முருங்கைக்கீரை "நம்பர் 1" கீரையாக திகழ இதுதான் காரணம்.. முருங்கையிலையை இப்படி சமைக்க கூடாதாமே.. அருமை
சென்னை: முருங்கைக்கீரையின் நன்மைகள் அபரிமிதமானது என்றாலும், எப்படி சமைக்க வேண்டும் தெரியுமா? முருங்கைக்கீரையை பற்றி உணவு நிபுணர்கள் சொல்வது என்ன தெரியுமா?
முருங்கைக்கீரையில், இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம், கால்சியம், காப்பர், ஜிங்க், மக்னீசியம், மாங்கனீசு, வைட்டமின் A, C, B காம்ப்ளக்ஸ், பீட்டா கரோட்டீன், டைட்டாஜீ பைபர், கார்போஹைட்ரேட்ஸ், புரோட்டீன் சத்துக்களும், ஆண்டி - ஆக்சிடன்ட், ஆண்டி - டயாபடிக், ஆண்டி - அத்திரோஜெனிக், ஆண்டி - ஹைப்பர் டென்சிவ், ஆண்டி - மைக்ரோபியல், ஆண்டி - இன்பிள மேட்ரி, ஆண்டி - பையிரிடிக், ஹெப்படோ புரொடெக்டிவ் போன்ற நோய் எதிர்ப்பு சக்திகள் அனைத்துமே நிரம்பி கிடக்கின்றன.

நம்பர் 1: பொதுவாக முருங்கைக்கீரை என்றாலே, இரும்புச்சத்துக்களை வாரிவழங்கக்கூடியதுதான்.. அதேசமயம், புரோட்டீன் சத்துக்களை வாரிவழங்குவதிலும், நம்பர் 1 இடத்தை இந்த முருங்கை பிடித்திருக்கிறதாம்..
வழக்கமாக, சைவ உணவுகளில் சோயாவில்தான் நிறைய புரதச்சத்து இருக்கும் என்பார்கள்.. ஆனால், இப்போது முருங்கையில் புரதச்சத்து அதிகம் என்று உணவுத்துறை நிபுணர்களே பரிந்துரை செய்கிறார்கள்.. தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதம் உள்ள கீரையில் உள்ளதாம்.. முட்டை, பால், சிக்கன் உள்ளிட்ட இறைச்சியில் கிடைக்கக்கூடிய புரதமானது, முருங்கையிலிருந்து கிடைக்கும் புரதத்துக்கு இணையாக உள்ளது என்கிறார்கள் நிபுணர்கள்.
முருங்கைக்கீரை: பொதுவாக, கீரைகளை பசுமை மாறாமல் சாப்பிட்டால் தான் முழு ஊட்டச்சத்துக்களும் முழுமையாக கிடைக்கும்... ஆனால், முருங்கைக்கீரை மட்டும் இதில் விதிவிலக்காகும்.. மற்ற கீரைகளைப்போல அல்லாமல் காய்ந்து சருகாகி கிடந்தாலும்கூட, அதன் ஊட்டச்சத்துகள் மாறாமல் இருக்கும்.
அதற்காக, அதிக நேரம் வேகவைக்கக்கூடாது.. முருங்கையை நீண்ட நேரம் சமைப்பதால், பார்வைத்திறனுக்கு உதவக்கூடிய கரோடின் சிதைந்துவிடும். முருங்கைக்கீரையை எண்ணெய்யிலும் பொரிக்கக்கூடாது..
முருங்கையிலை: எப்போதுமே முருங்கையுடன் பால் சேர்க்கக்கூடாது என்பார்கள்.. காரணம், பாலில் உள்ளதைவிட 4 மடங்கு அதிக கால்சியம் முருங்கையில் உள்ளது. பால் சேர்த்து முருங்கையை சாப்பிட்டால், அதிலுள்ள கால்சியம் கீரையிலுள்ள இரும்புச்சத்தை முறித்து விடுமாம்.
அதேபோல, ஒரு சராசரி மனிதனுக்கு மொத்தம் 20 அமினோ அமிலங்கள் தேவைப்படுகிறதெனற்ல், இதில் 18 அமினோ அமிலங்கள் இந்த கீரையில் அடங்கியிருக்கிறது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத 8 அத்தியாவசிய அமினோ அமிலங்கள், இறைச்சியில் மட்டுமே கிடைக்கும்.. ஆனால், அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே உணவு, இந்த முருங்கைக்கீரைதான் என்கிறார்கள்.
முருங்கையின் எல்லா பாகங்களும் சிறந்த உணவாகவும் மருந்தாகவும் பயன்தருகிறது.. அதனால்தான், இந்த கீரையை மட்டும் வாரம் 3 முறையாவது உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications