வெற்றிலை தரும் வெற்றிகள்.. வெற்றிலை சாறு குடித்தாலே வீடுகளில் ஹேப்பி நியூஸ் வரும்.. அத்தனையும் நன்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெற்றிலை சாறுகள் ஆண்களுக்கு அருமருந்தாகின்றன.. மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று, வெற்றிலை சாறுகளை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானதாகும். வெற்றிலை தரும் நன்மைகள் என்னென்ன?

வெற்றிலையில் பாக்கு குறைவாகவும், சுண்ணாம்பு அதிகமாகவும் சேர்த்து சாப்பிடும்போது, ஜீரண சக்தி அதிகரிக்கும்.. பசி உணர்வு ஏற்படும். வயிற்றுப்புண், வாய்ப்புண், வாயில் துர்வாடை பிரச்சனை இருப்பவர்கள், சாயங்கால நேரத்தில், வெற்றிலை அதிகமாகவும், பாக்கு சுண்ணாம்பு இரண்டையும் குறைவாக சேர்த்து சாப்பிடலாம்.
உள்ளுறுப்புகள்: வெற்றிலைகள் வெப்பத்தை தரக்கூடியவை.. மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் போன்ற முக்கிய உறுப்புகளை உறுதிப்படுத்தக்கூடியவை. நரம்பு மண்டலத்துக்கு வலு தரக்கூடியவை.. தாய்ப்பால் சுரப்பியாக விளங்கக்கூடிய இந்த வெற்றிலைகள், வாய் துர்நாற்றத்தை போக்குகின்றன.. வெற்றிலையானது, நம் வயிற்றிலுள்ள வாயுவை வெளித்தள்ளக்கூடியவை.

Betel Leaf betel leaf juice

வைட்டமின் C, தயாமின், நியாசின், ரிபோஃப்ளேவின், கரோட்டின், என பல்வேறு சத்துக்கள் இதில் அடங்கியிருக்கின்றன.. பிரதானமாக இருப்பது, கால்சியமும், இரும்பு சத்துக்களும்தான்.

இரும்பு சத்துக்கள்: வெற்றிலையை பாக்கு, சுண்ணாம்புடன் சேர்த்து சாப்பிடும்போது கிடைக்கும் நன்மைகள் ஏராளம் என்றால், வெறும் வெற்றிலையை கசக்கி அதிலிருந்து கிடைக்கும் சாறு தரும் மருத்துவ நன்மைகள், அதைவிட ஏராளம். படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்துவந்தால், ஞாபக சக்தியை அதிகரிக்குமாம். ஆண்மை குறைபாட்டினை போக்குவதற்கு பிரதானமாக இந்த சாறுதான் பயன்படுகிறது.

காரணம், தீய பழக்கவழக்கம், ஷவர்மா உள்ளிட்ட ஃபாஸ்புட் உணவுகள் காரணாக, ஆண்மை குறைபாடுகள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.. இதனை வெற்றிலை சாறுகளை கொண்ட சரிசெய்யலாம். வெற்றிலையை வெறுமனே அடிக்கடி மென்று தின்று வருவதால், வயாகராவுக்கு இணையான சக்தியை பெற முடியுமாம்.

வெற்றிலை சாறு: விறைப்பு பிரச்சனைக்கு இந்த வெற்றிலை சாறு மருந்தாகின்றன.. இதற்கு வெற்றிலைகளை ஒரு கைப்பிடி எடுத்து, இடித்து, தண்ணீர் சேர்க்காமல் சாறு மட்டும் எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் விறைப்பு பிரச்சனை சரியாகும்.

அல்லது 2 வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு, ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி, கஸ்தூரி, ஏலக்காய், , லவங்கம், பாதாம், முந்திரி, திராட்சை, போன்ற அனைத்தையும் சிறிதளவு சேர்த்து, இரவு உணவுக்கு பின்னர், 2 வாரங்களுக்கு சாப்பிடுவதால், நல்ல பலனை கிடைக்குமாம்.

கோரோசன்: வெற்றிலையில், துளசி வேர்ப்பொடி கலந்து சாப்பிட்டாலும் ஆண்மை அதிகரிக்கக்கூடும். வெற்றிலையுடன், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும், கோரோசனையையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாம்பத்யத்தில் ஆர்வம் கூடும் என்பதால், தம்பதி இருவருமே இதனை சாப்பிடலாம்.

இயற்கை முறையில் ஆண்மை அதிகரிப்பில் வெற்றிலை முக்கிய பங்கு வகிப்பதால்தான், புதுமாப்பிள்ளைகளுக்கு விருந்தில் வெற்றிலை தரும் பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினார்களாம். இந்த வெற்றிலையிலுள்ள அமிலங்கள், விரைவில் விந்து வெளியேறுவதையும் தடுக்கக்கூடியதாக இருப்பதால், அளவுடன் இதை பயன்படுத்துவது நல்லது. விறைப்பு பிரச்சனை இருந்தாலும், வெற்றிலையை இடித்து நீர் சேர்க்காமல் சாறு எடுத்து அதை தேனுடன் சாப்பிட்டு வரவேண்டுமாம்.

இப்படி ஏராளமான பலன்களை வெற்றிலை சாறு தந்தாலும், மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று சாப்பிடுவதே சிறந்த ஆரோக்கியமாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+