தாளிக்கீரை.. குழந்தை வரம் கொடுக்கும் நறுந்தாலி கீரை தெரியுமா? மூலிகைகளின் வரப்பிரசாதம் தாலிக்கீரை
சென்னை: கீரைகள் என்றாலே உடலுக்கு நன்மைகள்தான் என்றாலும், ஆண்மை குறைப்பாட்டினை போக்குவதற்காகவே உள்ள பிரத்யேக கீரைகள் மிக சொற்பமாகவே உள்ளன.
கிட்டத்தட்ட 80-க்கும் மேற்பட்ட கீரை வகைகள் இருந்தாலும், இவைகளில் ஒருசிலவற்றை மட்டுமே நம்முடைய சமையலில் பயன்படுத்தி வருகிறோம். அதனால்தான், காட்டில் கிடைக்கும், நாட்டுக்கீரைகள் பற்றி பலருக்கு தெரியாமலேயே போய்விடுகிறது.

முருங்கைக்கீரை: ஆண்மை குறைபாட்டை தீர்ப்பதற்கு, கிட்டத்தட்ட 5 வகையான கீரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.. தூதுவளை, பசலைக்கீரை, அரைக்கீரை, முருங்கைக்கீரை போன்றவற்றுடன் சேர்த்து பரிந்துரைக்கப்படுவதுதான் இந்த தாளிக்கீரை. நறுந்தாளி கீரை என்றும் இதனை சொல்வார்கள்..
வேலிகள், புறநகர்ப்பகுதிகள், காட்டுப்பகுதிகளில் இந்த கீரைக்கொடி காணப்படும்.. அதுவாகவே படர்ந்து வளரக்கூடிய அற்புதமான மூலிகையாகும்.. இந்த செடியின், பூக்கள், கீரைகள், என அத்தனையுமே மருத்துவ குணங்களை கொண்டிருக்கும்.. ஆனால், பெரும்பாலும், இந்த கீரைகள்தான் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆண்மை குறைபாடுகள்: உடல் சூட்டை தணித்து, குளிர்ச்சியை தரக்கூடியது இந்த தாளிக்கீரை.. காமம் பெருக்கும் வல்லமை படைத்தது.. அதனால்தான், ஆண்மை குறைபாடுகளை போக்குவதற்கு இக்கீரையை பயன்படுத்துகிறார்கள்.. இதைத்தவிர, உள் உறுப்புகளில் ஏற்படும் புண்களை ஆற்றக்கூடிய சக்தி இந்த கீரைக்கு உண்டு.. வயிற்றுப்புண், வாய்ப்புண்களை ஆற வைத்து, சிறுநீர் பாதையில் தோன்றும் தொற்றுக்கள், நோய்களை குணப்படுத்தக்கூடியது..
அதைவிட முக்கியமாக, சரும பாதுகாப்புக்கு இந்த கீரை மிகவும் பயன்படுகிறது.. இதனால், தோலில் நமைச்சல்களை நீக்கி, தோல்களுக்கு பளபளப்பையும் தருகிறது..
கீரைகள்: மற்ற கீரைகளைபோலவே, இந்த கீரையையும் பருப்புடன் சேர்ந்து கடைந்து சாப்பிடலாம்.. கூட்டு வைத்தும் சாப்பிடலாம்.. குழந்தை பெற்ற பெண்கள், இந்த கீரையை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும் என்கிறார்கள். ஆடு, மாடுகளுக்கு அருமருந்தாகி கொண்டிருக்கும் இந்த கீரையை வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தாலே போதும், குடல் புண்கள் அண்டாது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications