Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முருங்கை பவுடர்.. ஆச்சரியம் காட்டும் முருங்கை விதை.. முருங்கை பிசின் பவுடரா? அடடா இது தெரியாம போச்சே

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரம்ம விருட்சம் என்று சொல்லக்கூடிய முருங்கை மரத்தின் நன்மைகளை லிஸ்ட் போட்டு சொல்ல முடியாது... இலை, காய், பூ, பட்டை, பிசின், வேர் என அத்தனை பாகங்களுமே நன்மைகளை தரக்கூடியது. இவைகள் அத்தனையுமே பவுடர் வடிவில் கிடைக்கின்றன என்றாலும், இதன் பலன்களை அறிந்து கொள்வது அவசியம்.

முருங்கை பூக்களை எடுத்து கொண்டால், நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.. முருங்கைப் பூக்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலையில் கஷாயம் போல தயாரிக்கலாம். இதில், பனைவெல்லம் கலந்து குடித்து வந்தால் உடல் வலுவடைவதுடன், நரம்புகள் புத்துணர்வு பெறும்.

Do you know the Excellent Benefits of Drumstick Roots Powder and Moringa Leaves Powder is Super Food for all

முருங்கை விதைகள்: முருங்கை விதைகளை நன்றாக உலர்த்தி, பிறகு அதையும் பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும். இதில் தினமும் ஒரு ஸ்பூன் எடுத்து, பாலில் கலந்து ஒரு மண்டலம் அதாவது 48 நாள்களுக்குத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு குறையும்..

ஹீமோகுளோபின் பிரச்சனை தீரும்.. எலும்புகள் பலப்படும்... மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு ஏற்படும் ரத்த இழப்பை சரிசெய்யும்.. மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் தலைவலி, தசைப்பிடிப்பு போன்ற பிரச்சனைகளும் சீராகும்.

விந்தணுக்கள்: முருங்கை விதைகளை, நெய்யில் வறுத்து பொடித்து, பாலுடன் சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால், ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிப்பதுடன், விந்துவின் கெட்டித்தன்மையும் அதிகமாகும். அத்துடன் பலவீனமான நரம்புகள் பலப்படும்... இது குழந்தை பேறுக்கு வழிவகுக்கும்.

முருங்கையிலையை காயவைத்து, பொடி செய்து வைத்து கொள்ள வேண்டால், பல்வேறு பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைத்துவிடும். ஆண்டி ஆக்ஸிடண்டுகள் நிறைந்துள்ளதால், உடலிலுள்ள உயிரணுக்கள் சேதமாவது தடுக்கப்படுகிறது..

கல்லீரல்: நீரிழிவு, கார்டிவாஸ்குலர், இதய நோய், ஆர்த்தரிட்டிஸ், போன்ற ஆபத்துகளிலிருந்து இந்த இலைகள் பாதுகாக்கிறது. உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை கட்டுப்படுத்துவதுடன், சர்க்கரை மற்றும் கொழுப்பை குறைத்து, சர்க்கரை நோய் அறிகுறிகளில் இருந்து எளிதாக காப்பாற்றுகிறது. கல்லீரலின் செயல்பாட்டுக்கு முருங்கையிலையை போல வேறு சிறந்த மருந்து கிடையாது.

முருங்கை பிசின்களும் இதில் தவிர்க்க முடியாதது.. இந்த பிசினை காயவைத்து, பொடி செய்து வைத்து கொள்ளலாம்.. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, இந்த பொடியையும் அதில் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.. பிறகு, இரவு முழுவதும் குளிர விட்டுவிட வேண்டும்.. மறுநாள் காலையில் வடிகட்டி குடித்தால், உடலில் பலம் அதிகமாகும். அன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

முருங்கை பிசின்: அல்லது இந்த முருங்கை பிசின் பவுடரை, பாலில் சேர்த்து, அதனுடன் கற்கண்டும் சேர்த்து குடித்து வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.. உடலும் முகமும் பொலிவு பெறும்.

முருங்கையின் வேர்களை எடுத்து கொண்டால், வைட்டமின்கள், தாதுக்கள், பயோஆக்டிவ் கலவைகள், துத்தநாகம், இரும்பு போன்றவை நிறைந்துள்ளன.. இந்த முருங்கை வேரை பொடி செய்து வைத்து கொண்டு, கஷாயம் செய்து சாப்பிடலாம்.. அல்லது முருங்கை வேரை பொடி செய்து, சீரகம், சோம்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டியும் சாப்பிடுவார்கள். இந்த வேரின் சாறுடன், பால் சேர்த்து குடித்தால், உள்ளுறுப்புகள் பலம்பெறும்.. வயிற்றிலுள்ள பூச்சிகளும் வெளியேறிவிடும்

முருங்கை வேர்கள்: இந்த வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து, தினமும் 2 வேளை, 2 கிராம் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி குணமாகும்.. ஆக, முருங்கை மரத்தின் ஒவ்வொரு பாகமும், நமக்கு பயன்களை தரக்கூடியது.. எனினும், உள்ளுக்குள் மருந்தாக எடுத்து கொள்ளும்போது, மருத்துவர்களின் ஆலோசனையுடன் பயன்படுத்தினால் பாதுகாப்பும், உடல்நலனும் கிடைக்கும் கிடைக்கும்.

இந்த முருங்கை வேரை அனைவருமே பயன்படுத்தலாம்.. சிறிது வேர் எடுத்து, அதை சுத்தம் செய்து, தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து குடித்தாலே, உடலில் பலம் கூடும்.. நோய் எதிர்ப்பு சக்திகள் பெருகும்.. உடல்சோர்வும் நம்மை அண்டாது. இந்த முருங்கை வேரில் இருந்து, சாறு எடுத்து, அதை பசும்பாலுடன் சேர்த்து குடித்து வந்தால், காசநோயும் குணமாகும்....

ஆரோக்கியம்: நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த முருங்கை வேர் நன்மை பயக்கிறது.. இந்த வேரிலுள்ள சில முக்கிய சேர்மங்கள், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைப்பதில் பங்காற்றுகிறதாம்.. இப்படி பல அற்புதங்களை செய்யும் இந்த முருங்கை வேரினை, மருத்துவரின் முறையான ஆலோசனையை மருந்தாக எடுத்து கொண்டால், ஆரோக்கியம் பெருகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+