிஎஸ்

* முந்தைய பதவி: டிஜிபி அலுவலக பணியாளர் நலப்பிரிவு (Establishment) ஐஜி
* புதிய பதவி: சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) கூடுதல் ஆணையர்

12. ஏ. ராதிகா, ஐபிஎஸ்

* முந்தைய பதவி: சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) கூடுதல் ஆணையர்
* புதிய பதவி: டிஜிபி அலுவலக நிர்வாகப் பிரிவு (Administration) ஐஜி

13. சி. மகேஸ்வரி, ஐபிஎஸ்

* முந்தைய பதவி: டிஜிபி அலுவலக நிர்வாகப் பிரிவு ஐஜி
* புதிய பதவி: லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்ககம் (DVAC) சிறப்பு புலனாய்வு பிரிவு-1 ஐஜி

14. ஏ.டி. துரைகுமார், ஐபிஎஸ்

* முந்தைய பதவி: லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்ககம் (DVAC) சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜி
* புதிய பதவி: டிஜிபி அலுவலக பணியாளர் நலப்பிரிவு (Establishment) ஐஜி

இந்த இடமாற்ற உத்தரவுகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருவதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+