ஒரே துண்டு.. குண்டு குண்டு உடம்பு மளமளனு குறைஞ்சிடும்.. இந்த "2 டீ" போதுமே.. சுண்டியிழுக்குது மஞ்சள்
சென்னை: உடல்எடையை குறைய வேண்டுமானால், மூலிகைகள் நமக்கு பெரும் உதவி புரிகின்றன.. அந்தவகையில், ஒருசில டிப்ஸ்களை இங்கு காண்போம்.
கொய்யா இலைகள், உடலின் எடையை குறைக்க உதவுகிறது.. நான்கைந்து கொய்யா இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, குடித்தாலே உடலிலுள்ள நச்சுக்கள் வெளியேறும்.. இந்த கொய்யா இலையில் டீ போல தயாரித்து குடிக்கலாம்..

கொய்யா இலை: ஆனால், இதில் சிறிது இஞ்சியையும் தட்டி சேர்த்து குடித்தால், உடல் எடை குறைய இன்னும் உறுதுணையாக இருக்கும்.. கெட்ட கொழுப்புகளும் கரைந்துவந்துவிடும். அல்லது கொய்யா இலையின் சாறு எடுத்து, அதனுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலும் உடல் எடை மெல்ல குறையும்.
இதுபோலவே, வெறும் வயிற்றில் கிராம்பு பயன்படுத்தலாம்.. கிராம்பில் புரதம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், ஹைட்ரோகுளோரிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளதால், செரிமானம், வாயு, மலச்சிக்கல் பிரச்சினைகளை எளிதாக தீர்க்கிறது.
கிராம்பு எண்ணெய்: காலையில் வெறும் வயிற்றில், ஒரு டம்ளர் நீரில் சில துளி கிராம்பு எண்ணெய்யை கலந்து குடித்தால், உடல் எடையை குறைக்க பேருதவி புரிகிறது.
திராட்சை, நாவல்பழம், பிளம்ஸ்பழம், கத்தரிக்காய் இவைகளை நீல நிற காய்கறிகள், பழங்கள் என்பார்கள்.. இவைகளில் வைட்டமின் C, மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், கெட்ட கொழுப்பை குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதுடன், செரிமானத்துக்கும் உதவி புரிகிறது.
ப்ளூ கலர் பழம்: இந்த பழங்களில் ஏகப்பட்ட ஆன்டிஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளதால், ரத்த அழுத்தத்தை முறைப்படுத்துகிறது.. இதய நோய் வராமல் தடுக்கிறது.. எனவே, எடையை குறைக்க நினைப்பவர்கள், ப்ளூபெரி, கருப்பு திராட்சை, ஊதா நிற முட்டைகோஸ், கத்தரிக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ள வேண்டுமாம்.
ஆண்டிபயாடிக் எனப்படும் மஞ்சளில் வைட்டமின் C, E, இரும்புச்சத்து, ஜிங்க் போன்ற சத்துக்களும், பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டி-செப்டிக் பண்புகளும் நிறைந்துள்ளன.. சுவாசம் பிரச்சனை மட்டுமல்லாமல், சருமம் தொடர்பான பிரச்சனைகள் மட்டுமல்லாமல் உடல் எடை குறைவதிலும் மஞ்சளுக்கு நிறைய பங்குண்டு.
ஆயுர்வேதம்: அதனால்தான், ஆயுர்வேதத்தில் மஞ்சளுக்கென்ற பிரத்யேக இடமுள்ளது.. இரவு தூங்கும் முன்பு, பாலில் சிறிது மஞ்சள் சேர்த்து குடித்தாலே சளி, இருமலுக்கு உதவியாக இருக்கும். தற்போது குளிர்காலம் என்பதால், இந்த மஞ்சளை சற்றுகூடுதலாகவே பயன்படுத்தலாம்..
வெறும் வயிற்றில் மஞ்சள் கலந்த நீரை குடிப்பது, உடல் எடையை இழக்க செய்கிறது.. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, மஞ்சள் கட்டி அல்லது அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, சுண்ட கொதிக்க வைக்க வேண்டும்.. பிறகு இதை வடிகட்டி, தேன் கலந்து குடிக்கலாம்.. காலையில் வெறும் வயிற்றில், இப்படி மஞ்சள் கலந்த நீரை குடித்தால், உடலுள்ள கழிவுகளும், நச்சுக்களும் வெளியேறிவிடும். இதனால் குடல் ஆரோக்கியம் காக்கப்படுவதுடன், தேங்கி கிடக்கும் கழிவுகளும் வெளியேறும்..












Click it and Unblock the Notifications