தேங்கிய சளி.. நுரையீரல் தொற்றினை விரட்டும் ஆடாதோடை இலை! ஒரே இலையில் உள்ள பல ஆச்சரியம் ஆடாதோடை மூலிகை
சென்னை: ஒரு செடி வளரும்போதே, சுற்றுசூழலுக்கு நன்மையை தருகிறது என்றால் அது இந்த ஆடாதோடை மட்டும்தான்.. இதற்கு என்ன காரணம் தெரியுமா? இந்த இலைகள் தரும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
இந்த ஆடாதோடை செடி எங்கே வளர்கிறதோ, அங்கே கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கிக்கொண்டு, ஆக்சிஜனை அதிகளவில் வெளியிடுகிறது.. எனவேதான், இந்த செடியை "ஆயுள் மூலிகை" என்கிறார்கள்.

தழைகள்: எல்லாவிதமான இலை, தழைகளையும் சாப்பிடும் ஆடுகள், இந்த இலையை மட்டும் சாப்பிடாதாம்.. ஆடு தொடாத இலை என்பதால்தான், "ஆடு தொடா" என்று பெயர் வந்ததாக சொல்கிறார்கள்.
சித்த மருத்துவத்தில் இந்த இலைகளுக்கு இன்னமும் மவுசு அதிகமாக உள்ளன.. கடுமையான காய்ச்சல்களுக்கு தரப்படும் குடிநீர் வகைகளில், இந்த ஆடாதோடையை கட்டாயம் சேர்த்து தயாரிக்கிறார்கள்... காரணம், ஆஸ்துமா, இருமல் போன்ற தொந்தரவுகளை நெருங்கவிடாது இந்த இலைகள்... இதனால், நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளியை முற்றிலும் போக்கக்கூடியது இந்த ஆடாதோடை இலைகள்.
வயிறு சுத்தம்: கசப்புத்தன்மை நிறைந்த இந்த இலைகள், ரத்தத்தை சுத்திகரிக்க செய்கிறது.. வயிற்றில் உள்ள புழுக்களை நீக்கி, வயிற்றை சுத்தப்படுத்தும் தன்மை இந்த மூலிகைக்கு நிறையவே உண்டு..
இந்த ஆடாதோடை இலைகளை தூள் செய்து, தண்ணீரில் கலந்து குடித்துவந்தால், தசை வலிகள் நீங்கிவிடும்.. ரத்த அழுத்தம் உள்ளவர்களும் இந்த பவுடரை மருந்தாக பயன்படுத்தலாம.
சுவாச கோளாறுகள்: இந்த ஆடாதோடை இலையை நிழலில் உலர்த்தி தூள் செய்து, சலித்து வைத்து கொள்ள வேண்டும்.. இந்த பவுடரை, 3 வேளையும், ஒரு ஸ்பூன் வீதம், 6 மாத காலம் சாப்பிட்டு, வெந்நீர் குடித்துவந்தால், நுரையீரல் பிரச்சனை, சைனஸ் பிரச்சனை, ஆஸ்துமா பிரச்சனை அனைத்து விதமான சுவாச கோளாறுகளும் நீங்கிவிடும். அவ்வளவு ஏன்? 48 நாட்களுக்கு இந்த ஆடாதோடை இலையை சாப்பிட்டு வந்தால் கடுமையான T.B-யும் விலகிவிடுமாம்.
அல்லது ஆடாதோடை இலையை அரைத்து சாறு எடுத்து குடித்து வந்தாலும் ஆஸ்துமா , சுவாச கோளாறுகள், காய்ச்சல் நீங்கும், அதனால்தான், கொடிய கொரோனா நேரத்தில் இந்த இலைகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டன.
விஷ முறிவு: ஒரு டம்ளர் தண்ணீரில் ஆடாதோடை இலையுடன் சிறிது துளசி மற்றும் குப்பைமேனியும் சேர்த்து காய்ச்சி வடிகட்டி குடித்தால், உடலிலுள்ள நஞ்சு முறிந்துவிடும்..
அதேபோல உடலில் புண்கள், தழும்புகள் இருந்தால், இந்த ஆடாதோடை இலையுடன் வேப்பிலை, சிறியா நங்கை இலை சேர்த்து அரைத்து பற்று போல போட்டு வந்தால் நிவாரணம் காணலாம். இவ்வளவு மகத்துவம் நிறைந்த ஆடாதோடை இலைகளை, மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று பயன் பெறுவதே சிறந்த ஆரோக்கியமாகும்.












Click it and Unblock the Notifications