காசினி கீரை.. ரத்தத்தில் நச்சுக்களா? ரத்தத்தை கிளீன் செய்யும் சூப்பர் டிப்ஸ்.. ப்ளீஸ் நோட் பண்ணுங்க
சென்னை: நம்முடைய ரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால், உடலில் ஏகப்பட்ட தொந்தரவுகள் நமக்கு வந்துவிடும்.. ரத்தம் அசுத்தமாக என்ன காரணம்? இதற்கு இயற்கையான முறையில் தீர்வு உள்ளதா?
ரத்தம் அசுத்தமாவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.. சுற்றுச்சூழல்கள், ஆரோக்கியமற்ற மற்றும் முறையற்ற உணவு பழக்கங்கள், அதிகமான வேலைப்பளு, உடல் பருமன், போதுமான அளவுக்கு தூக்கம் இல்லாதது, மன அழுத்தம், சிலவகை நோய்கள் போன்ற காரணங்களுக்காக ரத்தம் அசுத்தமாகலாம்.

புற்றுநோய்: இதனால் உடலுக்கு பலவித தொந்தரவுகள் வந்துவிடக்கூடும். அனைத்து உறுப்புகளும் சிறப்பாக செயல்படவேண்டுமானால், தூய்மையான ரத்தம் பாய்ந்தபடியே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உறுப்புகள் செயலிழக்கலாம், புற்றுநோய் முதல் சரும பிரச்சனைகள் வரலாம். குடல் பாதிப்பும் ஏற்படலாம்.
உடல் அசதி, காய்ச்சல், வயிற்று பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவையும் ஏற்படலாம். அதனால், முறையான உணவுகளை நாம் எடுத்து கொள்வதால், ரத்தம் சுத்தமாகும்.
நாவல்பழம்: இதற்கு முதலில் உதவியாக இருப்பது நாவல் பழம்தான்.. பொதுவாக இந்த பழம் சாப்பிட்டால் இதயம் பலப்படும் என்பார்கள்.. ஆனால், ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், ரத்தத்தை பெருக்கவும் இந்த பழம் பேருதவி புரிகிறது. அதேபோல, பேரீச்சம் பழமும், அத்திப்பழம் ரத்த விருத்திக்கு உதவுகின்றன.
ரத்த சுத்திகரிப்புக்கு துளசியில் மிகச்சிறந்த பலனை தரக்கூடியது.. நோய் எதிர்ப்பு சக்தியும் இதில் உள்ளது.. பாக்டீரியா எதிர்ப்பும், அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டது துளசி இலைகள். தினமும் ஐந்தாறு துளசிகளை வாயில் போட்டு மென்றாலே போதும். அல்லது துளிசி இலையில் டீ போட்டு குடிக்கலாம். அல்லது புதினா இலையுடன் வேப்பிலையும் சேர்த்து அரைத்து, தினமும் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் ஒரே மாதத்தில் ரத்தம் தூய்மையாகும்.
பீட்ரூட்: சமையலில் அடிக்கடி பீட்ரூட் சேர்த்து கொண்டால், மிகவும் நல்லது.. அதேபோல, இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால், ரத்தம் தூய்மைப்படும்.. தக்காளி ஜூஸ், லெமன் ஜூஸ் சாப்பிட்டு வந்தாலும் ரத்தத்தில் உள்ள நச்சுக்கிருமிகளை அழிந்து, ரத்தம் சுத்தமாகும். அல்லது வெறும் வயிற்றில் சுடுநீரில் எலுமிச்சம் சாறு பிழிந்தும் குடிக்கலாம்.

நெல்லிக்காயில் ரத்தத்தை தூய்மை செய்யும் பண்பு உள்ளது.. வெறும் நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தாலே போதும், பல நன்மைகள் கிடைக்கும். மஞ்சள் அதிகமாக சேர்த்து சமைப்பதால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.. இளநீர் குடித்தால் ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருள் வெளியேறிவிடும்.
தண்ணீர்: வெல்லத்தில், கெட்ட ரத்தத்தை வெளியேற்றும் பண்புகள் உள்ளதால், டீ போடும்போது வெல்லம் சேர்த்து கொள்ளலாம். இவைகளுடன் தண்ணீரை நிறைய குடித்து வந்தாலே போதும், உடலிலுள்ள கிருமிகள், நச்சுக்கள் வெளியேறி ரத்தம் புத்துணர்ச்சி பெறும். கீரைகளில் காசினி கீரையை, பாதாம் பருப்புடன் வாரம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டு வந்தால், ரத்தம் சுத்தமாகும்..
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications