இட்லிக்கு ஊற வைக்கறீங்களா? இதையும் சேர்த்துக்குங்க.. இட்லி, தோசை மாவில் நொதித்தல் செயல்பாடு.. வாவ்
ரவா இட்லி, ராகி இட்லி, ஓட்ஸ் இட்லி என பல்வேறு வகைகள் இருந்தாலும், பலரும் விரும்புவது அரிசி இட்லியைதான்.. ஆனால் அரிசி இட்லிக்கு பதிலாக, மேற்கண்ட தானியங்களை பயன்படுத்தி இட்லி வார்த்து சாப்பிடுவதே ஆரோக்கியமானதாகும்.. அல்லது அரிசி இட்லிதான் பிடிக்கும் என்றால், கருப்பு உளுந்து சேர்த்து மாவு அரைத்தால், ஓரளவு சத்துக்கள் கூடுதலாக கிடைக்கும்.

ஆரோக்கிய உணவு: இட்லிகள் எப்போதுமே ஆரோக்கியமான உணவாக கருதப்படுவதற்கு காரணம், அதில் எந்தவிதமான கொழுப்பும் இல்லை என்பதால்தான்... சத்து நிறைந்த உணவாகவும், கொழுப்புச்சத்து இல்லாமல் இருப்பதாலும் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவாகவும், தசைகளை வலிமையடைய செய்யக்கூடியகவும் உள்ளதால்தான் அனைவருக்குமே ஏற்ற உணவாக திகழ்கிறது.
அரிசிக்கு மாற்றாக ரவா இட்லி, கேழ்வரகு இட்லி என சிறுதானியங்களை சேர்த்து இட்லி செய்து சாப்பிட்டால் இன்னும் நல்லது.. அரிசியை பயன்படுத்திதான் மாவு அரைக்க வேண்டுமானால், கருப்பு உளுந்து பயன்படுத்தினால் அதிக நன்மை கிடைக்கும். அதேசமயம், சட்னிகளுக்கு பதிலாக, காய்கறிகள் அதிகம் கலந்த சாம்பார் தயாரித்து சாப்பிட்டால் இன்னும் நிறைய சத்துக்கள் கிடைக்கும் என்று அறிவுறுத்துகிறார்கள் நிபுணர்கள்..!
கம்பு இட்லி: இதில் சர்க்கரை நோயாளிகளுக்கு கம்பு இட்லி அதிக நன்மைகளை தருகிறது.. அதாவது, சிறுதானிய வகைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்த உணவுகளில் ஒன்றுதான் கம்பு. இந்த கம்பில் அதிக அளவு புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, Bகாம்ப்ளெக்ஸ், கால்சியம், மெக்னீசியம், குறைந்த அளவு கொழுப்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுபவர்களுக்கும் இந்த அத்தனை சத்துக்களும் கிடைக்கின்றன.ஒரு கப் கம்பு, அரை கப் உளுத்தம் பருப்பு , புழுங்கல் அரிசி அரை கப், தேவையான உப்பு சேர்த்து இந்த மாவு அரைத்து கொள்ளலாம். கம்பு, அரிசி, உளுந்து இந்த மூன்றையும் தனித்தனியாக ஊற வைத்து கொள்ள வேண்டும். இதில் கம்பை மட்டும் நைஸான ரவை பதத்தில் அரைத்து எடுக்கவும். உளுத்தம் பருப்பை வழக்கம்போல் புஸுபுஸுவென அரைத்து கொள்ள வேண்டும். உப்பு சேர்த்து கலந்து, புளிக்க வைத்து இட்லி சுடலாம்.
சர்க்கரை நோயாளி: கம்பில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ளதால், சர்க்கரை நோய் ஏற்படாமல் காக்கிறது.. உடல் எடையினை குறைக்க விரும்புவார்களும் கம்பு இட்லியை தாராளமாக எடுத்து கொள்ளலாம்.
அதேபோல, இட்லி மாவினை புளிக்க வைத்து தயாரிப்பதால், நொதித்தல் செயல்முறை காரணமாக, புரோ பயாடிக்குகள் மாவில் உருவாகின்றன. இதனால் நம்முடைய குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க இட்லி மாவு கட்டாயம் தேவைப்படுகிறது.
இட்லி மாவு: செரிமானம் மேம்படவும், நுண்ணூட்டச்சத்துக்களை பலப்படுத்தவும் இந்த புளிப்பு மாவு அவசியம் என்கிறார்கள். அதனால்தான், குளிர் அல்லது மழைக்காலங்களில், மாவை நீண்ட நேரம் நொதிக்க வைக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.. அதேசமயம், வெயில் நேரங்களில் இட்லி மாவை அதிக நேரம் புளிக்க விடக்கூடாது. ஏனென்றால், அதிக வெப்பநிலை காரணமாக, கோடையில் நொதித்தல் செயல்முறை விரைவாக நிகழ்ந்துவிடும்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications